Saturday, January 29, 2011

காந்தியின் ஆன்மா

                                      காந்தி நினைவு நாள் விழா:
                     
                  
                   


மகாத்மா காந்தியின் 63 வது நினைவு நாள் விழா ஜன-30 ஆம் தேதி கொண்டாட படுகிறது..இந்த 63 வது நினைவு நாளில் ஆவது காந்தியின் ஆன்மா சாந்தி அடைந்து இருக்குமா என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.

காந்தி கிராமங்களில் மனிதரின் நிலைக்கண்டு ஆடை அணிவதை விட்டதாக நாம் படித்து இருக்கிறோம். ஆனால் அவர் கால்களை பார்க்கவில்லை என்று நினைக்கிறன். பூமத்திய ரேகை பாயும் இந்தியாவில் இன்று வரை 20% பேர் காலணிகளை அணிவது இல்லை. அது ஒரு ஆடம்பர பொருள் என்று நினைக்கும் அளவில் இன்னும் 20% மக்கள் உள்ளார்கள் என்பது இன்னும் வேதனை. அப்படி பார்த்து இருந்தால் அவர் செருப்பு அணிவதையும் விட்டு இருப்பார் என்று நினைக்கிறன்.

பாலரும் தேனாறும் ஓடும் என்று கூறிய இந்திய திருநாட்டில் மது ஆறு நன்றாக ஓடுகிறது. மது கடைகளில் இந்த வருடத்தில் இவ்வளவு லாபம் ஈட்ட வேண்டும் என்று கையெழுத்து இட்டுவிட்டு அதே கையால் காந்திக்கு மாலை இடுவது எவ்வளவு பெரிய கொடுமை.

இதுவா காந்தி எதிர் பார்த்த இந்தியா? இதற்கு சுபாஷ் சந்திர போஸ் போல காந்தியும் மறந்து இருந்தால் நன்றாக இருக்கும்.இன்னமும் காந்தியை அரசியல்வாதிகள் நினைப்பது ஓட்டுக்க்காகதான் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததுதான்.

நள்ளிரவு 12 மணிக்கு பெண்கள் வெளியில் செல்ல வேண்டும் என்று கூறினார். அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் என்றும் கூறினார். ஆனால் இப்பொழுது பகல் 12 மணிக்கு கூட பெண்கள் வீட்டில் இருக்க பயப்படுகிறார்கள்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் என அனைத்தும் சுதந்திர இந்தியாவில் அதிகப்படியாக நடக்கின்ற ஒன்றாகி விட்டது.

எவ்வளோவோ நல்ல கலாச்சாரங்களையும் மனிதர்களையும்  மறந்து விட்டோம் அந்த வரிசையில் காந்தியையும் மறந்து விட்டால் அவருடைய ஆன்மாவுக்கு சிறிதாவது சாந்தியை கொடுக்கும்.

ரஜினியின் புதிய படம் ராணா

                                   ரஜினியின் புதிய படம் ராணா:


                                                  


தலைவர் ரஜினியின் புதிய படம் ராணா என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கே.எஸ். ரவி குமார் இயக்குகிறார். இது பற்றிய அறிவிப்பை கீழே காண்க.நன்றி: என்வழி

Tuesday, January 25, 2011

காவலன் ஒரு புன்னகை பூ

                                       காவலன் ஒரு புன்னகை பூ:

இந்த தலைப்பை பார்த்தவுடன் என்னடா காவலன் திரைபடத்திற்கு இவன் மறுபடியும் விமர்சனம் எழுதுகிறான் என்று நினைத்து விடாதீர்கள்.நான் பார்த்த செய்தியை பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.
நாம் அனைவரும் நினைப்பதுபோல் காவலன் மலையாளப் படத்தின் ரீமேக் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் பாடிகாட் படம் தமிழ் படத்தின் ரீமேகா? என்று எனக்கு சந்தேகம். அந்த தமிழ் படத்தின் பெயர்தான் புன்னகை பூவே.

இந்த படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். இதற்குமுன் இந்த படத்தை எங்கேயோ பார்த்து இருக்கிறோம் என்று நினைத்தபோதுதான் எனக்கு காவலன் படம் பார்த்தது ஞாபகம் வந்தது. இந்த படத்தின் கதையும் காவலன் கதையும் 95 % ஒன்றுதான்.

