சச்சின் டெண்டுல்கர் – க்கு BAD BOYZ இன்
சமர்ப்பணம் இந்த கட்டுரை. கவிதைனும் சொல்லலாம்.
இதை சச்சின் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
பெற்ற பொழுதே எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் மனம் இன்றுவரை சாந்தி
அடையவில்லை. இப்பொழுதும் இக்கட்டுரையை கண்ணீரைக் கொண்டுதான் எழுதுகிறேன்.
சச்சின்
டெண்டுல்கர்
சதத்தில் சதம் கண்ட சத்ரியனே!
நீ எதிரியின் பந்தை மீண்டும் பதம் பார்ப்பது
எப்பொழுது?”
இனி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில்
வருகைப்பதிவு அதிகமாக இருக்கும். ஆனால் யார் முகத்திலும் சந்தோஷப் பதிவு
இருக்காது.
நீ ஓய்வு பெற்ற நாள்தான் பலபேருக்கு ஓய்வு நாள்!
கிரிக்கெட் பார்ப்பதில் இருந்து!
அன்று தான் பல வீடுகளில் துக்க தினம். கண்ணீர்
மழை பெருக்கெடுத்து
புயல் சின்னமாக மாறியது.
ஒருவனுக்கு சாகும் நாள் தெரிந்தால் தெரியும்
வேதனை!
நீ ஓய்வு அறிவித்த நாளில் இருந்து எங்களுக்கு
கிடைத்தது.
தேசத்தந்தையான காந்தியின் மீது கூட விமர்சனம்
உண்டு. ஆனால்
தேசத்தின் மகனான உன் மீது ஒரு விமர்சனம் கூட
இல்லை.
ரசிகர்களாகிய நாங்கள் உன்னிடம் இருந்து எதிர்
பார்த்தது மிகவும் குறைவு தானே?
நீ அனைத்துப் போட்டிகளிலும் 5௦ ஓவர் அவுட்
ஆகாமல் விளையாட வேண்டும்!
சதம் அடிக்க வேண்டும்.!
இந்தியாவிற்கு வெற்றி தேடித் தர வேண்டும்.!
இதைத் தவிர உன்னிடம் இருந்து எதையாவது எதிர்ப்பார்த்து
நாங்கள் நெருக்கடி தந்தோமா?
புத்தர் தோற்றுவித்தது புத்திசம். மகாவீர் தோற்றுவித்தது
ஜைனிசம்.
ஆனால் மக்கள் உனக்காக தோற்றுவித்த மதம் தான்
சச்சினிசம்.(Sachinsm)
எல்லா மதத்தை விடவும் நாங்கள் பாக்கியசாலிகள் தான்.
ஏன் என்று கூறு பார்க்கலாம்?
எந்த மதத்திலும் கடவுளை நேரில் கண்டவர்கள்
இல்லை.
என் அம்மாவிற்கு நான் நாத்திகனாக இருக்கிறேன்
என்று வருத்தம். அவருக்கு என்ன தெரியும் நீ 99 இல் இருக்கும் பொழுது நான் எத்தனை
கடவுளைக் கும்பிட்டு இருப்பேன் என்று?
ஒரு முறை நீ 2௦௦ அடித்ததற்காக திருப்பதியில்
மொட்டைக்கூட போட்டு இருக்கிறேன்.
தந்தை பெரியாரே நீ அடிக்கும் Straight drive –
வை நேரில் கண்டு இருந்தால்
கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டு
இருப்பார்.
இந்தியாவில் “ஓம்!ஓம்!” என்ற மந்திரம் ஒலித்ததை
விட “சச்சின்!சச்சின்!” என்ற மந்திரம் ஒலித்தது தான் அதிகமாக இருக்கும்.
இருந்தாலும் உன் மீது சிறிது கோபம்தான்.
இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது நீதான்.
ஒரு முறை நான் தும்மும்போது நீ சிக்ஸர்
அடித்தாய் என்பதற்க்காக நான் எத்தனை முறை தும்மினேன் என்று எனக்குதான் தெரியும்!
இது பரவாயில்லை! என் நண்பன் ஒருவன் பாத்ரூம் செல்லும்போது
நீ அவுட் ஆகிவிட்டாய். அதில் இருந்து நீ ஆடி முடிக்கும்வரை அவன் பாத்ரூம்
சென்றதில்லை.
