Thursday, April 12, 2018

ரஜினி பாஜகவின் கைக்கூலியா? ஒரு ரசிகனின் பதில்


1990-களின் தொடக்கத்தில், ரஜினி ஒரு காங்கிரஸ் ஆதரவாளராகவே பார்க்கப்பட்டார். அதற்கு காரணம் மூப்பனார் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரிடம் கொண்டு இருந்த நட்பு தான். 1996- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மூப்பனார் அவர்களை, முதல்வர் வேட்பாளராக நிற்குமாறு வலியுறித்தினார். அவர் மறுத்ததால் திமுக - தா .ம. க கூட்டணியை ஆதரித்தார். பின்பு நடந்த 1998 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் திமுக - தா .ம. க கூட்டணியை ஆதரித்தார். தனது ரசிகர்களையும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். 1998 ஆண்டு தான் கடைசியாக ரஜினி தன்னுடைய ரசிகனை இன்னொரு கட்சிக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக்கொண்ட கடைசி முறை.

                                   2004-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, வாஜ்பாய் அவர்கள் இந்திய அளவில் நல்லாட்சி வழுங்குவதாகவும் (இதில் தமிழ்நாட்டு மக்களுக்கு மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறன்), எனவே என்னுடைய ஓட்டு வாஜ்பாய் அவர்களுக்குத்தான் என்று கூறினார். நான் வாஜ்பாய் அவர்களுக்கு ஒட்டு போடுகிறேன் என்பதற்காக எனது ரசிகர்கள் அவருக்கு ஓட்டு போட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப ஓட்டு போடலாம் என்று கூறினார்.

பிறகு 2014- ஆம் ஆண்டு வரை, அவர் எந்த ஒரு தேர்தல் நிகழ்விலும் பங்கு ஏற்கவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்கள் அமைதியாக இருந்தார். ஆனால் இடைப்பட்ட காலத்தில், அனைத்து கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் அவரை சந்திப்பது வழக்கம். இப்படி இருக்கையில், 2014 ஆம் ஆண்டு, மோடி அவர்கள் ரஜினி அவர்களைத் தன் இல்லத்தில் சந்திக்கிறார். வெளியே வந்த ரஜினி, செய்தியாளர்களிடம் பேசும்போது, பா.ஜ.க விற்கு ஒட்டு போடுமாறு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை பற்றியும் கூறவில்லை. ரஜினி அவர்கள் இது நாள்வரை , கலைஞர், ஜெயலலிதா, நரசிம்மராவ் உள்ளிட்டோரைதான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறாரே தவிர, பா.ஜ.க தலைவர்கள் யாரையும் அவர் நேரில் சென்று சந்தித்தது இல்லை.(மற்ற சில நடிகர்கள் 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது, மோடியை கோவை சென்று நேரில் சந்தித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்).

அதாவது அவர் கடைசியாக தன் ரசிகர்களை ஓட்டு போட சொன்னது, திமுக மற்றும் தா.ம.க கட்சிகளுக்கு தான். அவர் இது நாள் வரை பா.ஜ.க விற்கு ஓட்டு போடுமாறு தனது ரசிகர்களைக் கேட்டு கொண்டது இல்லை. அவர் இந்து கடவுளை வழிபடுகிறார் என்கின்ற ஒரே காரணத்திற்காக, அவர் பா.ஜ.க ஆதரவாளர் என்றால், அவர்கள் மனநிலையில் பிரச்சனை உள்ளது என்பது தவிர வேறு என்ன கூற முடியும். இனிமேலாவது, அவர் பா.ஜ.க வின் ஆதரவாளன் என்கின்ற கருத்தைப் பரப்புவதை நடுநிலையாளர்கள் நிறுத்த வேண்டும். ரஜினி அவர்கள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர்.

இப்படிக்கு,
அருள்செல்வன்,

Wednesday, April 11, 2018

நடுநிலையாளர்கள் ரஜினியை ஏன் ஆதரிக்க வேண்டும்

விஜயகாந்த், ரஜினியைப் பற்றி சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம் மிகவும் கடுமையாக விமர்சித்து வந்து இருக்கிறார். நரசிம்மா என்ற மகா உன்னதமான காவியத்தில் , ரஜினியை விமர்சித்து இப்படி ஒரு வசனம் வைத்து இருப்பார். " நான் இப்போ, வருவேன், அப்போ வருவேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வரணும்னு முடிவு எடுத்தா உடனே வருவேன்". அந்த படம் அடைந்த இமாலய தோல்வி, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையின் முடிவிற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

                                      
அதன் பிறகு, நெய்வேலி போராட்டத்தின் போது, நெய்வேலில போராட்டம் பண்ணா தண்ணி வருமான்னு ஒருத்தர் கேட்குறாரு!!! உண்ணாவிரதம் இருந்தா மட்டும் தண்ணி வருமா?? அப்படி என்று பேசினார். அவர் அப்படி கூறியதும், அவர் பக்கத்தில் உள்ள குண்டு கல்யாணம் உள்ளிட்ட அல்லக்கைகள், ரஜினியை கிண்டல் செய்யும் விதத்தில் கைதட்டி குதூகலித்தனர். அப்பொழுது, விஜயகாந்த் மீது எனக்கு மிக பெரிய கோபம் ஏற்பட்டது.

