Friday, May 1, 2015

மோடியின் மே தின பரிசு



சத்தமே இல்லாமல் ஒரு சட்டம் நிறைவேறி விட்டது. 15000 கீழ் BASIC உள்ள அனைவருக்கும் இந்த மாதத்தில் இருந்து GROSS SALARY யில் இருந்து 12% சதவீதம் PF பிடிக்கப்படும் என்பதுதான் அந்த சட்டம். இதனால் 15000 கீழ் BASIC உள்ள அனைவருக்கும், மாத சம்பளம் ஆயிரம் முதல் மூவாயிரம் வரை குறையும். 

                          


                        

மிக சுலபமாக சொல்ல வேண்டுமானால் இவர்கள் வாங்கிய மூன்று வருட சம்பள உயர்வு PF என்கின்ற பெயரில் இந்த மாதத்தில் இருந்து உறிஞ்சப்படுகிறது. நீங்கள் கேட்கலாம்? PF என்பது வைப்பு நிதி தானே? பிற்காலத்தில் உதவும் என்று. நிகழ்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கும் இவர்களுக்கு எதற்கு வைப்பு நிதி? தன் தேவைக்கு போகதானே சேமிப்பு எல்லாம்? வெளியூரில் இருந்து வந்து தங்கும் இளைஞர்கள் பலர் 2000 மற்றும் 3000 ரூபாய்க்கு வீடு வாடைக்கு எடுத்து தங்குகிறார்கள். இந்த மாதம் முதல் அவர்கள் வீட்டிற்கு அனுப்பும் பணம் வெகுவாக குறையும். இதன் மூலம் தன மகனின் வறுமானத்தை நம்பி இருக்கும் பல பெற்றோர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தொழிலாளியின் PF தொகை மட்டும் அல்லாமல், கம்பெனி செலுத்தும் PF தொகையும் GROSS SALARY யில் இருந்து 12% சதவீதம் பிடிக்கப்படும். பெரும்பாலான கம்பனிகளில் கம்பெனியின் PF-வும் தொழிலாளின் GROSS SALARY யில் இணைக்கப்படுவது நாம் அறிந்ததே! இதனால் மாத சம்பளம் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. நாட்டின் பணத் தேவையை பூர்த்தி செய்ய பல வழிகள் இருக்கும்போது, எதற்கு ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது என்று புரியவில்லை.

இதனைப் பற்றி நேற்று வரை பேசிய நம் இளைஞர்கள் இன்று உத்தம வில்லன் மற்றும் நடிகரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர்ககளை போற்றும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தனி மனித தேவை பூர்த்தியாகிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற வறுமை நாட்டில் நடிகர்களை இன்றும் கொண்டாடும் நிலை தொடர்வது மிகுந்த வேதனைக்குரிய செய்தி. இன்று உத்தம வில்லன் படம் ரிலீசாக சிறிது தாமதம் ஆனதும், சாலை மறியலில் ஈடுப்பட்ட இளைஞர்கள், மேகதாது, சாலைப் பாதுகாப்பு புதிய சட்டம் போன்ற மக்களை பாதிக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு.

சரி! எனக்கு நேரம் ஆகிவிட்டது. உத்தம வில்லன் படத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் இந்த கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...