Wednesday, February 23, 2011

மலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்


                  மலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்: 

                       


மலேசியா வாசுதேவன் அவர்களை நான் ஒரு முறை நேரில் கண்டு இருக்கிறேன். அரக்கோணத்தில் ஒரு கோயில் திருவிழா. திருவிழாவிற்கு மலேசியா வாசுதேவன் அவர்களின் பாட்டுக் கச்சேரி. அப்பொழுது பாபா பட பாடல்கள் வெளியாகி இருந்த சமயம். கூட்டத்தில் இருந்த அனைவரும் பாபா பட பாடலைப் பாட சொல்லி கேட்டுக்கொண்டார்கள்.

அப்பொழுது அவர் மாயா மாயா பாடலை பாடினார். அந்த தருணம், அந்த குரல் தற்போதும் என் காதில்  ஒலித்துக் கொண்டு இருக்கறது. பொதுவாக ரஜினி படத்தின் பாடல்களை யார் பாடினார்கள் என்று நான் அவ்வளவாக அலட்டிக்கொண்டது இல்லை.

ஆனால் மலேசியா வாசுதேவன் அவர்கள் இறந்ததில்  இருந்து அவர் பாடிய அனைத்து ரஜினி பாடல்களிலும் எனக்கு
மலேசியா வாசுதேவன் அவர்கள்தான் தெரிகிறார். ரஜினி தெரியவில்லை. முதல் முறையாக நான் பாடலை ரஜினி பாடுவதுபோல் உணரவில்லை. மலேசியா வாசுதேவன் தனியாக பாடல்களில் தெரிந்தார்.

நான் மலேசியா வாசுதேவன் அவர்கள் ரஜினிக்கு பாடிய,எனக்கு பிடித்த சிறந்த ஐந்து பாடல்களை தொகுத்து உள்ளேன்.

பாடல் 5

ஆசை நூறு வகை - அடுத்த வாரிசு

இந்த பாடலை கேட்டவுடன் வரும் குதுகலத்தை என்னவென்று சொல்வது.
"முத்துரதம் போலே சுத்தி வரும் பெண்கள்"

என்ற மலேசியா வாசுதேவனின் குரல் மற்றும் தலைவரின் நடனமும் நம்மை மகிழ்ச்சியின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்.

"
தினம் நீயே செண்டாகவே, அதில் நான்தான் வண்டாகவே!"

என்று உச்ச சாயலில் மலேசியா வாசுதேவன் முடிக்கும்போது நாமும் ஆட்டம் போட்டு முடித்து இருப்போம் "

               


பாடல் நான்கு:

என்னமா கண்ணு சௌக்கியமா? - மிஸ்டர்.பாரத்

இந்த பாடல் இத்தனை  நாள்வரை எனக்கு மலேசியா வாசுதேவன்தான் பாடினார் என்பது தெரியாது. நான் இதுநாள்வரை இந்த பாடலில் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைலில் மதி மயங்கிபோய் அவர்தான் பாடுகிறார் என்று நினைத்தேன். இவ்வாறு ரஜினிதான் பாடுகிறார் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு  அவருடைய குரல் அமைந்து இருந்தது.

                   


பாடல் மூன்று:

மனிதன் மனிதன் -  மனிதன்

இந்த பாடலை படத்தின் நீலம் காரணமாக நீக்கி விட்டார்கள். ஒருமுறை ரஜினி ஷூட்டிங்கில் அமர்ந்து இருக்கும்போது இந்த பாடலை இசைதட்டில் கேட்டு இருக்கிறார். எந்த படத்தில் இந்த பாடல் என்று வினவி இருக்கிறார். நம் படத்தில்தான் இந்த பாடல், ஆனால் நீலம் காரணமாக நீக்கி விட்டோம் என்று கூறினார்கள். இந்த பாடலை படத்தில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி கேட்டதற்காக டைட்டில் பாடலாக சேர்த்தார்கள். பிற்காலத்தில் அது ரஜினி ரசிகர் மன்றத்தின் தேசிய கீதமாக மாறியதற்கு, மலேசியா வாசுதேவன் குரலும், வைரமுத்துவின் வைர வரிகளும்தான் காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
           

"கொடுப்பவன் மனிதனா? எடுப்பவன் மனிதனா? "

இந்த மாதிரி பாடல்களை பாடியவன்தான் மாமனிதன்.