அவர் 2005 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அவருக்குதான் நான் வாக்களித்தேன். விஜயகாந்த் மீது எனக்கு கோபம் இருந்தாலும், அதனை விட பெரிய கோபம் திமுக மற்றும் அதிமுக அவர்களின் மீது தான். அவர்களை ஆட்சிக்கு வரவிட கூடாது என்கின்ற நியாயமான கோபம் எல்லாரையும் போல் எனக்கும் இருந்தது. அதனால், அவர் தலைவர் ரஜினியைப் பற்றி பேசியதை எல்லாம் மறந்து அவருக்கு வாக்கு அளித்தேன். எனக்கு அப்போதைய பெரிய தேவை மாற்றம் ஒன்று தான். விஜயகாந்தை பொறுத்தவரை நான் அப்பொழுது நடுநிலையாளன்தான். அதன் பிறகு அவர் செய்த கோமாளித்தனங்களைப் பார்த்து, அவருக்கு வாக்களிப்பதை நிறுத்தினேன்.

இதேபோல் தான் விஜயகாந்தை விட பலமடங்கு செல்வாக்கு பெற்ற ரஜினி தற்பொழுது கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். நடுநிலையாளர்கள் பலர் அவர்மீது சிற்சில விமர்சங்கள் வைக்கின்றனர். அதற்கு ரஜினி தரப்பில் இருந்தும், ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்தும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறி கொள்வது ஒன்றே ஒன்று தான், நீங்கள் ரஜினியைப் பற்றி வைக்கும் விமர்சனங்கள் அனைத்திலும் துளி கூட உண்மை இல்லை. நீங்கள் அதனை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் ரஜினியின் மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீங்கள் மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

கண்டிப்பாக ரஜினியின் வாக்கு வங்கி என்பது திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று என்று முன்வைக்கின்ற மற்ற அரசியல்வாதிகளை விட மிக அதிகமாக இருக்கும். இதனை நாம் சென்ற தேர்தலில் கண்கூட பார்த்து இருக்கின்றோம். இனவெறி, ஜாதிவெறி கொண்ட அவர்களால் இன்னும் 10 ஜென்மம் எடுத்தாலும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக நிச்சயமாக வர முடியாது. அதனால், நடுநிலையாளர்கள் அனைவரும் ரஜினிக்கு வாக்களித்து, ரஜினியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அப்படி நீங்கள் நினைத்த மாதிரி அவர் செயல்படவில்லையென்றால், அவரே மூன்று வருடங்களில், அவர் கூறியது போல் ராஜினாமா செய்வார். இல்லையென்றால், நீங்கள் அவரை ஓட்டு என்கின்ற ஆயுதத்தின் மூலம் மறுபடியும் நிராகரிக்கலாம். மாறாக, நீங்கள் இந்த முறை ரஜினிக்கு வாக்களிக்கத் தவறினால், இன்னும் 100 வருடங்களுக்கு திமுக மற்றும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

விஜயகாந்த், ரஜினியைப் பற்றி சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம் மிகவும் கடுமையாக விமர்சித்து வந்து இருக்கிறார். நரசிம்மா என்ற மகா உன்னதமான காவியத்தில் , ரஜினியை விமர்சித்து இப்படி ஒரு வசனம் வைத்து இருப்பார். " நான் இப்போ, வருவேன், அப்போ வருவேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வரணும்னு முடிவு எடுத்தா உடனே வருவேன்". அந்த படம் அடைந்த இமாலய தோல்வி, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையின் முடிவிற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

அதன் பிறகு, நெய்வேலி போராட்டத்தின் போது, நெய்வேலில போராட்டம் பண்ணா தண்ணி வருமான்னு ஒருத்தர் கேட்குறாரு!!! உண்ணாவிரதம் இருந்தா மட்டும் தண்ணி வருமா?? அப்படி என்று பேசினார். அவர் அப்படி கூறியதும், அவர் பக்கத்தில் உள்ள குண்டு கல்யாணம் உள்ளிட்ட அல்லக்கைகள், ரஜினியை கிண்டல் செய்யும் விதத்தில் கைதட்டி குதூகலித்தனர். அப்பொழுது, விஜயகாந்த் மீது எனக்கு மிக பெரிய கோபம் ஏற்பட்டது.

அவர் 2005 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அவருக்குதான் நான் வாக்களித்தேன். விஜயகாந்த் மீது எனக்கு கோபம் இருந்தாலும், அதனை விட பெரிய கோபம் திமுக மற்றும் அதிமுக அவர்களின் மீது தான். அவர்களை ஆட்சிக்கு வரவிட கூடாது என்கின்ற நியாயமான கோபம் எல்லாரையும் போல் எனக்கும் இருந்தது. அதனால், அவர் தலைவர் ரஜினியைப் பற்றி பேசியதை எல்லாம் மறந்து அவருக்கு வாக்கு அளித்தேன். எனக்கு அப்போதைய பெரிய தேவை மாற்றம் ஒன்று தான். விஜயகாந்தை பொறுத்தவரை நான் அப்பொழுது நடுநிலையாளன்தான். அதன் பிறகு அவர் செய்த கோமாளித்தனங்களைப் பார்த்து, அவருக்கு வாக்களிப்பதை நிறுத்தினேன்.

