Friday, December 9, 2011

மொக்கை பையன் சார்-குறும்படம்

                                மொக்கை பையன் சார்-குறும்படம் 

நண்பர்களுடன் இணைந்து "மொக்கை பையன் சார்" என்னும் நகைச்சுவை குறும்படத்தை எடுத்து உள்ளோம். உங்களது மேலான கருத்துக்களை தெரிவித்து ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
                                       


                                                  


Monday, November 28, 2011

மயக்கம் என்ன – உலக சினிமாவா? (Mayakkam enna review)

       மயக்கம் என்ன – உலக சினிமாவா?

              
             


வித்தியாசமான படம் என்றால் என்ன?

மரத்தை சுத்தி டூயட் பாடுவது, சண்டை காட்சிகள், போன்றவை இல்லாமல் படம் எடுப்பது தான் வித்தியாசமான படம். அப்படி என்று நான் சொல்லவில்லை. உலக இயக்குனர் செல்வாராகவன் கூறுகிறார்.
இன்னும் நிறைய கூறுகிறார். முகத்தில் எச்சில் உமிழ்வது மாதிரி பாடல் எடுப்பது, கதாநாயகி அம்மாவைப் பற்றி கதாநாயகன் கேவலமாக கூறியதால் காதல் பிறப்பது இது எல்லாம் வித்தியாசமான படங்களின் அறிகுறி.

போதும்டா சாமி! நீங்க தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு கொண்டு சென்றது! இன்னும் கொஞ்சம் இருக்கும் தமிழ் கலாச்சாரத்தையும் கெடுத்து, ஒருத்தர்,ரெண்டு பேர் வாழும் வாழ்க்கைதான் இன்றைய இளைய தலைமுறை வாழ்க்கை என்று கூறி நம்ப வைத்து விடுவீர்கள்.
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாதி படத்தில் இருந்து செல்வராகவன் இன்னும் மீளவில்லை என்பது நன்றாக தெரிகிறது.

இவருடைய அனைத்து படத்திலும் முதல் பாதி மட்டும் தான் நன்றாக இருக்கிறது.இரண்டாம் பாதி கேவலமாக இருக்கிறது.முதல் பாதி(Half) முடிந்தவுடன் மட்டை ஆகி விடுவார் என்று நினைக்கிறன். அதனால்தான் இரண்டாம் பாதி மிக மட்டமாக இருக்கிறது.

இந்த படத்தின் கதையை பற்றி கூறி மேலும் என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.படம் பார்த்து என்னுடைய நூறு ரூபாயும்,மூன்று மணி நேரமும் வீணானதே போதும்.

இந்த படத்தின் ஆறுதல் என்று பார்த்தல் தனுஷின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷ் எந்த ஆங்கில படத்தில் இருந்து இந்த பாடல்களை எடுத்தார் என்பதை இந்நேரம் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் கண்டு பிடித்து இருப்பார்கள்.

செல்வராகவனின் வீட்டிற்கும், கீழ்பாக்கத்திற்கும் ஆன இடைவெளி குறைந்து வருவது நன்றாக தெரிந்தது.

இந்த படம் பார்த்த பிறகு யாரோ ஒருவன் எதற்காகவோ எடுத்த படத்தை, நாம் ஏன் பார்க்கிறோம் என்று உணர்வு ஏற்பட்டு விட்டது.
என்று தனியும் இந்த சினிமாவின் மோகம் தமிழ்நாட்டில்?

மொக்கை பையன் சார் – டிரைலர்

                                   மொக்கை பையன் சார் – டிரைலர்

எங்கள் முதல் படம் மொக்கை பையன் சார் படத்தின் டிரைலர் வெளியிட்டுள்ளோம். படம் அடுத்த வாரத்திற்குள் வெளியிடுவோம் என்று நம்புகிறோம்.
அ.அருள்செல்வன்

Monday, November 14, 2011

போதிதர்மன் தமிழரா?நான் யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதையும் எழுதுவதில்லை. பெருகி வரும் ஆங்கில மோகத்தில் தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தமிழில் சிந்திக்கும் திறன் மங்கிவிடக் கூடாது என்பதற்காகவும் தான் எழுதுகிறேன். நான் வேலாயுதம் பற்றி எழுதிய முந்தைய பதிவில் எனக்கு பல கேவலமான பின்னூட்டங்கள் வந்தன. அவர்களை நான புனபடுத்தி விட்டதாக அவர்கள் கருதினால் அதற்கு நான் வருந்துகிறேன்.

