Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்


இந்த பதிவு கண்டிப்பாக உலக  சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காது. தொடர்ந்து படிக்க வேண்டாம்.            


         

கமல் படங்கள் மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பு கிடையாது. அதுவும் மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு கமல் படங்களைத்  தியேட்டரில் பார்க்கக்  கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால் வழக்கம்போல் கமல் ஒரு விளம்பரத்தைத்தேடி படம் பார்க்கும் எண்ணத்தை வரவழைத்து விட்டார்.

இந்த படம் பார்த்தப்போது எனக்கு ஒன்று புரிந்தது.

உலக நாயகன் கமல்ஹாசன் உலக சினிமாவை தான் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு கொண்டு போகவில்லை.

அதாவது ஆங்கிலத்தைத்  தமிழ்நாட்டிற்குக்  கற்பித்து அனைவரையும் அமெரிக்கர்போல மாற்றி விட்டேன் என்று கூறுவதற்கு சமம் இது. நம் தமிழை அல்லவா உலகிற்கு எடுத்து செல்ல வேண்டும்.

ஏற்கனேவே உதடோடு உதடு வைக்கும் காட்சிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து அரும்பாடு பட்டவர்.

கமல் ஒரு அறிவாளி, மேதாவி என்று எல்லாரும் கூறுகிறார்கள். இந்தியாவில் இன்னும் 90% பேர் வறுமை கோட்டிற்கு கீழும், கல்வி அறிவும் இல்லாதவர்கள் என்ற உண்மை எப்பொழுது இவருக்கு புரியபோகிறது ?

இவர்களுக்காக இவர் எப்பொழுது ஒரு படம் எடுப்பார்? ஈரானிய படங்களும், கொரிய படங்களும் அமெரிக்க படங்களுக்குப்  போட்டியாக இருக்கின்றன. அதுபோல் அல்லவா அவர் தமிழ் சினிமாவைக்  கொண்டு சென்று இருக்க வேண்டும்?

மாறாக தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறி கொண்டு அமெரிக்காவிற்கு நல்ல ஜால்ரா அடித்து இருக்கிறார்.

அடுத்த படத்தில் 15 கோடி சம்பளம் வாங்கி  விடும் நடிகருக்கு பணம் கொடுக்கத்  தயாராக இருக்கும் நம் தமிழ் நாட்டு  மக்கள் , நூறு முறை நான் வெளிநாடு போக தயாராக இருக்கிறேன் என்று கூறும் நடிகருக்கு தன் வீட்டுப்  பத்திரத்தைத்   தரும் தமிழ் நாட்டு மக்கள், கொஞ்சம் காவேரியில் தண்ணீர் வராமல், தமிழ்நாட்டில் வாழ வழி இல்லாமல் இருக்கும் விவசாய மக்களுக்கும் உதவி செய்தால் தமிழ்நாடு முன்னேற வாய்ப்பு  உள்ளது.

சரி விஸ்வரூபம் கதையாவது கொஞ்சம் தகவல் சேர்த்து எடுத்து இருப்பாரா? என்றால் அதுவும் இல்லை .

 முல்லா ஓமரை அடிக்கடி புகைப்படம் எடுப்பதைப்  போல காட்டுகிறார். முல்லா ஒமரின் புகைப்படம் கிடைக்காமல் அமெரிக்கா  திண்டாதுவது  அவருக்கு தெரியவில்லை போலும்.

 இவர் அல் கொய்தாவில் இணைவது போன்ற காட்சி, விருதகிரி படத்தில் ஸ்காட்லான்ட் யார்ட் போலீசில் விஜயகாந்த் சேரும் காட்சிக்கு இணையானது.

இந்த படத்தைப்பற்றி நான் விமர்சனம் பண்ண விரும்பவில்லை.

ஆனால்  கமல் அவர்களுக்கு நாம் கேட்பது ஒன்றே ஒன்று தான். தமிழ் சமூகம்  உங்களை மதிக்கும் அளவிற்கு ஒரு படம் எடுங்கள். ஹாலிவுட் இயக்குனர் உங்களைப்பாராட்ட வேண்டும் என்று படம் எடுக்காதீர்கள்.

