Wednesday, February 23, 2011

மலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்


                  மலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்: 

                       


மலேசியா வாசுதேவன் அவர்களை நான் ஒரு முறை நேரில் கண்டு இருக்கிறேன். அரக்கோணத்தில் ஒரு கோயில் திருவிழா. திருவிழாவிற்கு மலேசியா வாசுதேவன் அவர்களின் பாட்டுக் கச்சேரி. அப்பொழுது பாபா பட பாடல்கள் வெளியாகி இருந்த சமயம். கூட்டத்தில் இருந்த அனைவரும் பாபா பட பாடலைப் பாட சொல்லி கேட்டுக்கொண்டார்கள்.

அப்பொழுது அவர் மாயா மாயா பாடலை பாடினார். அந்த தருணம், அந்த குரல் தற்போதும் என் காதில்  ஒலித்துக் கொண்டு இருக்கறது. பொதுவாக ரஜினி படத்தின் பாடல்களை யார் பாடினார்கள் என்று நான் அவ்வளவாக அலட்டிக்கொண்டது இல்லை.

ஆனால் மலேசியா வாசுதேவன் அவர்கள் இறந்ததில்  இருந்து அவர் பாடிய அனைத்து ரஜினி பாடல்களிலும் எனக்கு
மலேசியா வாசுதேவன் அவர்கள்தான் தெரிகிறார். ரஜினி தெரியவில்லை. முதல் முறையாக நான் பாடலை ரஜினி பாடுவதுபோல் உணரவில்லை. மலேசியா வாசுதேவன் தனியாக பாடல்களில் தெரிந்தார்.

நான் மலேசியா வாசுதேவன் அவர்கள் ரஜினிக்கு பாடிய,எனக்கு பிடித்த சிறந்த ஐந்து பாடல்களை தொகுத்து உள்ளேன்.

பாடல் 5

ஆசை நூறு வகை - அடுத்த வாரிசு

இந்த பாடலை கேட்டவுடன் வரும் குதுகலத்தை என்னவென்று சொல்வது.
"முத்துரதம் போலே சுத்தி வரும் பெண்கள்"

என்ற மலேசியா வாசுதேவனின் குரல் மற்றும் தலைவரின் நடனமும் நம்மை மகிழ்ச்சியின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்.

"
தினம் நீயே செண்டாகவே, அதில் நான்தான் வண்டாகவே!"

என்று உச்ச சாயலில் மலேசியா வாசுதேவன் முடிக்கும்போது நாமும் ஆட்டம் போட்டு முடித்து இருப்போம் "

               


பாடல் நான்கு:

என்னமா கண்ணு சௌக்கியமா? - மிஸ்டர்.பாரத்

இந்த பாடல் இத்தனை  நாள்வரை எனக்கு மலேசியா வாசுதேவன்தான் பாடினார் என்பது தெரியாது. நான் இதுநாள்வரை இந்த பாடலில் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைலில் மதி மயங்கிபோய் அவர்தான் பாடுகிறார் என்று நினைத்தேன். இவ்வாறு ரஜினிதான் பாடுகிறார் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு  அவருடைய குரல் அமைந்து இருந்தது.

                   


பாடல் மூன்று:

மனிதன் மனிதன் -  மனிதன்

இந்த பாடலை படத்தின் நீலம் காரணமாக நீக்கி விட்டார்கள். ஒருமுறை ரஜினி ஷூட்டிங்கில் அமர்ந்து இருக்கும்போது இந்த பாடலை இசைதட்டில் கேட்டு இருக்கிறார். எந்த படத்தில் இந்த பாடல் என்று வினவி இருக்கிறார். நம் படத்தில்தான் இந்த பாடல், ஆனால் நீலம் காரணமாக நீக்கி விட்டோம் என்று கூறினார்கள். இந்த பாடலை படத்தில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி கேட்டதற்காக டைட்டில் பாடலாக சேர்த்தார்கள். பிற்காலத்தில் அது ரஜினி ரசிகர் மன்றத்தின் தேசிய கீதமாக மாறியதற்கு, மலேசியா வாசுதேவன் குரலும், வைரமுத்துவின் வைர வரிகளும்தான் காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
           

"கொடுப்பவன் மனிதனா? எடுப்பவன் மனிதனா? "

இந்த மாதிரி பாடல்களை பாடியவன்தான் மாமனிதன்.