இதேபோல் தான் விஜயகாந்தை விட பலமடங்கு செல்வாக்கு பெற்ற ரஜினி தற்பொழுது கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். நடுநிலையாளர்கள் பலர் அவர்மீது சிற்சில விமர்சங்கள் வைக்கின்றனர். அதற்கு ரஜினி தரப்பில் இருந்தும், ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்தும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறி கொள்வது ஒன்றே ஒன்று தான், நீங்கள் ரஜினியைப் பற்றி வைக்கும் விமர்சனங்கள் அனைத்திலும் துளி கூட உண்மை இல்லை. நீங்கள் அதனை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் ரஜினியின் மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீங்கள் மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

கண்டிப்பாக ரஜினியின் வாக்கு வங்கி என்பது திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று என்று முன்வைக்கின்ற மற்ற அரசியல்வாதிகளை விட மிக அதிகமாக இருக்கும். இதனை நாம் சென்ற தேர்தலில் கண்கூட பார்த்து இருக்கின்றோம். இனவெறி, ஜாதிவெறி கொண்ட அவர்களால் இன்னும் 10 ஜென்மம் எடுத்தாலும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக நிச்சயமாக வர முடியாது. அதனால், நடுநிலையாளர்கள் அனைவரும் ரஜினிக்கு வாக்களித்து, ரஜினியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அப்படி நீங்கள் நினைத்த மாதிரி அவர் செயல்படவில்லையென்றால், அவரே மூன்று வருடங்களில், அவர் கூறியது போல் ராஜினாமா செய்வார். இல்லையென்றால், நீங்கள் அவரை ஓட்டு என்கின்ற ஆயுதத்தின் மூலம் மறுபடியும் நிராகரிக்கலாம். மாறாக, நீங்கள் இந்த முறை ரஜினிக்கு வாக்களிக்கத் தவறினால், இன்னும் 100 வருடங்களுக்கு திமுக மற்றும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

சத்தியராஜ் என்னும் மானத்(??) தமிழன்2008 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மற்றும் தமிழக நலனுக்குக்காக பல நன்மைகள் செய்து முடித்து(??) வாழ்ந்து வருகின்ற சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள், ரஜினியை மேடையில் வைத்து கொண்டு, அவரை எந்த அளவிற்கு அவமான படுத்தினார்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். இதனால் கடும் மன உளைச்சலில் பேச வந்த ரஜினி, தன்னையும் அறியாமல் கன்னட அமைப்பினரைப் பார்த்து கோடாரியால் வெட்ட வேண்டும் என்று கூறிவிட்டார். நான் சிறு வயதில் இருந்து பார்த்தவரை ரஜினி இந்த அளவிற்கு உணைர்ச்சி மிகுதியால் பேசியது இல்லை.
 
                                             


இதனால், ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் சில மாதங்களில் வெளிவந்த குசேலன் படத்தை, ரஜினி மன்னிப்பு கேட்டால்தான் திரையிடுவோம் என்று கூறினர். எனக்கு மேடை அனுபவம் இல்லாததால், சில தகாத வார்த்தைகளை கூறிவிட்டேன் , அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று ரஜினி கூறினார். ஒக்கனேக்கல் பிரச்சைனையிலோ அல்லது காவிரி பிரச்சனையிலோ தான் தமிழகத்தை ஆதரிப்பது தவறு என்று அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்களை கோடாரியால் வெட்டுவேன் என்று கூறியதற்குதான் மன்னிப்பு கேட்டார்.

அப்பொழுது சத்யராஜ், "தனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று கூறினார். இவன்தான்டா தமிழன் என்று கொடி தூக்க ஆரம்பித்தார்கள். அவர் அப்படி கூறியதற்கு இன்னொரு முக்கிய காரணம், அவர் படம் தமிழ்நாட்டிலே ஓடாது. கர்நாடகாவிலா ஓடப் போகிறது என்கின்ற தைரியம் தான்.

அவர் நினைத்தது போலவே, 2008 முதல் 2017 வரை, சத்யராஜ் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கன்னட அமைப்பினர் கண்டு கொள்ளவே இல்லை., ஏன் ? தமிழ்நாட்டிலே அவர் படம் வந்ததா ?? என்று கூட நமக்கே தெரியாது. ஷாருக் கானுடன் அவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படமும், ஷாருக் திரையுலக வரலாற்றில் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த நேரத்தில் 2015 ஆம் ஆண்டு பாஹுபலி வருகிறது. அந்த படத்தையும் கன்னட அமைப்பினர் கண்டு கொள்ளவில்லை. அந்த படம் அடைந்த இமாலய வெற்றியைப் பார்த்து, பாஹுபலி 2 படம் நிச்சயமாக வெற்றி பெரும். சத்யராஜ் மட்டும் தனியாக நடித்து ஒரு படம் கர்நாடகாவில் வெற்றி வர இந்த ஜென்மத்தில் வர வாய்ப்பு இல்லை என்று நம்பிய கன்னட அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நம்ம படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பா என்று மனதிற்குள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாலும், வெளியே வீர தமிழன் போல் பேசி வந்தார். பிறகு, வேறு வழியே இல்லாமல், கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டுவிட்டு, வருத்தம் தான் தெரிவித்தேன் என்று மீசையில் மண் ஒட்டாதது போல் பேசினார்.