             

பாடல் இரண்டு:

பெத்து எதுத்தவதான் - வேலைக்காரன்

தாய் பாசத்திற்காக எங்கும் ஒரு மகனின் சோகத்தை தன் குரலில் காட்டி நம்மை எல்லாம் சோகத்தில் முழ்கடித்து இருப்பார். தமிழில் வெளியான மிக சிறந்த சோக பாடல்களில் ஒன்று.

"நெஞ்சு கிழிஞ்சுடுச்சு எங்க முறையிடலாம்"

என்று அவர் பாடியது நம் அனைவர் மனதையும் இப்பொழுது கண் கலங்க வைக்கிறது.

                      

பாடல் ஒன்று:

ஒரு கூட்டு கிளியாக -படிக்காதவன்

இந்தப்பாடல் சிவாஜி பாடுவதுபோல் அமைந்து இருந்தாலும், ரஜினிக்கும் சில இடங்களில் பின்னணியில் ஒலிக்கும், ஆதலால் இதனை குறுப்பிடுகிறேன். வாழ்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணன் கூறும் கருத்தைபோல் அமைந்து இருக்கும் இந்த பாடல். எப்பொழுது கேட்டாலும் என்னுள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

"நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வியர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா?"

என்று மலேசியா வாசுதேவன் பாடிய வரிகளுக்கு ஏற்ப அவர் உழைத்ததால்தான் இன்று அவர் இறந்தவுடன் தமிழ்நாடு சோகத்தில் ஆழ்ந்தது.

                  

அவருடைய புகழ் இசை உலகம் உள்ளவரை வாழ எல்லாம்வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்.

Sunday, February 20, 2011

உலக கோப்பை கிரிக்கெட் நடப்பது என்ன


                       உலக கோப்பை கிரிக்கெட் நடப்பது என்ன:

              


உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பித்து விட்டது. எல்லா அணிகள் ஆடும் போட்டிகள் குறித்தும் கட்டுரை எழுத வேண்டும் என்று அவா இருந்தாலும். நேரமின்மை காரணமாக இந்தியா ஆடும் போட்டிகள் குறித்தும், சில முக்கியான போட்டிகள் குறித்தும் என்னுடைய பார்வையை இங்கே பதிகிறேன்.

பிப் 16 சரியாக 15 ஆண்டுகள் முன்பு 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவும் கென்யாவும் மோதின. அதுவும் அப்பொழுது இந்தியா ஆடிய முதல் போட்டிதான். அந்த ஒன்பது வயதில் எனக்கு இருந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இப்பொழுது உலக கோப்பை போட்டியில் இருக்கிறதா என்றால் நிச்சயம் கிடையாது.

               

அந்த போட்டியில் ஒபெனிங் இறங்கிய ஒரே ஒரு வீரர் தான் இப்பொழுதும் இந்த உலக கோப்பையில் விளையாடுகிறார். அவர் யார் என்று நாம் கூறி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.அவர் தான் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இது ஒன்றே அவர் எப்படி பட்ட ஆட்டக்காரர் என்று கூறுவதற்கு போதுமானது. அனேகமாக இது அவருக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். அப்படி இருக்குமானால் நான் உட்பட இந்தியாவில் நிறைய மக்கள் பார்க்கும் கடைசி உலக கோப்பை போட்டி இதுவாகதான் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

நான் குறிப்பிட்ட அந்த போட்டியில் சச்சின் 127 ரன்கள் எடுத்தார். அதேபோல் நேற்று நடந்த இந்தியா பங்களாதேஷ் போட்டியையும் சதத்துடன் ஆரம்பம் செய்வார் என்று மிக ஆர்வமாக இருந்தேன்.


அதற்கு ஏற்ற மாதிரி சச்சினும் சேவாகும் மிக சிறப்பாக தொடங்கினர். சச்சின் தனது மட்டையில் வித்தைகள் காட்டி கொண்டு இருந்தார். அவர் பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் வீசும் கேவலமா பந்தில் வெளியேற மாட்டார் என்று நினைத்தேன். அது போலவே அவர் ரன் அவுட் ஆகி விட்டார்.ரன் அவுட் ஆகி விட்டார் என்பதை விட ரன் அவுட் ஆக்கப்பட்டார் என்பதே சரியாக இருக்கும். கங்குலியுடன் சில காலம் ஒபெனிங் இறங்கியதாலா என்று தெரியவில்லை இன்னும் சேவாகுக்கு ரன் ஓடவே தெரியவில்லை.