நேரு அவர்கள் கூறியதைப்போல், ஒருவருடைய சிந்தனை என்பது தாய் மொழியில்தான் உதிக்குமே தவிர பிற மொழியில் உதிக்காது. அவன் உள்ளத்தோடும் தாய் மொழியில்தான் பேசுவான். அதனால்தான் இன்னும் மொழி கலவரம் உலகம் எங்கும் பரவி இருக்கிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். நாம் முன்பே கூறியது போல இது யாரையும் நோகடிக்கும் விதத்தில் எழுதப்பட்டது அல்ல.நான் படித்த வரலாற்றை இங்கே பதிகிறேன்.

                 போதிதர்மன் தமிழரா?

 

போதிதர்மன் பல்லவ இளவரசன் என்று வரலாறு கூறுகிறது.அப்படி என்றால் பல்லவர்களைப் பற்றி வரலாறு என்ன கூறுகிறது?

பல்லவர்கள் முதலில் தெலுங்கு தேசத்தில் சில பகுதியை ஆண்டனர் என்று செப்பேடுகள் கூறுகின்றன. பல்லவர்களைப்பற்றிய முதல் குறிப்புகள் காணப்படுகின்ற இடங்கள் தற்போதைய ஆந்திராவில் உள்ள பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர்.

பல்லவ மன்னன் குமாரவிஷ்ணு காஞ்சிபுரத்தை கைப்பற்றியதை அடுத்து காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

ஆனால் கி.பி.450௦ ஆம் ஆண்டு முதல் கி.பி.600௦௦ ஆம் ஆண்டு வரை மீண்டும் காஞ்சிபுரம் சோழர்கள் வசம் இருந்தது என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

மீண்டும் பல்லவ மன்னன் சிம்ஹவிஷ்ணு ஆறாம் நூற்றாண்டு தொடக்கத்தில் காஞ்சிபுரத்தை கைபற்றினார் என்றும், அதன் பின்னர் வந்த மகேந்திர பல்லவன் மகாபலிபுரத்தில் சிற்பங்கள் நிறுவினார் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
 
மகேந்திர பல்லவன் புலிகேசியிடம் போரில் அவமானப்பட்டதாகவும், அதன்பின்னர் வந்த நரசிம்ம பல்லவன் புலிகேசியை போரில் வீழ்த்தியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.(சிவகாமியின் சபதம் இதை வைத்து பின்னப்பட்ட நாவல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று).

சரி விஷயத்துக்கு வருவோம்.
1)   பல்லவ மன்னர்கள் ஒருவரது பெயர் கூட தமிழில் அமைந்தது கிடையாது. சமஸ்கிரத்தில் தான் அமைந்து உள்ளது.

2)   போதிதர்மன் சீனாவிற்கு சென்றதாக சொல்லப்படும் நேரத்தில் (அதாவது கி.பி.450௦ முதல் 600௦ வரை) காஞ்சிபுரம் சோழர்கள் வசம் இருந்தது.அப்படி என்றால் அவர் காஞ்சிபுரத்தில் இருந்து தான் சீனதேசம் சென்றாரா? அப்படி சென்று இருந்தால் சோழர்கள் வசம் இருந்த காஞ்சிபுரத்தில் இருந்து அவர் எப்படி இலவரசராக சென்று இருப்பார்?


3)  மகேந்திரவர்மனக்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள வரலாற்றுப் பதிவுகள் தமிழில் இல்லையே அது ஏன்? அதனால் பல்லவர்கள் முதலில் தமிழ் அரசர்கள் இல்லை என்பது வரலாறு கூறும் நிஜம்.

இப்படி இருக்கையில் நாம் போதிதர்மன் தமிழரா? அல்லது வேறு நாட்டை சேர்ந்தவரா? என்பதை விட்டு விட்டு, அவர் இந்தியாவில் இருந்து சென்ற ஒரு மேதை என்று எடுத்துக்கொண்டால் தேவை இல்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுக்காது.

தெரியாத வரலாறைவிட, தவறான வரலாறு பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
 
ஏனென்றால், வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!

Monday, November 7, 2011

வேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)


   வேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)

தீபாவளி படங்களில் சிறந்த படம். விஜய்க்கு கில்லிக்கு அடுத்து பெயர் வாங்கி கொடுத்து இருக்கும் அருமையான படம். தீபாவளி படங்களில் வசூலில் முதல் இடம். விஜய் அதிகமாக பேசாமல் சிறப்பாக நடித்து உள்ளார்.