ஒரு பெண் ஒருவனை கலாய்ப்பதற்காக போன் செய்து பேசுகிறாள். சிறிது நாளில் அவன் மீது காதல் கொள்கிறாள். அவன் அவளை பார்க்க போகும் பொழுது அவள் தோழியை இவள்தான் என்று நினைத்துக்கொண்டு காதல் கொள்கிறான். இவளும் தன் தோழிக்கு துரோகம் செய்துவிட்டு இவனை காதல் செய்கிறாள். இதுதான் மேல் கூறிய இரண்டு படத்தின் கதையும்.

ஒரு படத்தை ஒரு மொழியில் இருந்து 
ரீமேக் செய்வார்கள். ஆனால் இன்று ஒரு படத்தை ஒரு மொழியில் இருந்து ரீமேக் செய்து விட்டு அதே படத்தை மறுபடியும் தாய் மொழிக்கு ரீமேக் செய்யும் கூத்து நடந்து இருக்கிறது.

இந்த பதிவை விஜயை எனக்கு பிடிக்காது என்பதற்காகவோ அவரை தூற்ற வேண்டும்
என்பதற்காகவோ எழுத வில்லை. இயக்குனர்களின் கற்பனை வளர்ச்சி மிகவும் குறைந்து விட்டது என்பதை எடுத்துக்காட்டவே எழுதினேன்.                                         
Thursday, January 20, 2011

காவலன் திரை விமர்சனம் - kaavalan review

               காவலன் ஒரு கண்ணோட்டம்  விஜயின் படங்களை திருமலைக்கு பிறகு சுத்தமாக வெறுத்தவன் நான். விஜய் என்ற தனி மனிதரையும் அவருடைய முன்னுக்கு பின் வினோதமான செயல்பாடுகளால் வெறுத்த பலரில் நானும் ஒருவன். ஒருவருடைய ஆக்கமும் அழிவும் அவருடைய செயல்பாடுகளால் இருக்க வேண்டுமே தவிர அது மற்றவர்களால் வற்புறுத்தி அமைய கூடாது.

  படம் எங்கள் ஊரில் ரிலீஸ் ஆனதா? அல்லது ஆகவில்லையா என்பதை தெருவிக்க ஒரு சின்ன போஸ்டர் கூட கிடையாது. ஆனால் இந்த படம் எங்கள் ஊரிலேயே ஒரு மட்டமான திரைஅரங்கில் ரிலீஸ் ஆகி இருந்தது. இதற்கு அரசியல்  நிர்பந்தம் காரணமா? அல்லது திரை அரங்கு உரிமையாளர்கள் காரணமா என்று தெரியவில்லை. அரசியல் நிர்பந்தம் தான் காரணம் என்றால் நான்கு சினிமாவில் நடித்தால் முதல்வர் ஆகலாம் என்ற கனவை ஓரம் கட்டி வைத்து விட்டு தன்னுடைய ரசிகர்கள் மூலமாக நற்பணிகளை செய்தால் பதவிகள் தானாக வரும்.

திரை அரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் கேட்டதுதான் காரணம் என்றால் அது மிக பெரிய தவறு. என்னை கேட்டால் தலைவர் ரஜினி பாபா படத்திற்கு நஷ்டம் கொடுத்தது மிக பெரிய தவறு என்பேன். இந்த விஷயத்தில் கமல் கூறியது மிக சரியான வார்த்தை. இது மிக பெரிய தவறான முன் உதாரணமாகிவிடும் என்றார். வியாபாரத்தில் லாபம் அடைந்தால் அவர்களே வைத்து கொள்வதும், நஷ்டம் ஏற்பட்டால் அதை நடிகர்களிடம் கேட்பதும் எந்த விதத்தில் நியாயம். படத்தை போட்டு பார்த்துதானே வாங்குகிறார்கள். படம் பார்க்க வரும் ரசிகன் படம் நன்றாக இல்லை என்று திரை அரங்குகளில் பணத்தை திருப்பி கேட்டால் இவர்கள் நிலைமை என்னாவது?

இத்தனை எதிர்ப்புகளையும் மீறி படத்தை திரையிட்டு உள்ளார் விஜய்.படத்திற்கு நான் சென்றபோது நல்ல கூட்டம்.யாருடைய உழைப்பையும் மற்றவரால் தடுக்க முடியாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

படத்தின் கதை: அசினுக்கு காவலனாக போகும் விஜய், அசினைதான் காதல் செய்கிறோம் என்று தெரியாமல் தொலைபேசியில் காதல் கொள்கிறார். இதற்கு பின் நடக்கும் காட்சிகள்தான் நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்.

