Wednesday, February 11, 2015

BAD BOYZ – நிறுவனர் அருள்செல்வனின் பேட்டி

கேள்வி: உங்களுக்கு வெட்கமே இல்லையா? உங்கள நீங்களே பேட்டி எடுக்குறீங்க?

பதில்: இல்லை தான். ஒன்பது படம் எடுத்தாச்சு. பத்தாவது படமும் எடுத்து முடிச்சாச்சு. எவனாவது பேட்டி எடுப்பான்னு பார்க்குறேன். ஒருத்தனும் எடுக்கற மாதிரி தெரியல. அதான் கலைஞர் மாதிரி ஒரு கேள்வி பதில் அறிக்கை ரிலீஸ் பண்ணி இருக்கோம்.

                       கேள்வி: நீங்க குறும்படம் எடுக்கறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க. 

பதில்: எல்லார்கிட்டயும் கடன் வாங்கிட்டு இருந்தேன்.

கேள்வி: இப்போ?

பதில்: இப்போவும் அதான் பண்ணிட்டு இருக்கேன்.

கேள்வி: உங்க படத்துல நடிக்கிறவங்களுக்கு எல்லாம் சம்பளம் தருவீங்களா?

பதில்: எங்க படத்துல யாரு சார் நடிக்குறா? ஏதோ கேமராவுக்கு போஸ் கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு போறாங்க! வெறும் சாப்பாடு மட்டும்தான். அதுவும் அடுத்த படத்துல இருந்து அவங்களே பார்த்துகிட்டா நல்லா இருக்கும்.

கேள்வி: சுபாஷ் நிறைய படங்கள ஹீரோவா நடிக்க என்ன காரணம்?

பதில்: அவன விட காமெடி மூஞ்சு எதுவும் கிடைக்கல! வேற யாராவது இருந்தா சொல்லுங்க!

கேள்வி: உங்க படத்துக்கு budget எவ்வளவு? நீங்க பாட்டுக்கும் ஜிம், ரைஸ் மில்லுன்னு எடுத்து தள்ளுரிங்க

பதில்: எங்க படத்தோட budget இரண்டு ஆயிரம், மூவாயிரம் தாண்டினது இல்லை. ரைஸ் மில், ஜிம்,அலுவலகம் எல்லாம் என் நண்பர்கள் இரத்தின குமார், லோகநாதன், பிரசாத் உள்ளிட்ட பலர் எனக்கு இலவசமா கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் என் மனபூர்வமான நன்றிய தெருவிச்சுகிறேன். அதே மாதிரி படம் எடுக்கிறதுக்கு எல்லாம் ரொம்ப செலவு ஆகாதுங்க! ஒரு குறிப்பட்ட பேர் சினிமா துறையில அவங்க மட்டுமே இருக்கணும்னு மத்தவங்கள வளர விட மாட்றாங்க! சினிமா படம் எடுக்க நல்ல ரசனையும், கற்றுக்கொள்கிற ஆர்வமும் இருந்தா போதும்.

கேள்வி: படத்துல நடிக்கிறவங்க எல்லாம் BAD BOYZ அப்படின்னு சொல்றிங்க! யார் இல்லனா உங்களால படம் எடுக்க முடியாது

பதில்: கிருஷ்ணா! அவர மாதிரி ஒரு மனிஷன நீங்க பார்க்கவே முடியாது. உதவி செய்யறதுல மன்னன். எங்கள் அண்ணன். எந்த ரோல் கொடுத்தாலும் 5 நிமிசத்துல மாறிடுவாரு! சில சமயம் வசனம் எல்லாம் சொல்லுவாரு பாருங்க! அது பயங்கர ஹிட் ஆகும் (உதாரணம்: “ஒரு ரூபா அரிசியா சார்” படம்: மாமா டௌசெர் கழன்டுச்சு).அவருக்கு நாங்க ரொம்ப கடமைப்பட்டு இருக்கோம்.

கேள்வி: உங்க படத்துல ஏன் பொண்ணுங்க அவ்வளவா நடிக்கவே மாட்றாங்க?

பதில்: பொண்ணுங்க நெறைய பேர் dating னா கூட ஓகே சொல்றாங்க! ஆனா shooting னா சொல்ல மாட்றாங்க! நிஜமா எங்க கிட்ட நிறைய லேடீஸ் subject இருக்கு. ஆனா நடிக்க பொண்ணுங்க இல்லை. இந்த பேட்டி மூலமா நான் கேட்டுகறது தயவு செஞ்சு எங்க படத்துல நடிச்சு help பண்ணுங்க. உங்க எல்லாரையும் எங்க சகோதரி மாதிரி நடத்துவோம். இது வரை எங்கள் படத்தில் எந்த பிரதிபலனும் பாராமல் நடித்த அபிராமி, கிருஷ்ணவேணி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூன்று பேருக்கும் எங்கள் ஆத்மார்த்த நன்றிகள்.

கேள்வி: உங்க படத்த பார்த்து யாராவது செருப்பால அடிச்ச சம்பவம் இருக்கா?

பதில்: ஆமாம் ! இன்னைக்கு நல்லா மழை பெய்யுற மாதிரிதான் இருக்கு! அடுத்த கேள்வி

கேள்வி: உங்களுடைய அதிகபட்ச ஆசை என்ன?

பதில்: நாளைய இயக்குனர் ஷோ-ல கலந்துக்கனும். யாராவது இருந்தா உதவி செய்யுங்க!

கேள்வி: நீங்க எடுத்ததுல உங்களுக்கு பிடிச்ச மற்றும் பிடிக்காத படம்?

பதில்: பிடிச்ச படம்: H2S04. பிடிக்காத படம்: MR.PREGNANT. இன்னும் கொஞ்சம் சிரிப்பா எடுத்து இருக்கலாம்னு தோணுது

கேள்வி:சொம்பு இரண்டாம் பாகம் வராதான்னு ரசிகர்கள் கேட்குறாங்களே?

பதில்: கண்டிப்பா வரும். FEATURE FILM –ஆ வரும்.

கேள்வி:நீங்க என் ROMANCE படம் எல்லாம் எடுக்க மாட்றீங்க?

பதில்: ஏன்யா எங்க FACE CUT பார்த்தாலே தெரியலையா நாங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டோம்னு சொல்லிட்டு!

கேள்வி: கடைசி கேள்வி! வெளி வர இருக்குற உங்க “சங்கி மங்கி” திரைபடத்த பத்தி சொல்லுங்க

பதில்: முதல் முறையா நாங்க ஒரு பேய் படம் எடுத்து இருக்குறோம். இது ஒரு நகைச்சுவை கலந்த, சமுதாய அக்கறை உள்ள பேய் படம். இந்த படம் முழுவதும் நாங்க 5D ல தான் எடுத்து இருக்கோம். இந்த படத்துல ஒரு CHINESE தான் பேய். இதுக்கு மேல படம் மார்ச்சுல ரிலீஸ் ஆகும். பார்த்து தெரிஞ்சுக்குங்க! நன்றி!


No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...