இப்படி எல்லாம் கூறி ஏமாற்றி என்னை இந்த படத்தை பார்க்க வைத்து விட்டார்கள். மக்களே! நீங்களும் அந்த தவறை செய்து பின் என்னைபோல் வருந்த வேண்டாம்.
படம் முதல் காட்சியில் பாகிஸ்தான் எல்லையில் தீவரவாதிகள் அறிமுகத்துடன் தொடங்குகிறது. அப்பாடா! சென்னையை விட்டு வைத்தார்கள், என்று நினைக்கும் போது, அங்கு இருக்கும் தீவரவாதிகள் அனைவரும் சென்னைக்கு பாம் வைப்பதற்காக வருகிறார்கள்.

ஏன் தீவரவாதிகள் சென்னைக்கு வரவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்? அதுதான் விஜய் தன்னுடைய முந்தைய படத்தில் சென்னையில் உள்ள அனைத்து ரௌடிகளையும் அழித்து விட்டாரே? அதனால் வெளி நாட்டில் இருந்து சென்னைக்கு தீவரவாதிகளை இருக்குமதி செய்து உள்ளனர். இயக்குனரின் சிந்தனை வியக்க வைக்கிறது! எப்படி இருந்தாலும் தீவிரவாதியை தமிழில்தான் பேசவைக்க போகிறீர்கள். அதற்கு தமிழ் பேசும் ஒருவரை நடிக்க வைத்து இருந்தால் நாங்களாவது அந்த கேவலமா தமிழில் இருந்து தப்பித்து இருப்போம். 

இதற்குமேல் படத்தின் கதை (அப்படி எதாவது இருக்கிறதா?) என்ன என்பது? இதளவு விஜய் படம் ஒன்றாவது பார்த்து இருந்தால் சொல்லி விடலாம். இரண்டு கதாநாயகி, ஒரு தங்கை, சென்னைக்கு வருவது, தீவரவாடிகளை அழிப்பது.திருப்பாச்சி படம் போல இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம்? அதற்கு வித்தியாசம் காட்ட பல இடங்களில் முயன்ற இயக்குனரின் திறமை புரிகிறது. அந்த வித்தியாசங்களை கீழே காண்போம்.

௧) விஜய்க்கு அடிக்கும் வெயிலில் கோனி பையை மாட்டி விட்டு சூப்பர்(?) ஹீரோவாக காட்டி இருக்கிறார்கள்.இயக்குனர் ராஜாவை இனிமேல் நீங்கள் தெலுங்கில் இருந்து காப்பி அடிப்பவர் என்று கூற முடியாது. ஏன் என்றால் எந்த கோனி பை கெட் அப்பை ஒரு ஆங்கில வீடியோ கேமில் இருந்து திருடி இருக்கிறார்கள். வீடியோ கேமில் இருந்து காப்பி அடித்து தமிழில் ஒரு புரட்சியை உண்டு பண்ணி இருகிறார்கள்.

௨) திருப்பாச்சி படத்தில் முகத்தில் மஞ்சளை பூசிக்கொண்டு வந்ததற்கு இது எவ்வளோவோ பரவாயில்லை, என்று வந்து இருந்த ஒன்று இரண்டு பேர் பேசி கொண்டது நன்றாக கேட்டது.எனக்கும் இந்த முகத்தை முடி இருக்கும் கெட் அப் நன்றாக இருப்பதாகவே தோன்றியது.

௩) திருப்பாச்சி படத்தில் விஜயின் தங்கை கருப்பு. இதில் சிவப்பு. அடடா! பின்றான்யா! பின்றான்யா!

படத்தில் ஒரே ஆறுதல் சந்தானம். விஜயை போலவே விஜய் ஆண்டேனியும் தன் முந்தைய படங்களில் இருந்து பாடல்களை எடுத்து இருப்பது, ஒரு காட்சி அல்லது பாடல் கூட இந்த படத்தில் புதிதாக இருக்கக் கூடாது என்ற இந்த பட குழுவினரின் முயற்சியைக் காட்டுகிறது.படத்தின் கதாநாயகிகள் விஜய் படத்தில் என்ன செய்து இருப்பார்கள் என்று நான் சொல்லுவது, உளுந்து இருந்தால்தான் வடை போடமுடியும் என்று சொல்வதுபோல் ஆகிவிடும்.