அதாவது அவர் பேசி 10 வருடம் கழித்து, ஒரு படத்திற்கு மன்னிப்பு கேட்க வைத்தனர். இதுவே, அவருக்கு மிக பெரிய அவமானம். அதுவும் தான் நாயகனாக நடிக்காத ஒரு படத்திற்கு. இதில் இவர் இராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டாராம். போன் வொயரு பிஞ்சி பல வருஷம் ஆச்சு சத்யராஜ் சார் !!!

ரஜினி என்னும் தலைவன்ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று !!! அவரை முதல்வர் ஆக்கும் மிக பெரிய கடமை நம்மிடம் உள்ளது. இனியும் ரஜினியை நடிகனாக முன்னுறுத்தி பயன் இல்லை. அவரை தலைவராக முன்னிறுத்த வேண்டிய நேரம் வந்தாயிற்று!!! 
 
                                 


எம்.ஜி.ஆரின் மிக பெரிய வெற்றிக்கு காரணம், அவரும் சரி, அவரது ரசிகர்கர்களும் சரி. எம்.ஜி.ஆரை நம் சமகாலத்து அரசியல் கட்சி தலைவரான கலைஞரை விட மிக பெரிய தலைவராக காட்ட விரும்பினார்களே தவிர, அண்ணா, பெரியார், காமராஜர் போன்றவர்களை விட பெரிய தலைவராக காட்ட விரும்பவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம், எம்,ஜிஆர் தன்னுடைய தலைவராக அண்ணா அவர்ளை ஏற்றுக்கொண்டது கூட இருக்கலாம். ரஜினியை பொறுத்தவரை , ரஜினி நிச்சயமாக தன்னுடைய அரசியல் தலைவராக யாரையும் அறிவிக்க மாட்டார். எல்லா தலைவர்களிடமும் உள்ள, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்படுவார்.இதனைத்தான் ஜெயலலிதாவின் ஆளுமை, கலைஞரின் தன்னம்பிக்கை , எம்.ஜி.ஆரின் ஏழைகளுக்கான ஆட்சி, ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாக எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கூறினார்.

ஆனால் பல ரசிகர்கள் என்ன செய்கின்றனர்?? ரஜினியை பெரியார், அண்ணா ,ஜெயலலிதா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களை விட மிக பெரியவராக காட்ட முயல்கின்றனர். இது மிக பெரிய தவறு. மிக பெரிய ஆபத்தை உண்டாக்கும். ரஜினியை ஸ்டாலின்,கமல் ,OPS ,EPS ,அன்புமணி, சீமான் போன்ற சமகாலத் தலைவர்களை விட பெரிய தலைவர் என்பதை தான் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதைத் தான் அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ரஜினியே தற்பொழுது தான் தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக தெளிவாக கூறியுள்ளார். அதேபோல், சமகால அரசியல் தவறுகள் மற்றும் திட்டங்களை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும் .மாறாக, அண்ணா, எம்,ஜிஆர், பெரியார், கலைஞர்,ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளையும் அவர்களின் திட்டங்களையும் விமர்சனம் செய்வது, அவர்களை நேசிக்கும் தொண்டர்களிடம், ரஜினி மீது வெறுப்பை உண்டாக்கலாம்.

அண்ணா,பெரியார் போன்றவர்கள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சொந்தமான பெரிய தலைவர்கள். அவர்களை பற்றி தவறாக பேசினால், பெருவாரியான மக்களுக்கு நம் மீது வெறுப்பு ஏற்படலாம். அதேபோல் கலைஞர், திமுகவினர் நேசிக்கும் ஒரு பெரிய தலைவர். திமுகவினர் பலர் ஸ்டாலின் மீது தற்பொழுது கோபமாக உள்ளனர். அதனை தான் நாம் பயன்படுத்த வேண்டும். மாறாக, இந்த நேரத்தில் கலைஞரை பற்றி நாம் தவறாக பேசினால், அவர்களுக்கு ரஜினி மீது வெறுப்பு ஏற்படலாம். அதேபோல் தான் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா. அதிமுகவினருக்கு தற்பொழுது OPS மற்றும் EPS மீது வெறுப்பு உள்ளது. அதனை தான் நாம் பயன்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நாம் விமர்சனம் செய்தால், அதிகவினருக்கும் ரஜினி மீது வெறுப்பு ஏற்படலாம்.

