Tuesday, February 19, 2013

பிரபாகரன் மகன் - வேங்கையின் மைந்தன்
இன்று காலை நாம் பார்த்தப் புகைப்படம் சற்று நேரம் நெஞ்சை அடைப்பதாய் இருந்தது.போரின்போது கொல்லப்பட்டான் என்று சொல்லப்பட்ட பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின் பதுங்கு குழியில் இருப்பது போன்ற புகைப்படமும், அதன் பின்னர் தான் துப்பாகியால் கொல்லப்பட்டான் என்ற உண்மையும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

பல உணர்ச்சிகள் என் உள்ளத்தில் வந்தன.

ஒன்றும் அறியாத ஒரு சிறுவனை, பால் மனம் மாறாத பாலகனைக் கொன்றதை நினைத்து கண்ணீர் விடுவதா?ஈழத்துக்காக பலி கொடுத்த மாவீரன் பிரபாகரனின் வீரத்தை மெச்சுவதா?

குழந்தைகளைக் கொல்லும் கோழை இலங்கை ராணுவத்தை நினைத்து கோபப்படுவதா?

தன் குடும்பம் தான் முக்கியம் என்று பலர் இருக்க தன் குழந்தைகளையும் தமிழ் என்று புரியவில்லை.


இந்த கொழைத்தனத்தைப் பார்க்கும்போது ,

"என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...?’" என்று இலங்கை ராணுவத்தைப் பார்த்து தலைவர் ரஜினி கேட்ட கேள்வி தான் ஞாபகம் வருகிறது.

கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். விடியலை நோக்கும் அந்த விழிகளைப் பாருங்கள். இதைப் பார்த்துதான் அந்த கோழைகள் மிரண்டனரோ?இவர்கள் மனதில் பிரபாகரன்மேல் எந்த அளவு பயம் இருந்தால் அவர் பிள்ளையும் வேங்கையின் மைந்தனாக வர வாய்ப்பு உள்ளது என எண்ணி இந்த சிறு வயதிலேயே அவன் உயிரை எடுத்து இருப்பார்கள்?

."எந்த நாட்டில் பெண்களும், குழந்தைகளும், ஏழைகளும், அப்பாவி மக்களும் உதிரம் சிந்துகிறார்களோ அந்த நாடு உருப்படாது" என்று ரஜினி கூறினார். அது உண்மை ஆகட்டும். இந்த ஓநாய்களை விரைவில் இயற்கை தண்டிக்கட்டும். ஏனென்றால் நம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவால் அவர்களுக்கு ஒன்றும் நேரப் போவது இல்லை.

இங்கே ஒரு நடிகையின் மானத்திற்காக போராட ஒரு தலைவர் உண்டு, மாபெரும் கட்சி உண்டு.

இங்கே ஒரு நடிகனின் வியாபாரம் செய்யும் உரிமையைக்காக்க ஒரு மாபெரும் கூட்டம் உண்டு.

அடுத்த வேலை சோற்றுக்கு போராடும் 50% மக்கள் உண்டு.

ஆனால் தமிழனுக்காக, அல்லது மனித உரிமைக்காக போராட ஒரு நாதி இல்லை.

நண்பர்களே இதில் கலைஞரை மட்டும் நாம் குறைகூறி பிரோஜனம் இல்லை. நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம் அந்த நேரத்தில்? தென் ஆப்ரிக்காவில் நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.இப்பொழுது வருத்தப்படும் நாம் அனைவரும் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்பதை சிந்துத்துப் பார்க்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் ஒரு நல்ல தலைவர் உண்டாவதற்கு என்ன காரணம்? ஒரு தலைமுறையே சினிமா என்னும் மோகத்தில் விழுந்து கிடக்கிறது. நான் உட்பட. போராடும் எண்ணம் சுத்தமாக இல்லை. நாளையே ஆதிபகவன் படம் நன்றாக இருக்கிறது என்றால் அதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவோம். ஏன் ? நானே என் ப்ளாக்கில் திரை விமர்சனம் எழுதலாம். இது தான் நடந்து வருகிறது. இது தான் கண்டிப்பாக நடக்கும்.

அட போங்கப்பா! அடுத்த தலைமுறையாவது காப்பாத்துங்க!போராடும் குணத்தோடு குழந்தைகளை வளருங்கள்.

Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்


இந்த பதிவு கண்டிப்பாக உலக  சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காது. தொடர்ந்து படிக்க வேண்டாம்.            


