Tuesday, February 20, 2018

காலா திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி - ! ஒரு ரசிகனின் கற்பனையில் !!!

காலா திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி !!! ஒரு ரசிகனின் கற்பனையில் !!!

மும்பையின் தாராவி கழகு பார்வையில் காட்டப்படுகிறது !!! MADRAS திரைப்படம் போல பா.ரஞ்சித்தின் குரலோடு படம் தொடங்குகிறது.
இதுதான் தாராவி !!! மும்பைல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வசிக்கிற இடம். இங்க சுதந்தரம் வாங்குனதுல இருந்து, இந்த குடிசை பகுதிலதான் வாழ்ந்துட்டு வராங்க!!! இவங்க வாழ்க்கைத்தரத்தை உயர்த்துறேன்னு ஓட்டு வாங்கி ஜெயிச்ச ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி, இலவசத்தை மட்டும் கொடுத்து மக்களை ஏமாத்துறாங்க !!! இவங்க முன்னேற கூடாதுங்கிறதுல ரொம்ப தெளிவா இருக்காங்க.இப்போ ஆளுங்கட்சியா இருக்கிற கட்சியோட தலைவர் ஒரு வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க !!! இப்போ ஆட்சி அதிகாரம் அவங்க பசங்க ரெண்டு பேரு கைலதான் இருக்கு !!! இவங்க ரெண்டு பேரு செய்கின்ற கோமாளித்தனத்தை பார்த்து மக்கள் கொதிச்சுப்போய் இருக்காங்க !!!
எதிர்க்கட்சி தலைவருக்கு ரொம்ப வயசு ஆகி போய்டுச்சு !!! எப்படியாவது தான் இறக்குறதுக்குள்ள தன்னுடைய மகனை பதவிக்கு வர வைக்கணும்னு பார்க்குறாரு !!!ஆனா அவர் அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டார்னு மக்கள் நினைக்குறாங்க !!! அதுமட்டும் இல்லாம அவங்க ஆளுங்கட்சியா இருக்கும்போது செய்த ஊழல்களை மக்கள் மறக்கல !!!

இவங்க ரெண்டு பேரு மட்டும் இல்லாம ஜாதிய வெச்சு அரசியல் செய்யுற ஒரு கட்சியோட மகன் !!! தமிழ் தலைவர் கூட தான் இருக்குற மாதிரி போட்டோஷாப் செய்து அதை வைத்து பொழப்பு நடத்திக் கொண்டு இருக்கும் ஒரு அரசியல்வியாதி உள்ளிட்ட பல பேர் இந்த மக்களை சுரண்டக் காத்துகிட்டு இருக்காங்க. இவங்ககிட்ட இருந்து காப்பாத்த யாராவது அரசியலுக்கு வர மாட்டாங்களா அப்படினு மக்கள் நினைச்சிட்டு இருக்கும்போது தான் கரிகாலன் என்கிற காலா, இந்த வருட தேர்தலில் நான் நிக்குறேன் அப்படினு அறிவித்து இருக்கிறார். ( அப்பொழுது ரஜினியின் முதுகுபுறம் மக்கள் வெள்ளத்தில் காட்டப்படுகிறது)1980 களில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு பஞ்சம் பொழைக்கவந்த குடும்பம்தான் காலாவோட குடும்பம். இங்க வந்து தன்னோடு உழைப்பால முன்னேறி மக்களுக்கு பல நல்லது செஞ்சுட்டு வராரு. இவர் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் இவர் கூட நண்பனா இருந்த பல அரசியல்வாதிகள், இப்போ விரோதியா மாறிட்டாங்க.

ஏன் !! காலாவின் நண்பனாக இருந்த உலகநாதன் கூட, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டக் கதையாக தானும் ஒரு கட்சி ஆரம்பிக்க போவதாக கூறிக் கொண்டு அலைகிறார். ஆனால் மக்கள் அவரை சீண்டக்கூடவில்லை. இவர் எதிர்கட்சியோட ஆளா இருப்பாரோன்னு சந்தேக படுறாங்க !!!
இதுநாள் வரைக்கும் மக்களுக்கு நல்லது செய்ய ஒன்னு சேராத இந்த அரசியல்கட்சிகள், இவரை எதிர்க்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க. இவங்க கிட்ட இருந்து அந்த மக்களை எப்படி காப்பாத்துறார்னு பார்ப்போம்.

