Monday, November 14, 2011

போதிதர்மன் தமிழரா?நான் யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதையும் எழுதுவதில்லை. பெருகி வரும் ஆங்கில மோகத்தில் தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தமிழில் சிந்திக்கும் திறன் மங்கிவிடக் கூடாது என்பதற்காகவும் தான் எழுதுகிறேன். நான் வேலாயுதம் பற்றி எழுதிய முந்தைய பதிவில் எனக்கு பல கேவலமான பின்னூட்டங்கள் வந்தன. அவர்களை நான புனபடுத்தி விட்டதாக அவர்கள் கருதினால் அதற்கு நான் வருந்துகிறேன்.

நேரு அவர்கள் கூறியதைப்போல், ஒருவருடைய சிந்தனை என்பது தாய் மொழியில்தான் உதிக்குமே தவிர பிற மொழியில் உதிக்காது. அவன் உள்ளத்தோடும் தாய் மொழியில்தான் பேசுவான். அதனால்தான் இன்னும் மொழி கலவரம் உலகம் எங்கும் பரவி இருக்கிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். நாம் முன்பே கூறியது போல இது யாரையும் நோகடிக்கும் விதத்தில் எழுதப்பட்டது அல்ல.நான் படித்த வரலாற்றை இங்கே பதிகிறேன்.

                 போதிதர்மன் தமிழரா?

 

போதிதர்மன் பல்லவ இளவரசன் என்று வரலாறு கூறுகிறது.அப்படி என்றால் பல்லவர்களைப் பற்றி வரலாறு என்ன கூறுகிறது?

பல்லவர்கள் முதலில் தெலுங்கு தேசத்தில் சில பகுதியை ஆண்டனர் என்று செப்பேடுகள் கூறுகின்றன. பல்லவர்களைப்பற்றிய முதல் குறிப்புகள் காணப்படுகின்ற இடங்கள் தற்போதைய ஆந்திராவில் உள்ள பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர்.

பல்லவ மன்னன் குமாரவிஷ்ணு காஞ்சிபுரத்தை கைப்பற்றியதை அடுத்து காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

ஆனால் கி.பி.450௦ ஆம் ஆண்டு முதல் கி.பி.600௦௦ ஆம் ஆண்டு வரை மீண்டும் காஞ்சிபுரம் சோழர்கள் வசம் இருந்தது என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

மீண்டும் பல்லவ மன்னன் சிம்ஹவிஷ்ணு ஆறாம் நூற்றாண்டு தொடக்கத்தில் காஞ்சிபுரத்தை கைபற்றினார் என்றும், அதன் பின்னர் வந்த மகேந்திர பல்லவன் மகாபலிபுரத்தில் சிற்பங்கள் நிறுவினார் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
 
மகேந்திர பல்லவன் புலிகேசியிடம் போரில் அவமானப்பட்டதாகவும், அதன்பின்னர் வந்த நரசிம்ம பல்லவன் புலிகேசியை போரில் வீழ்த்தியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.(சிவகாமியின் சபதம் இதை வைத்து பின்னப்பட்ட நாவல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று).

சரி விஷயத்துக்கு வருவோம்.
1)   பல்லவ மன்னர்கள் ஒருவரது பெயர் கூட தமிழில் அமைந்தது கிடையாது. சமஸ்கிரத்தில் தான் அமைந்து உள்ளது.

2)   போதிதர்மன் சீனாவிற்கு சென்றதாக சொல்லப்படும் நேரத்தில் (அதாவது கி.பி.450௦ முதல் 600௦ வரை) காஞ்சிபுரம் சோழர்கள் வசம் இருந்தது.அப்படி என்றால் அவர் காஞ்சிபுரத்தில் இருந்து தான் சீனதேசம் சென்றாரா? அப்படி சென்று இருந்தால் சோழர்கள் வசம் இருந்த காஞ்சிபுரத்தில் இருந்து அவர் எப்படி இலவரசராக சென்று இருப்பார்?


3)  மகேந்திரவர்மனக்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள வரலாற்றுப் பதிவுகள் தமிழில் இல்லையே அது ஏன்? அதனால் பல்லவர்கள் முதலில் தமிழ் அரசர்கள் இல்லை என்பது வரலாறு கூறும் நிஜம்.

இப்படி இருக்கையில் நாம் போதிதர்மன் தமிழரா? அல்லது வேறு நாட்டை சேர்ந்தவரா? என்பதை விட்டு விட்டு, அவர் இந்தியாவில் இருந்து சென்ற ஒரு மேதை என்று எடுத்துக்கொண்டால் தேவை இல்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுக்காது.

தெரியாத வரலாறைவிட, தவறான வரலாறு பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
 
ஏனென்றால், வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!

2 comments:

skvsaleem said...

போதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள் முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே !! ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.!

skvsaleem said...

போதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள் முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே !! ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.!

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...