முடிந்தால் இந்திய கலாச்சாரத்தைப்  பறைசாற்றும் வகையில் படம் எடுங்கள்.

இதைப்பற்றி எழுத நீ யார் என்று கேட்கலாம்? இது என் ப்ளாக், இது என் கை, இங்கே கருத்து சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.


இப்படிக்கு ,


அருள்செல்வன்
10 comments:

jai kumar said...

Very gud excellent questions sir.
Tamil, indian culture should go to world level, not foriegn culture come to tamil movie

haja sadiq said...

இதைப்பற்றி எழுத நீ யார் என்று கேட்கலாம்? இது என் ப்ளாக், இது என் கை, இங்கே கருத்து சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.


Really i like your above words

Good Post

Vaanathin Keezhe... said...

//இது என் ப்ளாக்.. என் கை.. இங்கே கருத்து சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.//

-சூப்பர்ப் அருள்..

Vaanathin Keezhe... said...

//தமிழ் சமூகம் உங்களை மதிக்கும் அளவிற்கு ஒரு படம் எடுங்கள்//
-அவருக்குத் தெரியாததை எடுக்கச் சொல்றீங்க!

Anonymous said...

Super....appa neengalae comment pottukonga...s

shuaib ahmed said...

Nandri Arul Selvan ... U must Watch this Link for more answers http://vimeo.com/58357482
please do watch fully

shuaib ahmed said...

Nandri arul Selvan .. Please Watch this http://vimeo.com/58357482

Anonymous said...

படத்த என்ன மா எடுதுருகான் ஒரு தமிழன் .. அதை பாரடுங்கட நா.. படம் பாத்தா தூக்கம் வருது .. கொசு வருது நு சொலுறது நிறுத்துங்க !!!
கதக் டான்ஸ் .. இபோ இருக்குற சினிமா நடிகர்கள் இவளோ நளினத்தோட யாராவந்து ஆட முடியுமா ??? ஒரே மனிஷன் Direction Production acting screenplay lyrics நு சினிமா ல உள்ள அத்தனை விஷயத்தையும் பன்னிருகரத பாராடுங்க !! வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு நு சொல்றிங்க லே .. முதல தமிழன வாழ வைங்க..அப்புறம் மத்தவன பாப்போம் … இந்திரன் படத்துல வர சீன் எல்லாமே நிஜ வாழ்க்கைல நடக்க முடியாது..!!! எதோ ஒன்னு ரெண்டு சீன் வர வாய்ப்பு இருக்கு.. ரோபோட் ஒரு பொண்ண காதலிச்சா நம்புவிங்க.. ஆனா தமிழன் ஒருத்தன் தீவிர வாதிகள அழிக்க OBL போனா நம்பமாடிங்க … யோவ்வ் எப்படி போனாங்க்ரத விட .. ஏன் போனான் .. என்ன பண்ணன் நு பாருங்க யா.. !! படம் நல்லா இல்ல மா யா ..CNN IBN.. Twitter.. Facebook.. Orkut.. IMBD.. Timesnow.. Sun.. நு எல்லா சேனல் ல படம் நல்லா இருக்கு நு விமர்சிகிறாங்க ?? … Twitter ல விஜய் மாலையா பார்த்துட்டு பாராட்றான்…ஆனா நாம மாட்டோம் !! என்ன யா இது…!! கேவலமா இல்ல…

எனக்குள் ஒருவன் said...

good questions

Anonymous said...

உலக தரம் வாய்ந்த தமிழ் படம்.. தமிழன்... இன்னும் என்னடா சொல்லுவீங்க.. நாசர், கமல், அன்டிரியா இவர்களை தவிர யாருடா இந்த படத்துல தமிழ்??? யோசிங்கடா... இவருக்கு கோவம் வந்தா தமிழ் நாட்ட விட்டு போயிடுவாராம்.. என்னங்கடா டேய்.. கவுண்டமனிய கூப்பிட்டு உங்கள தொரத்தனும்

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...