முதல் காட்சி:

அரசியல்வியாதி ( குடிசை மக்களைப் பார்த்து) - இங்க பாரு!! எங்க இருந்தோ வந்த வந்தேறிய நீங்க எல்லாம் ஆதரிச்சீங்க!! உங்க எல்லாரையும் கொளுத்திடுவேன். எங்களை தவிர இங்க ஒரு நாய் உள்ள வர முடியாது.

அப்பொழுது காலாவின் நாய் (பயங்கர பின்னணி இசையுடன் வருகிறது). அதனை பார்த்த அரசியல்வியாதி, இது என்னடா நாய் வந்து இருக்கு !!

குடிசை மக்களில் ஒருவன் - இது உனக்கு ஒரு வார்னிங் !!! நாய் வரும்போதே நீ இந்த இடத்தை விட்டு போய்டு !!! ஏன்னா !! அடுத்து வர போறது ஒரு சிங்கம் !!! அதுகிட்ட நீ சிக்குன்ன சின்னாபின்னமா ஆயுடுவ !!!

அரசியல்வியாதி: வரட்டும்!! என்ன ஆகுதுன்னு பாப்போம் !!!

மக்கள் - (மனதிற்குள்) இவன் இவங்க ஆத்தா,அப்பத்தாகிட்ட போறது நிச்சயம்
(யமஹா RX 100 பைக் வேகமாக வருகிறது. தலைவரை பின்னால் வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் வேகமாக ஒட்டி வருகிறான். தலைவரின் முகம் தவிர கால், கை என்று அனைத்தும் காட்டப்படுகிறது. வண்டி அரசியல்வியாதி இருக்கும் இடத்திற்கு வந்து நிற்கிறது. தலைவரின் நாய் ரஜினியின் காலைப் போய் கொஞ்சுகிறது. ரஜினி நாயைத் தூக்கி ஒரு முத்தம் இடுகிறார்).

ரஜினி - உனக்கு இருக்கிற நன்றி, இங்க மனுஷனுக்கு இல்லாம போச்சே !!!
ரஜினி அரசியல்வியாதியிடம் ஸ்டைலாக நடந்து வருகிறார்.
அரசியல்வியாதி - நீ எதுக்குடா இந்த மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரணும்னு நினைக்கிற?? அதுக்கு நாங்க இருக்கிறோம் !! நாங்க பார்த்துக்குறோம் !!! நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தோம், உன்ன இல்லாம பண்ணிடுவோம் !!
ரஜினி - என்னை எதிர்க்க ஒன்னு சேர்ந்த நீங்க, மக்களுக்கு நல்லது செய்ய ஒன்னு சேர்ந்து இருந்தீங்கனா, நான் ஏன்டா அரசியலுக்கு வர போறேன்
அரசியல்வியாதி - அவங்களுக்கு நல்லது செய்ய நீ யாருடா!!
ரஜினி - உலகத்துக்கு ஒரு பிரச்சன்னைனா நான் மனுஷன் !!!
இந்தியாவுக்கு ஒரு பிரச்சனைனா நான் இந்தியன் !!!
தமிழனுக்கு ஒரு பிரச்சனைனா நான் தமிழன் !!!
அரசியல்வியாதி - டேய்!! இந்த வந்தேறிய அடிச்சு போடுங்கடா !!
ரஜினி - நான் வந்தேறி இல்லடா !! ஊழல் செய்யுற உங்கள மாதிரி ஆளுங்கள அடிக்க வந்து இருக்கிற காட்டேரி !!!
ரஜினி அனைவரையும் அடிச்சு துவம்சம் செய்கிறார். படத்தின் முதல் பாடலில் தியேட்டர் ரணகளம் ஆகிறது
இப்படிக்கு ,
அ.அருள்செல்வன்

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...