அல்லது கங்குலியுடன் இறங்கியதால் அவருடைய வில்லத்தனத்தை கற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை. ஏதோ ஒன்று சச்சின் வெளியேறிவிட்டார்.எனக்கு வழக்கம்போல் ஆட்டத்தின் மேல் இருந்த ஈர்ப்பு போய்விட்டது.

என்னடா இவன் நாட்டின் மீது ஒரு பாசம் இல்லாமல் பேசுகிறான் என்று நினைத்து விடாதீர்கள். எப்பொழுதும் சச்சின் ஜெயித்து கொடுத்தால் தான் மேட்ச் பார்த்த ஒரு திருப்தி இருக்கும். ஒரு படத்தில் ஹீரோ வந்து வில்லனை அடித்து நாட்டை காப்பாற்றினால்தான் நன்றாக இருக்கும்.நகைச்சுவை நடிகர்கள் வந்து வில்லனை அடித்து நாட்டை காப்பாற்றினால் கேவலமாக இருக்கும். அதுபோல்தான் என்னை பொறுத்தவரை சச்சின் இல்லாமல் மற்றவர்கள் அடித்து இந்தியாவை ஜெயக்க வைப்பது.


கோஹ்லி மற்றும் சேவாகின் சிறந்த ஆட்டத்தால் இந்திய அணி 370 ரன்களை எட்டியது.

                       

என்னை விட மோசமாக யாராலும் பந்து வீச முடியாது என்று பங்கலாதேஷ் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் பந்து வீசினார் ஸ்ரீசாந்த. இவரை அணியல் சேர்த்ததற்கு தனது பங்கை செய்து விட்டு சென்று விட்டார்.


கடைசியில் இந்திய அணி வெற்றி பெற்று, வெற்றி முகத்துடன் உலக கோப்பை போட்டியை தொடங்கி உள்ளது.இனிவரும் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று நம்பலாம்.

நான் மற்றவர்கள் கூறுவது போல் சச்சின் இருக்கும்போது நாம் கோப்பையை பெறுவது நமக்கு பெருமையான விஷயம் என்று கூறி நான் சச்சினை சிறுமை படுத்த விரும்பவில்லை. சச்சின் கையால் அந்த கோப்பை தவழ்வது அந்த கோப்பைக்குதான் பெருமை.
Wednesday, February 16, 2011

ரஜினிகாந்த் இந்தியன் ஒப் தி இயர்-NDTV INDIAN OF THE DECADE

                               NDTV  INDIAN OF THE DECADE-ENTERTAINMENT

                                      

எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. இதை எழுதும்போது தலைவர் ரஜினி விருது வாங்கும் அந்த விழாவை குறைந்தது பத்து முறை பார்த்து விட்டேன். நெகிழ்ச்சியான தருணம். இன்னும் எத்தனை முறை தான் நாம் இருக்கும் காலத்தில் ரஜினியும், சச்சினும் நமக்கும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் சச்சினும் வந்து இருந்தால் தலைவரையும், சச்சினையும் ஒன்றாக பார்க்கும் அந்த பாக்கியம் கிடைத்து இருக்கும். சரிதான் ஒரு சமயத்தில் ஒரு கடவுளின் தரிசனம் கிடைப்பதே கடினம்தான்.

நிகழ்ச்சி தொகுப்பாளர், இந்தியாவில் 2010  யில் ஒரு படத்தை காலை 4  மணிக்கு ஹவுஸ் புல்லாக ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் இதை விட வேறு என்ன இருக்க முடியும் என்று ரஜினியை அழைத்ததை யாரால் தான் பெருமை கொள்ளாமல் பார்க்க முடியும். ப.சிதம்பரம்  கையால் இந்த விருதினை ரஜினி பெற்றுக்கொண்டார்.

ப.சிதம்பரம், ரஜினி தற்போது அரசியலுக்கு வந்தால் கூட அமோக வெற்றி பெறுவார் என்று கூறினார்.
                                                  

நிகழ்ச்சியில் தலைவர் அவ்வளவாக பேசவில்லை. இருந்தாலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்.

1 ) ரோபோ உங்கள் வாழ்கையில் சிறந்த படமாக கருதுகீர்களா?

