Monday, October 31, 2011

ஏழாம் அறிவு- என்னுடைய அறிவில்(7 aum arivu review)


                     மீண்டும் இடி, மின்னல் 

                                         
நீண்ட நாட்களாக பதிவு எதுவும் எழுதாமல் இருந்தேன். இன்று என் பிறந்த நாள் அன்று மீண்டும் பதிவு எழுதுகிறேன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ரஜினி உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததில் இருந்து நான் எழுத வில்லை. ஏனோ எழுத மனம் கொள்ளவில்லை. ரஜினியின் சுறுசுறுப்பை பற்றி எழுதிய நமக்கு, அவர் உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறார் என்று  எழுத மனம் வரவில்லை.

     இதோ வந்து விட்டார் ரஜினி. பழைய உற்சாகம். கண்களில் மின்னல். இதைவிட அவர் குணம் அடைந்து விட்டார் என்று சொல்ல வேறு நிகழ்வு வேண்டுமா?

                  

இதோ நம் எழுத்து ஓட்டம தொடர்கிறது.

         ஏழாம் அறிவு- என்னுடைய அறிவில்

             

போதி தர்மனைப்பற்றி வரலாற்று தகவல்களுடன் வந்து இருக்கும் படம். படம் தொடங்கியதும் வரும் முதல் இருபது நிமிட காட்சிகள் அருமை. அந்த இருபது நிமிடத்தில் போதி தர்மனைப்பற்றி படத்திற்கு தேவையான விஷயங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதற்குப்பின் காட்சிகள் தற்போதைய காலத்தில் நகர்கின்றன. சீனாவால் இந்தியாவிற்கு வரபோகும் ஆபத்தை போதிதர்மனின் தற்போதைய வம்சாவழியான சூர்யாவிற்கு நவீன அறிவியல் மூலம் போதிதர்மனின் திறமையை வரவழைத்து, இந்தியாவை காக்கிறார் ஸ்ருதிஹாசன். இதுதான் எனக்கு புரிந்த கதை.

படத்தில் போதி தருமனாக வரும் சூர்யாவின் நடிப்பு அபாரம்.வில்லாக வரும் சீன நடிகரின் நடிப்பு மிரள வைக்கிறது. என்ன ஒரு நடை,பார்வை.
ஸ்ருதிஹாசன் பாடல்களில் அழகாக இருக்கிறார். ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது என்று சொல்ல நமக்கு அருகதை இல்லை. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜின் இசை கேவலமாக உள்ளது என்று சொல்ல நமக்கு அருகதை உண்டு. முடியல!

முருகதாஸ் அற்புதமான ஒரு இயக்குநர். ஆனால் இந்த படத்தில் திரைக்கதை மிகவும் நிதானம். பொறுமையை சோதிக்கிறது.

தற்போது இந்த படம் பார்த்தபின் நமக்கு எழுந்த சில கேள்விகள்:
௧) போதிதர்மனைப்பற்றி நீங்கள் தமிழர்களுக்கு தெரிய வைப்பதில் தவறு இல்லை. ஆனால் போதிதர்மன் தமிழர்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் போல, விட்டால் ராஜா ராஜா சோழன் ஆகியோரை விட மிக சிறந்தவராக சித்தரிப்பது ஏன்?

௨) தமிழைப்பற்றி பெருமையாக ஸ்ருதிஹாசன் பேசும் காட்சிகளை டப்பிங் செய்துவிட்டு பார்த்தீர்களா? தமிழை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது அந்த காட்சி

௩) சம்மந்தம் இல்லாமல் இலங்கை தமிழர்களை பற்றியும், மலேசியா தமிழர்களை பற்றியும் பேசும் வசனம் ஏன்?
தமிழர்களின் உணர்ச்சியைத்தூண்டி படத்திற்கு விளம்பரம் தேடத்தானே?

௪) வில்லன் மிக சிறந்த கராத்தே வீரராக இருந்தும் பார்வை மூலமாக எத்தனை பேரைத்தான் வீழ்த்துவார்? சலிப்புதான் ஏற்படுகிறது.

௫) இந்த மாதிரி தமிழர்களின் பெருமை சொல்லும் படத்தில், அரை ஆடையுடன் டூயட் காட்சிகள் தேவையா?

எனினும், போதி தர்மன் என்ற ஒரு தமிழனை அடையாளம் காட்டியதில் முருகதாஸ் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார்.
 

4 comments:

RAJA said...

Gethu machi....
Unnoda aarvatha parthu than enakum thalaivar mella oru puthu mariyatha varuthu ya..
keep going machi...

Anonymous said...

bodhi dharman, En thanadhu Thiramaiyai Thamizharuku alladhu Bharatha desathavarku ( andra, karnataka, and northern states of india ) Sollitharavillai ???? en china virku solli thara pogirar ?

Vaanathin Keezhe... said...

//சம்மந்தம் இல்லாமல் இலங்கை தமிழர்களை பற்றியும், மலேசியா தமிழர்களை பற்றியும் பேசும் வசனம் ஏன்?
தமிழர்களின் உணர்ச்சியைத்தூண்டி படத்திற்கு விளம்பரம் தேடத்தானே?//

-உண்மை

இனியன் said...

சினிமா உலகில் விளம்பரம் இல்லாமல் இருக்க முடியுமா?

அதுசரி...சம்பந்தம் இல்லைன்னு எப்படிச் சொல்றீங்க..அந்த வசனங்கள் நிகழ்கால சூர்யாதானே..பேசுகிறார்...'எப்ப திருப்பி' அடிக்க என்று...

பார்க்க என் விமர்சனமும்...
http://pattarivu.blogspot.com/2011/11/blog-post_11.html

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...