Tuesday, February 19, 2013

பிரபாகரன் மகன் - வேங்கையின் மைந்தன்
இன்று காலை நாம் பார்த்தப் புகைப்படம் சற்று நேரம் நெஞ்சை அடைப்பதாய் இருந்தது.போரின்போது கொல்லப்பட்டான் என்று சொல்லப்பட்ட பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின் பதுங்கு குழியில் இருப்பது போன்ற புகைப்படமும், அதன் பின்னர் தான் துப்பாகியால் கொல்லப்பட்டான் என்ற உண்மையும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

பல உணர்ச்சிகள் என் உள்ளத்தில் வந்தன.

ஒன்றும் அறியாத ஒரு சிறுவனை, பால் மனம் மாறாத பாலகனைக் கொன்றதை நினைத்து கண்ணீர் விடுவதா?ஈழத்துக்காக பலி கொடுத்த மாவீரன் பிரபாகரனின் வீரத்தை மெச்சுவதா?

குழந்தைகளைக் கொல்லும் கோழை இலங்கை ராணுவத்தை நினைத்து கோபப்படுவதா?

தன் குடும்பம் தான் முக்கியம் என்று பலர் இருக்க தன் குழந்தைகளையும் தமிழ் என்று புரியவில்லை.


இந்த கொழைத்தனத்தைப் பார்க்கும்போது ,

"என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...?’" என்று இலங்கை ராணுவத்தைப் பார்த்து தலைவர் ரஜினி கேட்ட கேள்வி தான் ஞாபகம் வருகிறது.

கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். விடியலை நோக்கும் அந்த விழிகளைப் பாருங்கள். இதைப் பார்த்துதான் அந்த கோழைகள் மிரண்டனரோ?இவர்கள் மனதில் பிரபாகரன்மேல் எந்த அளவு பயம் இருந்தால் அவர் பிள்ளையும் வேங்கையின் மைந்தனாக வர வாய்ப்பு உள்ளது என எண்ணி இந்த சிறு வயதிலேயே அவன் உயிரை எடுத்து இருப்பார்கள்?

."எந்த நாட்டில் பெண்களும், குழந்தைகளும், ஏழைகளும், அப்பாவி மக்களும் உதிரம் சிந்துகிறார்களோ அந்த நாடு உருப்படாது" என்று ரஜினி கூறினார். அது உண்மை ஆகட்டும். இந்த ஓநாய்களை விரைவில் இயற்கை தண்டிக்கட்டும். ஏனென்றால் நம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவால் அவர்களுக்கு ஒன்றும் நேரப் போவது இல்லை.

இங்கே ஒரு நடிகையின் மானத்திற்காக போராட ஒரு தலைவர் உண்டு, மாபெரும் கட்சி உண்டு.

இங்கே ஒரு நடிகனின் வியாபாரம் செய்யும் உரிமையைக்காக்க ஒரு மாபெரும் கூட்டம் உண்டு.

அடுத்த வேலை சோற்றுக்கு போராடும் 50% மக்கள் உண்டு.

ஆனால் தமிழனுக்காக, அல்லது மனித உரிமைக்காக போராட ஒரு நாதி இல்லை.

நண்பர்களே இதில் கலைஞரை மட்டும் நாம் குறைகூறி பிரோஜனம் இல்லை. நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம் அந்த நேரத்தில்? தென் ஆப்ரிக்காவில் நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.இப்பொழுது வருத்தப்படும் நாம் அனைவரும் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்பதை சிந்துத்துப் பார்க்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் ஒரு நல்ல தலைவர் உண்டாவதற்கு என்ன காரணம்? ஒரு தலைமுறையே சினிமா என்னும் மோகத்தில் விழுந்து கிடக்கிறது. நான் உட்பட. போராடும் எண்ணம் சுத்தமாக இல்லை. நாளையே ஆதிபகவன் படம் நன்றாக இருக்கிறது என்றால் அதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவோம். ஏன் ? நானே என் ப்ளாக்கில் திரை விமர்சனம் எழுதலாம். இது தான் நடந்து வருகிறது. இது தான் கண்டிப்பாக நடக்கும்.

அட போங்கப்பா! அடுத்த தலைமுறையாவது காப்பாத்துங்க!போராடும் குணத்தோடு குழந்தைகளை வளருங்கள்.

2 comments:

ck said...

Excellent Ji

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய கேள்விகள்... + கருத்துக்கள்...

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...