இதையே தான் ரஜினியை ஆதரித்து தொலைக்காட்சிகளில் பேசும் பலர் செய்கின்றனர். தலைமை என்னதான் விளக்கம் கொடுத்தாலும், ரஜினியை ஆதரித்து தொலைக்காட்சிகளில் பேசுபவர்களின் கருத்துக்களை ரஜினியின் கருத்தாக நம்ப பல பேர் இருக்கின்றனர். ரஜினியை ஆதரித்து பேசுகிறேன் என்ற போர்வையில் பாஜகவை சேர்ந்த சிலர் பெரியார், அண்ணா,கலைஞர் ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். நான், மனது விட்டு சொல்கிறேன். குறிப்பாக ஒரு அமைப்பை சார்ந்த ஒருவர்( (பெயர் சொல்ல விரும்பவில்லை) , ரஜினியை ஆதரித்து பேசும் ஒவ்வொரு விவாத நிகழ்ச்சியிலும் நாம் சில ஓட்டுக்களை இழக்கின்றோம். இதனைத்தடுக்க தலைமை சார்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேச மிக சிறந்த அறிஞர்களை கூடிய விரைவில் தேர்வு செய்து ரஜினி அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு சமகால அரசியல் தலைவர்கள் மற்றும் சம்பவங்களை மட்டும் குறிப்பிட்டு பேச அறிவுறுத்தப்பட வேண்டும்.

இதனால் பெரியார், அண்ணா,ஜெயலலிதா,கலைஞர், எம்.ஜி,ஆர் போன்றவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா?? என்று கேட்பது எனக்கு புரிகிறது. கண்டிப்பா கிடையாது தான். தற்பொழுதைய நிலையில் நாம் ரஜினியை வெற்றிபெற செய்வது தான் முக்கியம். நாம் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எண்ணினால் , மாற்றம் செய்யக் கூடிய அதிகாரம் நம்மிடம் இருக்க வேண்டும். இப்போதைக்கு, அர்ஜுனன் அம்புக்கு தெரிந்த கிளியை போல, ரசிகர்களாகிய நமக்கு வெற்றி மட்டுமே கண்ணுக்கு தெரிய வேண்டும்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

என்ன ஆச்சு ரஜினி ரசிகர்களுக்கு?


இந்த பதிவு எழுதலாமா? வேண்டாமா? என்று ஒரு வாரம் யோசித்துவிட்டு தான் எழுதுகிறேன்.


                                 


2007 ஆம் ஆண்டு ரஜினியின் சிவாஜி படம் ரிலீஸ் ஆகும் தருணம். ரஜினியும், ஷங்கரும் இணையும் முதல் படம். பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தில் இருக்கிறார்கள். அதிரடிக்காரன் பாடலுக்கு ரஜினி எப்படி ஆடி இருப்பார். அதனைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி எனக்கு பல நாட்கள் தூக்கம் கூட தொலைந்தது. அந்த நேரத்தில் ஒரு சோகமான செய்தி வந்தது. அரக்கோணம் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனக்கு ஒரே ஆச்சிரியம். ரசிகர்கள் பலர் உலகமே அழிந்தாலும் அது சிவாஜி படம் பார்த்துவிட்டு அழியட்டும் என்கின்ற மனநிலையில் இருக்கும்போது, மிக பெரிய ரஜினி ரசிகரான அவர், எதனால் அவ்வாறு செய்தார் என்று எனக்கு அப்பொழுது புரியவில்லை. படத்தை பார்த்துவிட்டாவது இறந்து இருக்கலாமே என்று எண்ணினேன்.

ஆனால், அதன் பிறகுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. என்னதான் நாம் ரஜினி ரசிகராக இருந்தாலும், பார்ப்பவர்கள் அனைவருக்கும் நாம் ரஜினிக்காக உயிர் கொடுக்கும் பைத்தியங்கள் என்று தோன்றினாலும், நம் குடும்பத்திற்கு அல்லது நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் , அதற்கு தான் முன்னரிமை அளிப்போம். எனக்கு இந்த வாரம் திங்கள் அன்று ஒரு பரிட்சை இருந்தது. என்னை அறியாமல் நான் என்னுடைய பதிவுகளைக் குறைத்துக் கொண்டேன். அனைவருமே அவ்வாறுதான்.

இந்த நிகழ்ச்சிகளை நான் குறிப்பிடுவதற்கு காரணம், ரஜினி முன் வைக்கும் அரசியல்தான். அவரைப் பொறுத்தவரை ரஜினி ரசிகர் மையத்தில் பதவியில் நியமிக்கப்பட்டவர்களும் சரி!! உறுப்பினர்களும் சரி!!! பகுதி நேரமாக இயங்கினால் போதும், ஏனென்றால், அது ஊதியம் பெறாமல் உழைக்கும் ஒரு பதவி மற்றும் தொண்டு. நாம் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு, மீதி இருக்கும் நேரத்தில் மன்றத்திற்கு தொண்டாற்றினால் போதுமானது. ஆனால் அரசு பதவி( MLA, MP போன்றவை) வகிப்பவர்கள் முழு நேரமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், அவற்றுக்கு ஊதியம் தரப்படுகிறது. கட்சி பதவி பகுதி நேரம், அரசு பதவி முழு நேரம். இது தான் ரஜினி முன் வைக்கும் அரசியல்.