முக்கியமானதை விட்டு விட்டீர்களே? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
அந்த கொடுமையும் படத்தில் இருக்கிறது. விஜய் ரயிலை இந்த படத்திலும் ஓட்டுகிறார். டிஸ்க் பிரேக் அடிக்கிறார். விஜய்க்கு நம் கனிவான வேண்டுகோள்! நீங்கள் ஒரே கதையை வேண்டுமாலும் நடித்து கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து இந்த ரயில் காட்சிகளை மட்டும் படத்தில் வைக்க வேண்டாம்.ஒரு அளவிற்கு தான் எங்களால் தாங்க முடியும்.

என்னடா! படத்தை இப்படி ஓட்டு ஓட்டு என்று ஓட்டுகிறானே? என்று நீங்கள் நினைக்கலாம். அந்த அளவிற்கு காட்டு காட்டு என்று காட்டி இருக்கிறார்கள்.
     

Thursday, November 3, 2011

மொக்கை பையன் சார்


நண்பர்களே,

புதிய குறும்படம் ஒன்றை எனது நண்பர்களுடன் இனைந்து தயாரித்து உள்ளோம். படத்தின் சுவரொட்டியை கீழே காணவும். படம் இந்த மாதத்தில் வெளியிடப்படும்.

           
அ.அருள்செல்வன்

Wednesday, November 2, 2011

ரா ஒன் – ராங் ஒன் (Raa-one Review)


                                 ரா ஒன் – ராங் ஒன்


                   

தலைவர் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற எழுதப்படாத தமிழ்நாட்டு சட்டத்தின் காரணமாக, தலைவர் ஒரே காட்சியில் வந்தாலும் ரா ஒன் படத்துக்கு முதல் நாள் சென்றேன். இல்லை என்றால் சாருக்கான் நடித்த இந்த குப்பை படத்தை பார்க்க வேண்டிய அவசியமே தமிழ் நாட்டிற்கு இல்லை. 

படத்தின் கதை? அது இந்த படத்தின் இயக்குனருக்கே தெரியுமா என்று தெரியவில்லை. எந்திரன் படத்திற்கு போட்டியாக தயாரிக்கப்பட்ட ஒரு அரைகுறை திரைக்கதையை வைத்துக்கொண்டு இவர்கள் செய்த விளம்பரம். தீபாவளி அன்று தலைவலியை வரவழைத்து விட்டார்கள்.

எனக்கு என்ன ஒரு பயம் என்றால் ரஜினி வரும் காட்சிக்கு முன் தூங்கிவிடுவோமோ என்ற பயம். நல்ல வேலை தலைவர் வரும் காட்சி இடைவேளை முடிந்தபின் உடனே வந்தது.

ஆனால் தலைவர் வரும் காட்சியை பார்த்தபின் நாம் தூங்கி இருந்தாலே நன்றாக இருந்து இருக்குமோ என்று தோன்றியது. எவ்வளவு கேவலமான ஒரு ஒப்பனை, காட்சி அமைப்பு, பின்னணி இசை. படு மட்டமாக காட்சி அமைத்து இருந்தனர். இதில் இன்னொரு கொடுமை என்ன என்றால் படத்தில் இது தான் அனைவரை பொறுத்தவரை மிக சிறந்த காட்சி என்றால் எந்த அளவிற்கு ஒரு குப்பையாக படம் இருக்கும் என்று பாருங்கள்.

நிறைய நண்பர்களுக்கு அது தலைவர் தானா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் எப்பொழுது தலைவரே தன் வாயால் தான் அந்த படத்தில் நடித்தேன் என்று திருப்பதியில் கூறினாரோ, அவர் நடித்தாரா? என்று கேட்பது தலைவரின் நேர்மையை சந்தேகப்படுவதுபோல் ஆகி விடும்.தலைவரின் நேர்மை நாடறிந்த ஒன்று. அதை சந்தேகப்படுவது  நம்மை நாமே இழிவு செய்வது போல ஆகிவிடும்.

இப்படி ஒரு காட்சியை எடுத்துவிட்டு சாருக் ட்விட்டர் – ல் செய்த பில்ட் அப்? இந்த படம் பார்பதற்கு பதில் இரண்டு மணி நேரம் வீடியோ கேம் மகிழ்ச்சியாக விளையாடலாம்.மேலும் நான் இந்த படத்தில் நடித்த மற்றவர்களைப்பற்றி கூறி என் நேரத்தை மேலும் வீணடிக்க விரும்பவில்லை.

