Thursday, January 20, 2011

காவலன் திரை விமர்சனம் - kaavalan review

               காவலன் ஒரு கண்ணோட்டம் 



 விஜயின் படங்களை திருமலைக்கு பிறகு சுத்தமாக வெறுத்தவன் நான். விஜய் என்ற தனி மனிதரையும் அவருடைய முன்னுக்கு பின் வினோதமான செயல்பாடுகளால் வெறுத்த பலரில் நானும் ஒருவன். ஒருவருடைய ஆக்கமும் அழிவும் அவருடைய செயல்பாடுகளால் இருக்க வேண்டுமே தவிர அது மற்றவர்களால் வற்புறுத்தி அமைய கூடாது.

  படம் எங்கள் ஊரில் ரிலீஸ் ஆனதா? அல்லது ஆகவில்லையா என்பதை தெருவிக்க ஒரு சின்ன போஸ்டர் கூட கிடையாது. ஆனால் இந்த படம் எங்கள் ஊரிலேயே ஒரு மட்டமான திரைஅரங்கில் ரிலீஸ் ஆகி இருந்தது. இதற்கு அரசியல்  நிர்பந்தம் காரணமா? அல்லது திரை அரங்கு உரிமையாளர்கள் காரணமா என்று தெரியவில்லை. அரசியல் நிர்பந்தம் தான் காரணம் என்றால் நான்கு சினிமாவில் நடித்தால் முதல்வர் ஆகலாம் என்ற கனவை ஓரம் கட்டி வைத்து விட்டு தன்னுடைய ரசிகர்கள் மூலமாக நற்பணிகளை செய்தால் பதவிகள் தானாக வரும்.

திரை அரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் கேட்டதுதான் காரணம் என்றால் அது மிக பெரிய தவறு. என்னை கேட்டால் தலைவர் ரஜினி பாபா படத்திற்கு நஷ்டம் கொடுத்தது மிக பெரிய தவறு என்பேன். இந்த விஷயத்தில் கமல் கூறியது மிக சரியான வார்த்தை. இது மிக பெரிய தவறான முன் உதாரணமாகிவிடும் என்றார். வியாபாரத்தில் லாபம் அடைந்தால் அவர்களே வைத்து கொள்வதும், நஷ்டம் ஏற்பட்டால் அதை நடிகர்களிடம் கேட்பதும் எந்த விதத்தில் நியாயம். படத்தை போட்டு பார்த்துதானே வாங்குகிறார்கள். படம் பார்க்க வரும் ரசிகன் படம் நன்றாக இல்லை என்று திரை அரங்குகளில் பணத்தை திருப்பி கேட்டால் இவர்கள் நிலைமை என்னாவது?

இத்தனை எதிர்ப்புகளையும் மீறி படத்தை திரையிட்டு உள்ளார் விஜய்.படத்திற்கு நான் சென்றபோது நல்ல கூட்டம்.யாருடைய உழைப்பையும் மற்றவரால் தடுக்க முடியாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

படத்தின் கதை: அசினுக்கு காவலனாக போகும் விஜய், அசினைதான் காதல் செய்கிறோம் என்று தெரியாமல் தொலைபேசியில் காதல் கொள்கிறார். இதற்கு பின் நடக்கும் காட்சிகள்தான் நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்.

விஜய் படத்தில் வழக்கமாக வரும் பஞ்ச் வசனங்கள் இல்லை. தொடர் தோல்விகள் கற்று கொடுத்து இருக்கலாம். ஆர்ப்பாட்டம் இல்லை. அலட்டல் இல்லாத நடிப்பு.காதலுக்கு மரியாதை விஜய் போல் வந்து போகிறார். ராஜ்கிரணுக்கு படத்தில் வாய்ப்பு அதிகம் இல்லை. அசின் தன் பங்கை நிறைவு செய்கிறார்.

மொத்தத்தில் இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படம் என்று கூறலாம். 
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

2 comments:

bala said...

Nice comment.... i accept this...

kalai said...

May be BABA is rajini's own production hence he returned back money like wise theatre owners should raise the question towards producer not vijay (can they ask producers of vijays previous flicks?). so clearly shows it's not a pressure from theatre owners.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...