இப்படி ரஜினியின் கருத்து இருக்கும்போது, நம் ரசிகர்களிடம் கட்சி பதிவிக்காக சில சண்டைகள் நேர்வதை, நான் சில பதிவுகளில் பார்த்தேன். ரஜினி கூறியது போல, " ரஜினி ரசிகர் மன்றத்தில் பதவி என்பது கூடுதல் சுமை தானே ஒழிய வேறு ஒன்றுமில்லை.நாம், இதுநாள் வரை ரஜினி அரசியலுக்கு வந்தால் போதும் என்று கூறிக் கொண்டு இருந்தோம். இந்த வயதிலும், ரசிகர்களைக் காப்பாற்ற வேண்டும், தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும், தலைவன் இல்லாமல் தவிக்கும் நம் தமிழகத்திற்கு நல்ல தலைவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி ரஜினி அரசியலுக்கு வருகிறார். நாம் இந்த மாதிரி சிற்சில சண்டைகள் மூலம், அவருக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்த வேண்டாம். நாம் ஒன்று இணைவது ரஜினியை நம்பிதானே தவிர, அவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை நம்பி அல்ல. அதனை மனதில் கொள்ள வேண்டும்.

ரசிகர் மன்றத்திற்கு எவ்வளவோ, தொண்டாற்றி உள்ள எனக்கு இதுநாள் வரை ரசிகர் மன்ற டிக்கெட் கிடைத்தது இல்லை. எத்தனையோ முறை தலைவரிடம் புகைப்படம் எடுக்க பல பேரிடம் மன்றாடி உள்ளேன். ஆனால் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.நான் எத்தனையோ ரஜினி பற்றி பதிவுகள் எழுதி உள்ளேன். அதனை கொஞ்சம் ஷேர்செய்யுமாறு rajinifans facebook பேஜ்-இல் பலமுறை கேட்டு உள்ளேன். அவர்கள் ஷேர் செய்தது கிடையாது. ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை செய்யவேண்டும் என்று சொன்னவுடன், கண்டிப்பாக நம்மிடம் உறுப்பினர் படிவம் எல்லாம் கொடுக்கமாட்டார்கள் என்று எண்ணி, வார இறுதி நாட்களில், என்னுடைய, சொந்தக்காரர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு நானே நேரில் சென்று, அவர்களிடம் ரஜினி வெற்றி பெற வேண்டிய அவசியத்தைக் கூறி, என்னுடைய மடிகணினியில் அவர்களை உறுப்பினராக பதிவு செய்தேன். நான் யாருக்காகவும், எதற்காகவும் காத்து இருக்கவில்லை. மன்றத்தில் பதவியில் இருப்பவர்கள் சேர்ந்து வேலை செய்ய வாய்ப்பு கொடுத்தால், சேர்ந்து பணியாற்றுவேன். இல்லையேல் ரஜினிக்காக என்னால் முடிந்தவரை தனியாக பணியாற்றுவேன்.

அதனால் யாருக்காகவும், எதற்காகவும் காத்திராமல், எந்த பதவியையும் எதிர்பாராமல், ரஜினி என்ற ஒற்றை நல்ல மனிதனுக்காக நம் சேவையை செய்வோம். மாறாக, மக்கள் மன்றத்தில் உள்ளவர்களும், ரஜினி அளவிற்கு பெருந்தன்மையாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் நம்பினால் பல சமயம் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் ரஜினியால் பதவியில் நியமியக்கபட்டவர்கள், ரசிகர்களுக்கு வேண்டுமானால் துரோகம் செய்யலாம், ஆனால் கண்டிப்பாக ரஜினிக்கு செய்யமாட்டார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே, நாம் அனைவரும் ரஜினிக்கு மட்டுமே என்றென்றும் காவலர்கள். நம் பிரச்சனைகளை மறந்துவிட்டு, முடிந்தால் கூட்டாக, இல்லேயேல் தனியாக நின்று ரஜினியை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

ரஜினியை ஆட்சியில் அமர வைக்க செய்ய வேண்டியது என்ன?


நேற்று திடீரென்று எனக்கு தோன்றிய யோசனை இது. மிகவும் முட்டாள்தனமாகக்கூட இருக்கலாம். உங்கள் கருத்துக்களை கமெண்டில் கூறலாம். நம் அன்றாட வாழ்வில், தினமும் பல உதவிகளை செய்கின்றோம். அவற்றை நாம் எங்கும் பதிவு செய்வது கிடையாது. அதற்கு ஒரு முக்கியமான காரணம், நாம் செய்த உதவிகளை கூறினால், இவன் பெருமை பிடித்தவன் என்று நினைப்பார்கள் என்கின்ற காரணம் தான். ஆனால்,தற்போதைய உலகில் நாம் செய்த உதவிகளை மற்றவர்கள் இடம் நாம் கூறினால், அவர்களும் அதனை செய்யவேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படலாம். நாம் செய்கின்ற உதவிகள் அனைத்தையும் நாம் ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும். அந்தப்பதிவில், #helpbyRajinifan என்று குறிப்பிடவேண்டும். இவ்வாறு நாம் செய்யும்போது, ரஜினியின் ரசிகர்கள் மீது மதிப்பு ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தலைவரின் புகழுக்கும் இது உதவும். ஒரு நாளைக்கு 50 உதவிகள்(ஆதாரபூர்வமாக) #helpbyRajinifan என்கின்ற டேக்கில் பதிவானாலே, அது நமக்கு மிக பெரிய வெற்றி. இப்படி நாம் செய்தால், மற்ற கட்சி தொண்டர்களும் இப்படி செய்ய வாய்ப்பு உண்டு. அதனால் சமூகவலைத்தளம் முழுவதும், ஒரு விதமான நற்க்கருத்துகளே பரவும்.
 