             

பாடல் இரண்டு:

பெத்து எதுத்தவதான் - வேலைக்காரன்

தாய் பாசத்திற்காக எங்கும் ஒரு மகனின் சோகத்தை தன் குரலில் காட்டி நம்மை எல்லாம் சோகத்தில் முழ்கடித்து இருப்பார். தமிழில் வெளியான மிக சிறந்த சோக பாடல்களில் ஒன்று.

"நெஞ்சு கிழிஞ்சுடுச்சு எங்க முறையிடலாம்"

என்று அவர் பாடியது நம் அனைவர் மனதையும் இப்பொழுது கண் கலங்க வைக்கிறது.

                      

பாடல் ஒன்று:

ஒரு கூட்டு கிளியாக -படிக்காதவன்

இந்தப்பாடல் சிவாஜி பாடுவதுபோல் அமைந்து இருந்தாலும், ரஜினிக்கும் சில இடங்களில் பின்னணியில் ஒலிக்கும், ஆதலால் இதனை குறுப்பிடுகிறேன். வாழ்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணன் கூறும் கருத்தைபோல் அமைந்து இருக்கும் இந்த பாடல். எப்பொழுது கேட்டாலும் என்னுள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

"நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வியர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா?"

என்று மலேசியா வாசுதேவன் பாடிய வரிகளுக்கு ஏற்ப அவர் உழைத்ததால்தான் இன்று அவர் இறந்தவுடன் தமிழ்நாடு சோகத்தில் ஆழ்ந்தது.

                  

அவருடைய புகழ் இசை உலகம் உள்ளவரை வாழ எல்லாம்வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்.

4 comments:

Krishnan said...

Nice, But you should have mentioned "Malaysia Rajiniku padiya sirandha 5 paadalgal"

Anonymous said...

நீ ரஜினியின் புகழைப் பாடுவதற்காக இந்த ப்ளாக் எழுதி இருக்கிறாய். இதற்கு மலேசிய வாசு தேவனின் பெருமைகளை நீ சொல்லாமல் இருந்திருக்கலாம். இந்த மாதிரி ரஜினி என்ற கிறுக்கனின் புகழ் போதைக்கு ஏன் அடிமையாகி விட்டாய். ? இதுல நீ சில நல்ல படங்களை விமர்சனம் என்ற பெயரில் காயப்படுத்துகிறாய். முதல்ல நீ ரஜினி என்ற தனி மனிதனை வழிபடுவதை நிறுத்து. நல்ல படைப்புகளை நேசி.

arul said...

@Anonymous,

ரஜினி என்ற ஒரு நல்ல மனிதரை வழிபடுவதில் என்ன தவறு இருக்கிறது. எப்பொழுதும் நல்லவர்கள் கிறுக்கர்கள்போலதான் தெரிவார்கள்.

Anonymous said...

அருள், தனது சுயலாபத்திற்காக ரசிகர்களை பகடைக்காயாக மாற்றும் ரஜினி நல்லவரில்லை. உதாரணம் ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம். கிறுக்கன் என்று நான் சொன்னது அவரது படங்களில் நடிக்கும் கோமாளித்தனமான சைகைகளும் சேஷ்டைகளையும் தான். ஒரு நல்ல நடிகன் என்பவன் தனது ரசிகர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்காமல், புத்தியை மழுங்கடிக்காமல், ரசிகனின் சுய சிந்தனையை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்வது. ஆக ரஜினி நல்லவனில்லை. முதலில் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் ரஜினி நடிக்கட்டும். சினிமா என்பது வெறும் கூத்தாடி பொழுதுபோக்கு மட்டுமே இல்லை. நல்ல படைப்பாளிகள் எத்தனையோ பேர் வெளியில் உள்ளனர். ஒரு வருடத்திற்கு ஒரு படமேனும் , குறைந்த சம்பளத்தில் அல்லது ஏதேனும் ஒரு படத்தில் சம்பளமே இல்லாமல் ஒரு நேர்மையான படைப்பாளியின் படத்தில் நடிக்கலாம். இது தான் ஒரு நல்ல நடிகனுக்கு அடையாளம். இந்த தைரியம் உங்கள் கேவலமான சூப்பர் ஸ்டாரிடம் உள்ளதா ? கிடையாது.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...