Sunday, April 13, 2014

விஜயகாந்த் பிரச்சாரம்

விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும்போது காமெடி செய்யாமல் இருக்க சில யோசனைகள்.  


                                          



1) காதில் பஞ்சை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்தால் நல்லது. இதனால் கீழே உள்ளவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டு இருக்க தேவை இல்லை.

2) இவர் குடிக்கும் மதுவில் பாதியை கூட்டத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விட வேண்டும். அல்லது டாஸ்மாக் கடையின் வெளியில் மட்டும் பிரச்சாரம் செய்யலாம்.

3) ஜெயலலிதா பிரச்சார வேனில் லிப்ட் வைத்ததுபோல் இவரும் வைத்துக் கொள்ளலாம். அதனால் இவர் கூட்டத்தைப் பார்த்து கொடியை இருக்கு, உட்காரு என்று சொல்லிக் கொண்டு இருக்க தேவை இல்லை.

4) கலைஞர், ஜெயலலிதா இருவருமே எழுதி படிக்கும் பொழுது, இவரும் கூட்டங்களுக்கு பேசவரும் பொழுது எழுதிக் கொண்டு வரவேண்டும். அனால் இதில் ஒரு சந்தேகம் இருக்கறது. இவருக்கு எழுத, படிக்கத் தெரியுமா?

5) வேட்பாளர் பெயர், கட்சியின் சின்னம், தொகுதி,தேர்தல் தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிடமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.எனது கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னால் போதும்.

6) இவர் வேன்களில் பிரச்சாரம் செய்யாமல் மேடைகளில் பிரச்சாரம் செய்வது மிக நல்லது. மேடைக்கும், கூட்டத்திற்கும் 50 அடி இடைவெளி இருப்பது நல்லது.

7) பிரச்சார வேனில் வேட்பாளர் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக நல்லது.

8) "நான் சாதரணமாக பேசும்போதே உளறுவேன். குடிப்பதால் கிடையாது" என்று முன்பே கூறி விட வேண்டும். இதனால் குடிகாரன் என்று இமேஜ் கொஞ்சம் குறையலாம்.

இறுதியாக

மறைந்த திரு.மூப்பனார் அவர்கள் பேசும்போது, பீட்டர் அல்போன்சு அவர்கள் அதை அனைவருக்கும் புரிய வைப்பார். அதைப்போல் இவர் பேசுவதை இவருடைய மனைவி அனைவருக்கும் புரிய வைக்கலாம்.


இப்படிக்கு ,

அ .அருள்செல்வன்

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...