உதவிகள் எவ்வளவு சிறியதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஆதாரம் இருந்தால் தான், அதன்மீது நம்பகத்தன்மை வரும்.( உதாரணம், முதியோர்களுக்கு உணவு வழங்குவது, லிப்ட் கொடுப்பது, மருத்துவ செலவிற்கு பணம் கொடுப்பது, கண் தானம் செய்வது, கண் தன முகாம், ரத்த தானம் செய்வது). இந்த கருத்தில், உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்கள் பகிரலாம். இல்லையென்றால், உங்கள் கருத்துகளை நீங்கள் கூறலாம்.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

மறப்போம் !!! மன்னிப்போம் - ரஜினிகாந்த்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

இந்த திருக்குறளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் ரஜினி தான். ஏன் என்று சில நிகழ்வுகள் மூலம் காண்போம்.


1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ரஜினியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய, ஜெயலலிதா தேர்ந்து எடுத்த ஒருவர் தான் ஆச்சி மனோரமா. இவருக்கு கொடுத்து இருக்கும் வேலையே ரஜினியைப் பற்றி தரக்குறைவாக பேச வேண்டும். அதாவது, வடிவேலு அவர்களை விஜயகாந்திற்கு எதிராக கலைஞர் எப்படி பயன்படுத்தினாரோ, அப்படிதான் !!! உண்மையிலேயே மனோரமா அப்படி எல்லாம் பேசுவாரா?? என்று எண்ணும் வண்ணம் ரஜினியைப் பற்றி மிகவும் கண்ணியம் இல்லாமல் பேசி விட்டார். ரஜினியை பைத்தியக்காரன் என்று கூறும் அளவிற்கு சென்று விட்டார். தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் அதிர்ந்து விட்டன. வழக்கம் போல் ரஜினியிடம் இருந்து எதிர்வினை எதுவும் வரவில்லை. ( எப்படிதான், இவ்வளவு பொறுமையுடன் நிதானமாக செயல்படுகிறார் என்று தெரியவில்லை). 1996 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வருகின்றன. ரஜினி ஆதரித்த திமுக-தாமக கூட்டணி மகத்தான வெற்றி பெறுகிறது. அதன் பிறகு, மனோரமா அவர்களுக்கு பட வாய்ப்பு வரவில்லை. எங்கே, இவருக்கு படம் கொடுத்தால் ரஜினியைப் பகைத்து கொண்டது போல ஆகி விடுமோ?? என்று பயந்தனர்.

இதனை கவனித்த ரஜினி, தான் நடித்த அருணாச்சலம் படத்தில் மனோரமா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பின் மனோரமா அவர்களுக்கு பட வாய்ப்பு குவிந்தது.

இதனைப்பற்றி சில வருடங்களுக்கு முன்பு நடந்த மனோரமா பாராட்டு விழாவில் குறிப்பிட்ட ரஜினி, உங்கள எவ்வளவோ பேசி இருக்காங்க, உங்களுக்கு மனஸ்தாபம் இல்லையா? அப்படினு நிறைய பேரு என்கிட்டே கேட்டாங்க !!! பில்லா படப்பிடிப்பின்போது "நாட்டுக்குள்ளே எனக்கொரு பேர் உண்டு" பாடல் காட்சி சென்னையில் ஒரு கடற்கரையில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போ ஷூட்டிங் வேடிக்கை பார்த்த ஒருத்தர் , " பரவாயில்லை!!! பைத்தியம் நல்லா ஆடுது" அப்படினு சொல்லிட்டார். அப்ப நான் நெர்வஸ் பிரேக்டௌன் ஆகி மருத்துவமனையில இருந்து வந்து இருக்கேன். அவர் என்னை பைத்தியம்னு சொன்ன உடனே, ஆச்சிக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. அவரை பிடிச்சு கன்னத்துல அடிச்சு, அந்த ஆளு அங்க இருந்து போனாதான் நான் நடிப்பேன்னு சொன்னாங்க!! அந்த ஒரு முறை என்னை காத்த கைகள் எத்தனை முறை என்ன அடிச்சாலும் அத ஏத்துக்கும் !!! அப்படினு சொல்லி மிக நெகிழ்ச்சியாக பேசி முடித்தார். ஆச்சி மனோரமா அவர்களும் கண் கலங்கி விட்டார்.