யார் சொன்னது இதய அடைப்பு 30 வயதிற்குமேல் தான்
வரும் என்று. நீ அவுட் ஆகும் பொழுது 6 வயது சிறுவனுக்கும் இரண்டு நிமிடம் இதய
அடைப்பு வரும்.
நீ இருக்கும் பொழுதும் இல்லாத பொழுதும் நிறைய
பேர் இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். அதை நாங்கள் யாரும் பெரிதாக
எடுத்ததில்லை.
அதற்கு காரணம் சினிமா மோகம் தான்.
நாங்கள் எப்பொழுதும் கதாநாயகன் வில்லனை அடித்து
ஜெயித்தால்தான் ஒத்துக் கொள்வோம். காமெடியன்கள் அடித்து ஜெயித்தால் அல்ல.
பேசாமல் திருவள்ளுவர் படத்திற்கு பதில் உன்
படத்தைப் பயன் படுத்தலாம். எந்த குறள் எடுத்தாலும் அதற்கு நீ ஒரு எடுத்துக்காட்டு.
என்னைப் பொறுத்தவரை அது இரண்டாயிரம் வருடத்திற்கு முன் உன்னைப் பற்றி எழுதப்பட்ட
சரிதை.
நீ ஓய்வு பெரும் நாள் அன்று பேசிய பேச்சு வரலாற்றில்
மிக சிறந்த பேச்சுகளில் ஒன்று.
இந்திய துணைக் கண்டம் ஒரே நேரத்தில் கண்ணீர்
சிந்தி நான் கண்டது இல்லை.
அந்த கண்ணீர் வெள்ளத்தில் கங்கையும் காவிரியும்
இணைந்தது.
அந்த பேச்சில்தான் தெரிந்தது நீ கிரிக்கெட்டிற்கான
இந்தியாவின் தூதர் மட்டும் அல்ல.
கலாசாரத்திற்கான இந்தியாவின் தூதர் என்று.
வேற்றுமையில் ஒற்றுமைதான் பாரதம்! என்பது நீ
விளையாடும் பொழுதுதான் கண் கூடாக தெரிந்தது.
பூஸ்ட் மட்டையில் நீ போட்டு இருக்கும்
கையெழுத்தின் அழகு! ரவிவர்மாவின் ஓவியம் தோற்றது.
எனக்குத் தெரிந்து நீ விளையாடும் போட்டியிற்கு
நடுவர்களே தேவை இல்லை. மனசாட்சியை மீறுபவனுக்கு தானே நடுவர், விதிமுறைகள் எல்லாம்?
உன்னுடைய பெருமைகளில் பாரத ரத்னா விருது பற்றி நான் குறிப்படவில்லை. வேண்டும் என்றால் பாரத ரத்னா பெருமைகள் பற்றி குறிப்பிடும் பொழுது உனக்கு வழங்கப்பட்டது என்று எழுதுகிறேன்.
இறுதியாக,
உன்னுடைய பெருமைகளில் பாரத ரத்னா விருது பற்றி நான் குறிப்படவில்லை. வேண்டும் என்றால் பாரத ரத்னா பெருமைகள் பற்றி குறிப்பிடும் பொழுது உனக்கு வழங்கப்பட்டது என்று எழுதுகிறேன்.
இறுதியாக,
ஊழல் பெருகிவிட்ட இந்தியாவில் வாழ நீ ஒரு
முக்கிய காரணமாக இருந்தாய். இந்தியாவின் பெருமையாகத் திகழ்ந்தாய்! இதுவரை வாரிசு
அரசியலை நாங்கள் விரும்பியது இல்லை. முதல் முறையாக உன் மகன் கிரிக்கெட் விளையாட வர
வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். கண்டிப்பாக உன் வளர்ப்பின் மீது எங்களுக்கு
நம்பிக்கை உள்ளது.
இப்படிக்கு,
மனதில் உன் நினைவை சுமந்து நடைப்பிணமாக வாழும்
கோடான கோடி ரசிகர்களில் ஒருவன்.
அ.அருள்செல்வன்.
1 comment:
சிறப்பிற்கு சிறப்பு சேர்த்து விட்டீர்கள்...
வாழ்த்துக்கள்....
ம்... சச்சின் சச்சின்....
Post a Comment