Wednesday, February 7, 2018

ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ??

நான் ரஜினியைத் தொடர்ந்து ஆதரித்து எழுதி வருவதைப் பார்த்த சில பேர், இவன் ஒரு படித்த முட்டாள், நடிகர்கள் பின்னால் செல்பவன் என்று தொடர்ந்து நாகரிகம் இல்லாமல் கூறி வருகிறார்கள்.. இவர்களுக்கான பதிவு தான் இது.நான் ஒரு படித்த முட்டாள் என்று கூறுகிறார்கள். என்னவோ ரஜினிக்கு எதிராக களத்தில் காமராஜரும், அண்ணாதுரையும் இருப்பதை போலவும், நான் அவர்களை விட்டு விட்டு ரஜினியை ஆதரிப்பது போலவும் கூறி வருகிறார்கள். களத்தில் ரஜினியோடு நிற்கும் ஒரே ஒரே தலைவராவது, உழைத்து சம்பாதித்து கட்சி நடத்துபவராக இருக்கிறாரா?(நடிகர்களைத் தவிர). நல்லகண்ணு அய்யா இருக்கிறாரே?? என்று கூறுவார்கள். கடைசியாக அவருடைய இடதுசாரி இயக்கம், தேர்தலில் நிற்க அவருக்கு சீட்டு கொடுத்தது எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா? இடதுசாரி இயக்கம் முதலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் தயாரா? ஏண்டா? தேர்தலியே நிற்காத ஒருவரை எப்படி ஆதரிக்க முடியும்?? ஏன் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை என்று இடதுசாரிகளை எதிர்த்து இந்த திடீர் தமிழர்கள் என்றாவது கேட்டு இருக்கிறார்களா?

நம் ஆதரவு ரஜினி என்னும் நடிகருக்கு மட்டும் அல்ல. 25 வயது வரை ஒரு பேருந்து நடத்துனராக வேறு ஒரு மாநிலத்தில் இருந்து விட்டு, மொழி தெரியாத மாநிலத்தில் தன்னுடைய கருமையான நிறத்துடன் வந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, பல்லாயிரம் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் அவரது தன்னம்பிக்கைக்கு தான் நம் ஆதரவு.
இந்தியாவில் மிகவும் பிரபலமானத்துறை எது?? ஏன் உலகத்திலேயே மிகவும் பிரபலமானத்துறை எது. கலைத்துறை தானே? 100 கோடி வைத்து இருந்தால், நீங்கள் ஒரு பெரிய கட்சியிடம் சீட்டு வாங்கி, அமைச்சர் ஆகி விடலாம். ஆனால் 1000 கோடி இருந்தாலும், சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வளம் வர முடியுமா? காசு, பணத்தால் நிலைக்க கூடிய பதவியா அது? கடின உழைப்பு மட்டும் இல்லையென்றால் சாத்தியப்பட கூடிய ஒன்றா அது?? அந்த கடின உழைப்பைதான் நாம் ஆதரிக்கிறோம்.
நீ சிறு வயதில் இருந்து அவரையே நேசித்து வருகிறாய், உனக்கு பக்குவம் இல்லையா?? என்று ஒரு நண்பன் கேட்கிறான். நான் ரஜினியுடன் சேர்ந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு நடிகர்களையும் நேசித்து வந்து உள்ளேன் (கார்த்திக், பிரபு இன்னும் பலர்), ஆனால் ரஜினி ஒருவர் தான் இன்றுவரை தமிழ் சினிமாவில் ராஜாவாக உள்ளார். பின், அவரை எதற்காக நாம் வெறுக்க வேண்டும்??

எம்ஜியாருக்கு பிறகு அரசியலில் வந்து தோற்றுப் போன நடிகர்களும், ரஜினியும் ஒன்றா?? சிவாஜி, பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,விஜயகாந்த்(கமல் உட்பட) என்று அனைவரும் மார்க்கெட் போனவுடன் அரசியலுக்கு வந்தவர்கள் . ரஜினி மட்டும் தான் எம்ஜியாருக்கு பிறகு திரையுலகில் ராஜாவாக இருக்கும்போதே அரசியலுக்கு வருபவர். எனவே தயவு செய்து இனிமேல் அவர் ஒரு கூத்தாடி என்று சொல்வதை நிறுத்துங்கள். அவர் இந்தியாவிலேயே பிரபலமான, வெற்றி பெறுவதற்கு கடினமான ஒரு துறையில், 40 வருடமாக சிங்கமாக இருக்கும் ஒருவர்.(வேறு யாரவது இந்தியாவில் 40 வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்களா??) எனவே அவரையும் மற்ற நடிகர்களையும் ஒப்பிடுவதே மிக பெரியத் தவறு.

வெளிநாடுகளில் எல்லாம் நடிகர்கள் அரசியலில் ஜெயிப்பது இல்லை என்று நண்பன் கூறினான். இவர்கள் எல்லாம் WHATSAPP கோஷ்டிகள். ஹாலிவுட் நடிகர் ரொனால்டுட் ரீகன் 8 வருடங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்து இருக்கிறார். ஏன்?? அர்னால்டு கூட, அமெரிக்காவில் கவர்னராக இருந்து இருக்கிறார். ஆதலால், சினிமாவில் ஜெயித்து, அரசியலுக்கு வருபவர்களை, நீங்கள் கேவலமாக பார்ப்பது ஆச்சிரியமாக உள்ளது.

இறுதியாக, நாங்கள் ஒன்றும் வேலைவெட்டி பார்க்காமல், படிக்காமல், குடும்பத்தை கவனிக்காமல், ரஜினியை ஆதரிக்கவில்லை. அனைத்தையும் செய்து கொண்டு, நேரம் கிடைக்கும் நேரத்தில் ரஜினியை ஆதரிக்கிறோம். உலகம் முழுக்க தனக்கு வாய்ப்பு கிடைக்காதா?? என்று பலர் ஏங்கி கிடைக்கும் ஒரு துறையில், 40 வருடமாக முன்னணியில் இருக்கும் ஒரு ராஜாவை ஆதரிக்கிறோம். 20 வருடமாக அவர் பற்றிய செய்திகள் முழுவதையும் படித்து, அவரைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒரு காவலன் என்ற முறையில் அவரை ஆதரிக்கிறோம்.
இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...