விஜய் படத்தில் வழக்கமாக வரும் பஞ்ச் வசனங்கள் இல்லை. தொடர் தோல்விகள் கற்று கொடுத்து இருக்கலாம். ஆர்ப்பாட்டம் இல்லை. அலட்டல் இல்லாத நடிப்பு.காதலுக்கு மரியாதை விஜய் போல் வந்து போகிறார். ராஜ்கிரணுக்கு படத்தில் வாய்ப்பு அதிகம் இல்லை. அசின் தன் பங்கை நிறைவு செய்கிறார்.

மொத்தத்தில் இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படம் என்று கூறலாம். 
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Friday, January 14, 2011

ஆடுகளம் விமர்சனம் (Adukalam review)

               ஆடுகளம் விமர்சனம் (Adukalam review) 

              

தனக்கு முள்ளும் மலரும் போல் தனுஷுக்கு இந்த படம் என்று தலைவர் கூறியதால் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தேன்.
படத்தில் நிறைய மலர்களும் கொஞ்சம் முட்களும் இருக்கதான் செய்தன.

படத்தின் கதை:

நம்பிக்கை துரோகம் படத்தின் முக்கிய கதை. அதை சேவல் சண்டையின் பின்னணியில் கூறி இருப்பது புதுமை.இதில் வழக்கமான சினிமாத்தனமான காதலும் உண்டு.

படத்தின் பலம்:

தனுஷின் நடிப்பில் மெருகு ஏறி உள்ளது. அவருடைய மதுரை வசன உச்ச்சரிப்புகளும் அருமை. படத்தில் பேட்டைக்காரராக வருபரின் நடிப்பு மிக இயல்பு. படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது. பாடல் எடுத்த விதமும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. படத்தில் காமெடி என்ற பெயரில் யாரும் மொக்கை போடவில்லை.சேவல் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை.

படத்தின் பலவீனம்:

கதாநாயகி அழகாக இருந்தாலும் அவருக்கு வழக்கம் போல் நடிக்க வாய்ப்பு இல்லை. படத்தின் பின்னணி இசை மிகவும் இரைச்சலாக உள்ளது. உச்சக்கட்ட காட்சி மிக மோசம். எப்படி முடிப்பது என்று தெரியாமல் முடித்து இருக்கிறார்கள்.

  

 மொத்தத்தில் கமர்சியல் சினிமா படங்களில் இது ஒரு வித்தியாசமான முயற்சி.விறுவிறுப்பாக செல்கிறது. இருந்தாலும் சேவல் சண்டைக்காக சேவலை விமானத்தில் கொண்டு வருவது எல்லாம் ஓவர்.நண்பர்களோடு சென்றால் நன்றாக ரசித்துவிட்டு வரலாம்.

ஆடுகளம் அமர்க்களம்.

Saturday, January 8, 2011

எந்திரன் 100 வது நாள் விழா

                                     எந்திரன் 100 வது நாள் விழா

டெண்டுல்கர் அடித்த சதங்களை மிஞ்சியது தலைவரின் வெள்ளி விழா படங்கள். அந்த வரிசையில் இதோ தலைவரின் எந்திரன் படம் இன்று நூறாவது நாள்.


                                    நன்றி:ஆர்குட் ரஜினி நண்பர்கள்

Thursday, January 6, 2011

ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் கவிதை

            ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் கவிதை

                    

எனக்கு தோன்றியதை எழுதி உள்ளேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

                பிறந்த நாள் கவிதை

எல்லா புகழும் இறைவனுக்கே என்றாய்! ஆனால் உன்னால்தான் இந்தியாவிற்கே புகழ்!

இளையராஜாவிற்குபின் பூத்த ரோஜாவே! தமிழக இளசுகளின் ராஜாவே!

உன்னைடைய இசையால் தென்றலையும் புயலாய் மாற்றிய இசை புயலே!

ஆஸ்கரே காலில் வந்து விழுந்தாலும் கண்ணியம் காக்கும் தலைமகனே! கோல்டன் க்லோப் வாங்கிய தங்க மகனே!

இந்தியாவிற்கு எப்போதோ சுதந்திரம் கிடைத்து இருக்கும் உன்னுடைய 
வந்தே மாதரம் அப்பொழுது ஒலித்து இருந்தால்.


சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் ஆனால் சாதுவாகிய நீ மிரண்டால் ஆஸ்கர் விருதுகள் கொள்ளாது.


புகழை தலைக்கு ஏற்றாத நவீன உலக சித்தன் நீ! நரம்புகளில் வயலின் வாசிக்கும் இசைப் பித்தன் நீ!


அன்றாடம் வானிலை மாறினாலும் விடாது பெய்யும் இசை மழை நீ!

இறுதியாக,

Inception இன் ஆஸ்கர் கனவை, கனவு உலகத்திற்கு அனுப்ப வந்த Mozart of Madras நீ!