         

கமல் படங்கள் மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பு கிடையாது. அதுவும் மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு கமல் படங்களைத்  தியேட்டரில் பார்க்கக்  கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால் வழக்கம்போல் கமல் ஒரு விளம்பரத்தைத்தேடி படம் பார்க்கும் எண்ணத்தை வரவழைத்து விட்டார்.

இந்த படம் பார்த்தப்போது எனக்கு ஒன்று புரிந்தது.

உலக நாயகன் கமல்ஹாசன் உலக சினிமாவை தான் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு கொண்டு போகவில்லை.

அதாவது ஆங்கிலத்தைத்  தமிழ்நாட்டிற்குக்  கற்பித்து அனைவரையும் அமெரிக்கர்போல மாற்றி விட்டேன் என்று கூறுவதற்கு சமம் இது. நம் தமிழை அல்லவா உலகிற்கு எடுத்து செல்ல வேண்டும்.

ஏற்கனேவே உதடோடு உதடு வைக்கும் காட்சிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து அரும்பாடு பட்டவர்.

கமல் ஒரு அறிவாளி, மேதாவி என்று எல்லாரும் கூறுகிறார்கள். இந்தியாவில் இன்னும் 90% பேர் வறுமை கோட்டிற்கு கீழும், கல்வி அறிவும் இல்லாதவர்கள் என்ற உண்மை எப்பொழுது இவருக்கு புரியபோகிறது ?

இவர்களுக்காக இவர் எப்பொழுது ஒரு படம் எடுப்பார்? ஈரானிய படங்களும், கொரிய படங்களும் அமெரிக்க படங்களுக்குப்  போட்டியாக இருக்கின்றன. அதுபோல் அல்லவா அவர் தமிழ் சினிமாவைக்  கொண்டு சென்று இருக்க வேண்டும்?

மாறாக தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறி கொண்டு அமெரிக்காவிற்கு நல்ல ஜால்ரா அடித்து இருக்கிறார்.

அடுத்த படத்தில் 15 கோடி சம்பளம் வாங்கி  விடும் நடிகருக்கு பணம் கொடுக்கத்  தயாராக இருக்கும் நம் தமிழ் நாட்டு  மக்கள் , நூறு முறை நான் வெளிநாடு போக தயாராக இருக்கிறேன் என்று கூறும் நடிகருக்கு தன் வீட்டுப்  பத்திரத்தைத்   தரும் தமிழ் நாட்டு மக்கள், கொஞ்சம் காவேரியில் தண்ணீர் வராமல், தமிழ்நாட்டில் வாழ வழி இல்லாமல் இருக்கும் விவசாய மக்களுக்கும் உதவி செய்தால் தமிழ்நாடு முன்னேற வாய்ப்பு  உள்ளது.

சரி விஸ்வரூபம் கதையாவது கொஞ்சம் தகவல் சேர்த்து எடுத்து இருப்பாரா? என்றால் அதுவும் இல்லை .

 முல்லா ஓமரை அடிக்கடி புகைப்படம் எடுப்பதைப்  போல காட்டுகிறார். முல்லா ஒமரின் புகைப்படம் கிடைக்காமல் அமெரிக்கா  திண்டாதுவது  அவருக்கு தெரியவில்லை போலும்.

 இவர் அல் கொய்தாவில் இணைவது போன்ற காட்சி, விருதகிரி படத்தில் ஸ்காட்லான்ட் யார்ட் போலீசில் விஜயகாந்த் சேரும் காட்சிக்கு இணையானது.

இந்த படத்தைப்பற்றி நான் விமர்சனம் பண்ண விரும்பவில்லை.

ஆனால்  கமல் அவர்களுக்கு நாம் கேட்பது ஒன்றே ஒன்று தான். தமிழ் சமூகம்  உங்களை மதிக்கும் அளவிற்கு ஒரு படம் எடுங்கள். ஹாலிவுட் இயக்குனர் உங்களைப்பாராட்ட வேண்டும் என்று படம் எடுக்காதீர்கள்.

முடிந்தால் இந்திய கலாச்சாரத்தைப்  பறைசாற்றும் வகையில் படம் எடுங்கள்.

இதைப்பற்றி எழுத நீ யார் என்று கேட்கலாம்? இது என் ப்ளாக், இது என் கை, இங்கே கருத்து சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.


இப்படிக்கு ,


அருள்செல்வன்
Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...