ஆமாம். இப்போது வரை ரோபோதான் சிறந்த படம்.

2 )இதுபோன்ற ஒரு வெற்றியை எதிர் பார்த்தீர்களா?

நிச்சியமாக இல்லை

3 )இவ்வளவு அடக்கமாக இருக்க காரணம்?

நான் பெற்ற வெற்றிக்கு என்னுடைய இயக்குனரும். தயாரிப்பாளர் மற்றும் இறைவன் தான் காரணம். எல்லா புகழும்  அவர்களுக்குதான்.

4 ) அரசியல் பற்றி?
நோ கமெண்ட்ஸ்

இந்த நேரத்தில் நான் ஒன்று கூறி கொள்ள கடமை பட்டு இருக்கிறேன்.2008 யில் இந்த விருது வாங்கும் போதும் ஷங்கரின் பங்கை நாம் மறக்க முடியாது. அதேபோல் இந்த வருடமும் ஷங்கரின் படத்திற்கு தான் விருது கிடைத்து இருக்கிறது. 
                                                       
                     
அதனால் ஷங்கருக்கு நம்முடைய நன்றிகள்.Sunday, February 6, 2011

யுத்தம் செய் - திரை விமர்சனம் Yutham Sei - review


                            யுத்தம் செய் - திரை விமர்சனம்

                

நந்தலாலாவிற்கு பிறகு வந்து இருக்கும் மிஷ்கினின் அடுத்த படைப்பு.சேரன் படத்தின் நாயகன் என்பதால் சற்று தயங்கிதான் போனேன். எங்கே வாயை ஓப் என்று வைத்து கொண்டு அழுவரோ என்று? ஆனால் இது ஒரு சிறந்த படம்தான் என்பது படம் தொடங்கி சிறுது நேரத்துலேயே தெரிந்து விட்டது.

படத்தின் கதை: தொடர்ச்சியாக வெட்டப்பட்ட கைகள் சென்னை மாநகரம் முழுதும் அட்டைபெட்டியில் வைக்க படுகின்றன.இதனை யார் செய்கிறார்கள், அதை எப்படி போலீஸ் அதிகாரியான சேரன் கண்டு பிடிக்குறார் என்பது தான் படத்தின் கதை.

சேரன் போலீஸ் அதிகாரியாக கன கட்சிதமாக நடித்து இருக்கிறார். ஹோட்டலில் கொலை செய்யப்பட்டவரை பார்த்துவிட்டு தான் உள்ளே வரும் பொழுது எதிரே வந்தவரை துரத்திக்கொண்டு ஓடுவது பிரமாதம்.ஒய் ஜி மகேந்திரன், அவருக்கு மனைவியாக நடித்துள்ள லட்சுமி ஆகியோர் மிக நன்றாக நடித்துள்ளனர்.

படத்தின் தொடக்க காட்சியில் தன் உதவியாளர்களின் பயோடேட்டாவை  சேரன் குப்பையில் தூக்கி போடும் காட்சி  எனக்கு செவென் திரைப்படத்தை நினைவு படுத்தியது. படத்தின் மேலும் சில காட்சிகளும் இந்த படத்தின் இன்ஸ்பிரேஷனாகவே தெரிந்தது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் இது ஒரு நல்ல திரில்லர் படம் தான்.

ஒளிபதிவாளர் சத்யா கலக்கி உள்ளார். இருந்தாலும் மிஸ்கின் படம் என்பதற்காக பெரும்பாலும் கால்களை காட்டுவது சற்று சலிப்பு ஏற்றதான் செய்கிறது.தியட்டரில் பின்னாடி ஒருவர் "இது மிஸ்கின் படம்தான் ஒத்துகிறோம்" என்ற கமெண்டும் காதில் விழுந்தது.படத்தில் கே-வின் இசை அருமை.

படத்தின் பிற்பாதி ஈசன் படம் போலவும் உள்ளது. தங்களுடைய படத்தை பற்றி தாங்களே கலைஞர் டிவியில் புகழ்ந்து கொள்ளும் போது சசிகுமாரும், மிஷ்கினும் அவர்கள் படத்தின் கதையை பற்றி பேசி இருந்தால் இதை  தவிர்த்து இருக்கலாம்.

இருந்தாலும் தமிழில் இந்த புதிய முயற்சிக்காக மிஷ்கினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...