1993 ஆம் ஆண்டு உழைப்பாளி படப்பிடிப்பின்போது, விநியோகஸ்தர்கள், நடிகர்கள் இடையே ஒரு கூட்டம் நடக்கிறது. அதில் கலந்து கொண்ட விநியோகஸ்தர்கள், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். கோடிகளில் எல்லாம் சம்பளம் தர முடியாது என்று கூறுகிறார்கள். அங்கு இருந்த ரஜினி சட்டென்று எழுந்து, இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மார்க்கெட் இருக்குறதுனாலதான், நீங்க நடிகர்களுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்குறீங்க !! உங்களுக்கு விருப்பம் இல்லனா, அவங்களை வெச்சு படம் எடுக்காதீங்க !! அதை விட்டுட்டு சம்பளத்தை குறைத்து கொடுக்க சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். ஆத்திரம் அடைந்த விநியோகஸ்தர்கள், ரஜினிக்கு ரெட் கார்டு போட்டு விட்டனர். உழைப்பாளி படத்தை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் ரஜினியைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள். "தலைவா!! ஆணையிடு!! விநியோகஸ்தர்களின் தலை உங்கள் முன்னால்" என்கின்ற ரீதியில் அமைந்தன. ரஜினி விபரீதத்தை உணர்ந்தார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களிலும் நானே படத்தை வெளியிடுறேன் என்று கூறினார்.

விநியோகஸ்தர்கள் தியேட்டர்களைத் தரக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுகின்றனர். அதையும் மீறி தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட தகுந்த தியேட்டர்கள், ரஜினியிடம் படத்தை நேரடியாக வாங்க முன்வருகின்றன. படமும் மாபெரும் வெற்றி பெறுகிறது. விநியோகஸ்தர்கள் தாங்கள் அவ்வளவு பெரிய தப்பு செய்து விட்டோம் என்று எண்ணி ரஜினியிடம் மன்னிப்பு கேட்டனர். அவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு விளக்கிக்கொள்ளப்பட்டது அப்பொழுது ரஜினியை மிரட்டிய அனைத்து விநியோகஸ்தர்ககளுக்கும் தன்னுடைய அடுத்த படத்தை கொடுப்பதில் அவர் எந்த இடையூறும் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், உழைப்பாளி படத்தை தன்னிடம் நேரடியாக வாங்கிய தியேட்டர்களுக்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் தரப்படுகின்றதா ?? என்பதை கண்டறிந்து உறுதி செய்தார். (இதனை சந்திரமுகி படம் வரையில் அவர் உறுதி செய்ததாக ஏதோ ஒரு தியேட்டர் ஓனர் (பெரம்பூர் பிருந்தா??) கூறியதை படித்து இருக்கிறேன்)

1998 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான், ரஜினியைத் தேவை இல்லமால் தரக்குறைவாக பேசினார். அவருக்கும் பட வாய்ப்பு இல்லாமல் போனது. படையப்பா படத்தில் ஒரு சிறிய ரோல் கொடுத்து அவருக்கு பட வாய்ப்பு வர வழி செய்தார். ஆனால் ,மன்சூர் அலிகான் திருந்துவதாக தெரியவில்லை. தற்பொழுதும் ரஜினியைப் பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி இணையும் படத்தில் நடிக்க இவ்வாறு செய்கிறாரா?? என்று தெரியவில்லை.

பாரதிராஜா - இவரைப்பற்றி கூறவே வேண்டாம். ரஜினியை கேவலமாக விமர்சித்தவர்களில் முதலிடம் இவருக்குத்தான். ஆனால், இவருடைய நடிப்பு தொழிற்கூடத்தை திறந்து வைத்தது நம் ரஜினி தான். இவரை போன்ற ஆட்களுக்கு நிச்சயமாக ரஜினி எவ்வளவு செய்தாலும், வருத்தம் ஏற்படாது. தற்பொழுதும் தேவை இல்லாததை பேசி வருகிறார்.

சத்யராஜ் - பச்சை, மஞ்சள், பிங்க் தமிழன் . ரஜினியை விமர்சித்து பச்சை தமிழன் என்று பெயர் பெற்றவர். இவருடைய மகன் தற்போது நடிக்கும் படத்தின் பெயர் ரங்கா. ரஜினி முழு மனதோடு படத்தின் பெயரை பயன்படுத்திக்கொள்ள சொல்லி இருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி - கடந்த மே மாதம் ரஜினி போருக்குத் தயாராகுங்கள் என்று கூறியபோது, அவர் வீட்டில் பேரன், பேத்திகளோது, விளையாடட்டும் என்று கூறியவர். இவருக்கு ஜல்லிக்கட்டு வீரன் என்று நினைப்பு. ஆனால் அடுத்த இரண்டாவது மாதத்தில் நடத்த 2.0 இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கியதே இவர்தான். அதற்கு ரஜினி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதுபோன்று, இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை சொல்லி கொண்டே போகலாம். இது வரை ரஜினியாக சென்று யாரையும் புண்படுத்தும் வண்ணம் பேசியது கிடையாது. அதேபோல், மற்றவர்கள் பேசினாலும், அமைதி காத்து, அவர்கள் மனம் நோகும்படி நல்லது செய்து விடுவார். இவரை விமர்சனம் செய்பவர்கள், நாம் எதற்காக இவரை விமர்சனம் செய்கிறோம் என்று தங்களை ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.பொறுமையே உனக்கு மறு பெயர் தான் ரஜினியா?

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...