Wednesday, April 11, 2018

சத்தியராஜ் என்னும் மானத்(??) தமிழன்



2008 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மற்றும் தமிழக நலனுக்குக்காக பல நன்மைகள் செய்து முடித்து(??) வாழ்ந்து வருகின்ற சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள், ரஜினியை மேடையில் வைத்து கொண்டு, அவரை எந்த அளவிற்கு அவமான படுத்தினார்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். இதனால் கடும் மன உளைச்சலில் பேச வந்த ரஜினி, தன்னையும் அறியாமல் கன்னட அமைப்பினரைப் பார்த்து கோடாரியால் வெட்ட வேண்டும் என்று கூறிவிட்டார். நான் சிறு வயதில் இருந்து பார்த்தவரை ரஜினி இந்த அளவிற்கு உணைர்ச்சி மிகுதியால் பேசியது இல்லை.
 
                                             


இதனால், ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் சில மாதங்களில் வெளிவந்த குசேலன் படத்தை, ரஜினி மன்னிப்பு கேட்டால்தான் திரையிடுவோம் என்று கூறினர். எனக்கு மேடை அனுபவம் இல்லாததால், சில தகாத வார்த்தைகளை கூறிவிட்டேன் , அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று ரஜினி கூறினார். ஒக்கனேக்கல் பிரச்சைனையிலோ அல்லது காவிரி பிரச்சனையிலோ தான் தமிழகத்தை ஆதரிப்பது தவறு என்று அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்களை கோடாரியால் வெட்டுவேன் என்று கூறியதற்குதான் மன்னிப்பு கேட்டார்.

அப்பொழுது சத்யராஜ், "தனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று கூறினார். இவன்தான்டா தமிழன் என்று கொடி தூக்க ஆரம்பித்தார்கள். அவர் அப்படி கூறியதற்கு இன்னொரு முக்கிய காரணம், அவர் படம் தமிழ்நாட்டிலே ஓடாது. கர்நாடகாவிலா ஓடப் போகிறது என்கின்ற தைரியம் தான்.

அவர் நினைத்தது போலவே, 2008 முதல் 2017 வரை, சத்யராஜ் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கன்னட அமைப்பினர் கண்டு கொள்ளவே இல்லை., ஏன் ? தமிழ்நாட்டிலே அவர் படம் வந்ததா ?? என்று கூட நமக்கே தெரியாது. ஷாருக் கானுடன் அவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படமும், ஷாருக் திரையுலக வரலாற்றில் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த நேரத்தில் 2015 ஆம் ஆண்டு பாஹுபலி வருகிறது. அந்த படத்தையும் கன்னட அமைப்பினர் கண்டு கொள்ளவில்லை. அந்த படம் அடைந்த இமாலய வெற்றியைப் பார்த்து, பாஹுபலி 2 படம் நிச்சயமாக வெற்றி பெரும். சத்யராஜ் மட்டும் தனியாக நடித்து ஒரு படம் கர்நாடகாவில் வெற்றி வர இந்த ஜென்மத்தில் வர வாய்ப்பு இல்லை என்று நம்பிய கன்னட அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நம்ம படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பா என்று மனதிற்குள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாலும், வெளியே வீர தமிழன் போல் பேசி வந்தார். பிறகு, வேறு வழியே இல்லாமல், கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டுவிட்டு, வருத்தம் தான் தெரிவித்தேன் என்று மீசையில் மண் ஒட்டாதது போல் பேசினார்.

அதாவது அவர் பேசி 10 வருடம் கழித்து, ஒரு படத்திற்கு மன்னிப்பு கேட்க வைத்தனர். இதுவே, அவருக்கு மிக பெரிய அவமானம். அதுவும் தான் நாயகனாக நடிக்காத ஒரு படத்திற்கு. இதில் இவர் இராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டாராம். போன் வொயரு பிஞ்சி பல வருஷம் ஆச்சு சத்யராஜ் சார் !!!

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...