Wednesday, April 11, 2018

என்ன ஆச்சு ரஜினி ரசிகர்களுக்கு?


இந்த பதிவு எழுதலாமா? வேண்டாமா? என்று ஒரு வாரம் யோசித்துவிட்டு தான் எழுதுகிறேன்.


                                 


2007 ஆம் ஆண்டு ரஜினியின் சிவாஜி படம் ரிலீஸ் ஆகும் தருணம். ரஜினியும், ஷங்கரும் இணையும் முதல் படம். பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தில் இருக்கிறார்கள். அதிரடிக்காரன் பாடலுக்கு ரஜினி எப்படி ஆடி இருப்பார். அதனைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி எனக்கு பல நாட்கள் தூக்கம் கூட தொலைந்தது. அந்த நேரத்தில் ஒரு சோகமான செய்தி வந்தது. அரக்கோணம் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனக்கு ஒரே ஆச்சிரியம். ரசிகர்கள் பலர் உலகமே அழிந்தாலும் அது சிவாஜி படம் பார்த்துவிட்டு அழியட்டும் என்கின்ற மனநிலையில் இருக்கும்போது, மிக பெரிய ரஜினி ரசிகரான அவர், எதனால் அவ்வாறு செய்தார் என்று எனக்கு அப்பொழுது புரியவில்லை. படத்தை பார்த்துவிட்டாவது இறந்து இருக்கலாமே என்று எண்ணினேன்.

ஆனால், அதன் பிறகுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. என்னதான் நாம் ரஜினி ரசிகராக இருந்தாலும், பார்ப்பவர்கள் அனைவருக்கும் நாம் ரஜினிக்காக உயிர் கொடுக்கும் பைத்தியங்கள் என்று தோன்றினாலும், நம் குடும்பத்திற்கு அல்லது நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் , அதற்கு தான் முன்னரிமை அளிப்போம். எனக்கு இந்த வாரம் திங்கள் அன்று ஒரு பரிட்சை இருந்தது. என்னை அறியாமல் நான் என்னுடைய பதிவுகளைக் குறைத்துக் கொண்டேன். அனைவருமே அவ்வாறுதான்.

இந்த நிகழ்ச்சிகளை நான் குறிப்பிடுவதற்கு காரணம், ரஜினி முன் வைக்கும் அரசியல்தான். அவரைப் பொறுத்தவரை ரஜினி ரசிகர் மையத்தில் பதவியில் நியமிக்கப்பட்டவர்களும் சரி!! உறுப்பினர்களும் சரி!!! பகுதி நேரமாக இயங்கினால் போதும், ஏனென்றால், அது ஊதியம் பெறாமல் உழைக்கும் ஒரு பதவி மற்றும் தொண்டு. நாம் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு, மீதி இருக்கும் நேரத்தில் மன்றத்திற்கு தொண்டாற்றினால் போதுமானது. ஆனால் அரசு பதவி( MLA, MP போன்றவை) வகிப்பவர்கள் முழு நேரமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், அவற்றுக்கு ஊதியம் தரப்படுகிறது. கட்சி பதவி பகுதி நேரம், அரசு பதவி முழு நேரம். இது தான் ரஜினி முன் வைக்கும் அரசியல்.

இப்படி ரஜினியின் கருத்து இருக்கும்போது, நம் ரசிகர்களிடம் கட்சி பதிவிக்காக சில சண்டைகள் நேர்வதை, நான் சில பதிவுகளில் பார்த்தேன். ரஜினி கூறியது போல, " ரஜினி ரசிகர் மன்றத்தில் பதவி என்பது கூடுதல் சுமை தானே ஒழிய வேறு ஒன்றுமில்லை.நாம், இதுநாள் வரை ரஜினி அரசியலுக்கு வந்தால் போதும் என்று கூறிக் கொண்டு இருந்தோம். இந்த வயதிலும், ரசிகர்களைக் காப்பாற்ற வேண்டும், தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும், தலைவன் இல்லாமல் தவிக்கும் நம் தமிழகத்திற்கு நல்ல தலைவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி ரஜினி அரசியலுக்கு வருகிறார். நாம் இந்த மாதிரி சிற்சில சண்டைகள் மூலம், அவருக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்த வேண்டாம். நாம் ஒன்று இணைவது ரஜினியை நம்பிதானே தவிர, அவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை நம்பி அல்ல. அதனை மனதில் கொள்ள வேண்டும்.

ரசிகர் மன்றத்திற்கு எவ்வளவோ, தொண்டாற்றி உள்ள எனக்கு இதுநாள் வரை ரசிகர் மன்ற டிக்கெட் கிடைத்தது இல்லை. எத்தனையோ முறை தலைவரிடம் புகைப்படம் எடுக்க பல பேரிடம் மன்றாடி உள்ளேன். ஆனால் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.நான் எத்தனையோ ரஜினி பற்றி பதிவுகள் எழுதி உள்ளேன். அதனை கொஞ்சம் ஷேர்செய்யுமாறு rajinifans facebook பேஜ்-இல் பலமுறை கேட்டு உள்ளேன். அவர்கள் ஷேர் செய்தது கிடையாது. ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை செய்யவேண்டும் என்று சொன்னவுடன், கண்டிப்பாக நம்மிடம் உறுப்பினர் படிவம் எல்லாம் கொடுக்கமாட்டார்கள் என்று எண்ணி, வார இறுதி நாட்களில், என்னுடைய, சொந்தக்காரர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு நானே நேரில் சென்று, அவர்களிடம் ரஜினி வெற்றி பெற வேண்டிய அவசியத்தைக் கூறி, என்னுடைய மடிகணினியில் அவர்களை உறுப்பினராக பதிவு செய்தேன். நான் யாருக்காகவும், எதற்காகவும் காத்து இருக்கவில்லை. மன்றத்தில் பதவியில் இருப்பவர்கள் சேர்ந்து வேலை செய்ய வாய்ப்பு கொடுத்தால், சேர்ந்து பணியாற்றுவேன். இல்லையேல் ரஜினிக்காக என்னால் முடிந்தவரை தனியாக பணியாற்றுவேன்.

அதனால் யாருக்காகவும், எதற்காகவும் காத்திராமல், எந்த பதவியையும் எதிர்பாராமல், ரஜினி என்ற ஒற்றை நல்ல மனிதனுக்காக நம் சேவையை செய்வோம். மாறாக, மக்கள் மன்றத்தில் உள்ளவர்களும், ரஜினி அளவிற்கு பெருந்தன்மையாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் நம்பினால் பல சமயம் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் ரஜினியால் பதவியில் நியமியக்கபட்டவர்கள், ரசிகர்களுக்கு வேண்டுமானால் துரோகம் செய்யலாம், ஆனால் கண்டிப்பாக ரஜினிக்கு செய்யமாட்டார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே, நாம் அனைவரும் ரஜினிக்கு மட்டுமே என்றென்றும் காவலர்கள். நம் பிரச்சனைகளை மறந்துவிட்டு, முடிந்தால் கூட்டாக, இல்லேயேல் தனியாக நின்று ரஜினியை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...