வாழ்க நீ பல்லாண்டு.

Monday, January 3, 2011

2010 ஆம் ஆண்டின் மொக்கை படங்கள்

                             2010 ஆம் ஆண்டின் மொக்கை படங்கள்

விருதகிரி

               

    ஒரு சில விஷயங்கள் நமக்கு அலுத்து போகும் போது இனி மேல் இதை செய்ய கூடாது என்று நாம் நினைப்பது வழக்கம்.
விருதகிரி படம் பார்த்த எத்தனை பேர் இனி தமிழ் படங்களை காசு கொடுத்து தியேட்டரில் பார்க்க கூடாது என்று முடிவு எதுத்தார்களோ தெரியவில்லை.
     பல அடுக்கு அரிதாரம் பூசியும் முகத்தில் பளிச்சென்று தெரியும் முதிர்ச்சி, யாரோ ஒரு சிலரை மகிழ்விக்க பேசப்படும் நீட்டி முழக்கிய சுய பிரச்சார வசனங்கள், காட்சிக்கொரு வில்லன் என்று பல படங்களில் பார்த்து சலித்த நமக்கு எதாவது புதிதாக இருக்கிறதா என்று பார்த்தால் வழக்கம் போல் மிஞ்சுவது ஏமாற்றமே.
      தியேட்டரில் பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் ஒரு சண்டை காட்சியில் விஜயகாந்தை க்ளோஸ் அப்பில்  பார்த்து விட்டு அப்பா இது பேய் படமா அப்பா என்று கேட்டதும், பதில் சொல்ல முடியாத அப்பாவின் முகம் விருதகிரியால் வருத்தகிரியாகி போயிருந்தது.

சுறா


                                                    

    நடுக்கடலில் இருந்து சுறா போல விஜய் நீந்தி வரும் அந்த அறிமுக காட்சியே தவறான ஒரு படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. அதை விஜயின் எரிச்சலூட்டும் நடிப்பும் அரத பழசான திரைக்கதை உக்தியும் கடைசி காட்சி வரை நிரூபித்து கொண்டே இருக்கிறது.
    சமீக காலமாக விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் முந்தைய படத்தை மிஞ்சும் அளவுக்கு மோசமாக இருந்தது. அந்த வரிசையில் இந்த ஆண்டு வெளி வந்த சுறா உச்சத்தை தொட்டது.
     இதை விட மோசமான ஒரு படத்தில் விஜய் நினைத்தாலும் இனி மேல் நடிக்க முடியாது என்று நினைக்கிறேன்.


வ (குவாட்டர் கட்டிங்)

             

    எதை எதையோ மையமாக வைத்து கதை எடுப்பார்கள்.
ஆனால் ஒரு குவாட்டர் சரக்கை மையமாக வைத்து ரெண்டரை மணி நேரம் மொக்கையான ஒரு திரைக்கதையையும் உருவாக்கி படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதித்து விட்டார்கள்.இது  ஒரு மொக்கை படம்டா என்று அவர்கள் முன்னோட்ட காட்சியில் கூறியது எவ்வளவு உண்மை என்பது படம் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்.

ரத்த சரித்திரம்:

                       

 படத்தில் நடக்கும் கொலைகள் ஸ்பெக்டரம் உழலில் கை மாறிய பணத்தை விட அதிகமாக இருக்கும் என்று நினைக்குறேன். படத்தின் மோசன ஒளிப்பதிவு, இசை காட்சிகள் என்று அனைத்தும் சேர்ந்து தலை வலியை உண்டு செய்தன.


மன்மதன் அம்பு:

                                               
உலக ஞானியிடம் இருந்து வந்த ஒரு டுபாகூர் திரைப்படம். இந்த படத்தின் இசையை சிங்கபூரில் வெளியிடும் அளவிற்கு பாடல்கள் இருந்ததா? என்று தெரியவில்லை. படத்தின் பெயருக்கு ஏற்ப கதாப்பாத்திரங்களுக்கு பெயர் வைக்க எவ்வளவு சிரம பட்டார்கள் என்று தெரியவில்லை. அல்லது படத்தை போல் இந்த பெயரும் எதாவது நாவலில் இருந்து உருவப்பட்டதா என்று தெரியவில்லை.அதற்கு பட்ட சிரமத்தை படத்தின் கடிக்கும் பட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

இந்த படங்கள் நான் பார்த்த படங்களில் மொக்கை படங்கள். இதை விடவும் மொக்கை படங்கள் வந்து இருக்கலாம்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...