சாருக் இன்னும் திருந்தவில்லை என்பதற்கு இந்த படமே சாட்சி. எந்திரனை பழித்த மேதாவிகள், இந்த படத்தை பார்த்துவிட்டு பேசட்டும். எந்திரன் போன்ற ஒரு சிறந்த அறிவியல் பொழுதுபோக்கு  திரைப்படம் இந்தியாவில் இனி வருவதற்கு குறைந்தது ஒரு பத்து வருடமாவது ஆகும் என்பது ஆணித்தரமான உண்மை.

ஹாட்ஸ் ஆப் ஷங்கர்.Monday, October 31, 2011

ஏழாம் அறிவு- என்னுடைய அறிவில்(7 aum arivu review)


                     மீண்டும் இடி, மின்னல் 

                                         
நீண்ட நாட்களாக பதிவு எதுவும் எழுதாமல் இருந்தேன். இன்று என் பிறந்த நாள் அன்று மீண்டும் பதிவு எழுதுகிறேன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ரஜினி உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததில் இருந்து நான் எழுத வில்லை. ஏனோ எழுத மனம் கொள்ளவில்லை. ரஜினியின் சுறுசுறுப்பை பற்றி எழுதிய நமக்கு, அவர் உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறார் என்று  எழுத மனம் வரவில்லை.

     இதோ வந்து விட்டார் ரஜினி. பழைய உற்சாகம். கண்களில் மின்னல். இதைவிட அவர் குணம் அடைந்து விட்டார் என்று சொல்ல வேறு நிகழ்வு வேண்டுமா?

                  

இதோ நம் எழுத்து ஓட்டம தொடர்கிறது.

         ஏழாம் அறிவு- என்னுடைய அறிவில்

             

போதி தர்மனைப்பற்றி வரலாற்று தகவல்களுடன் வந்து இருக்கும் படம். படம் தொடங்கியதும் வரும் முதல் இருபது நிமிட காட்சிகள் அருமை. அந்த இருபது நிமிடத்தில் போதி தர்மனைப்பற்றி படத்திற்கு தேவையான விஷயங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதற்குப்பின் காட்சிகள் தற்போதைய காலத்தில் நகர்கின்றன. சீனாவால் இந்தியாவிற்கு வரபோகும் ஆபத்தை போதிதர்மனின் தற்போதைய வம்சாவழியான சூர்யாவிற்கு நவீன அறிவியல் மூலம் போதிதர்மனின் திறமையை வரவழைத்து, இந்தியாவை காக்கிறார் ஸ்ருதிஹாசன். இதுதான் எனக்கு புரிந்த கதை.

படத்தில் போதி தருமனாக வரும் சூர்யாவின் நடிப்பு அபாரம்.வில்லாக வரும் சீன நடிகரின் நடிப்பு மிரள வைக்கிறது. என்ன ஒரு நடை,பார்வை.
ஸ்ருதிஹாசன் பாடல்களில் அழகாக இருக்கிறார். ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது என்று சொல்ல நமக்கு அருகதை இல்லை. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜின் இசை கேவலமாக உள்ளது என்று சொல்ல நமக்கு அருகதை உண்டு. முடியல!

முருகதாஸ் அற்புதமான ஒரு இயக்குநர். ஆனால் இந்த படத்தில் திரைக்கதை மிகவும் நிதானம். பொறுமையை சோதிக்கிறது.

தற்போது இந்த படம் பார்த்தபின் நமக்கு எழுந்த சில கேள்விகள்:
௧) போதிதர்மனைப்பற்றி நீங்கள் தமிழர்களுக்கு தெரிய வைப்பதில் தவறு இல்லை. ஆனால் போதிதர்மன் தமிழர்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் போல, விட்டால் ராஜா ராஜா சோழன் ஆகியோரை விட மிக சிறந்தவராக சித்தரிப்பது ஏன்?

௨) தமிழைப்பற்றி பெருமையாக ஸ்ருதிஹாசன் பேசும் காட்சிகளை டப்பிங் செய்துவிட்டு பார்த்தீர்களா? தமிழை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது அந்த காட்சி

௩) சம்மந்தம் இல்லாமல் இலங்கை தமிழர்களை பற்றியும், மலேசியா தமிழர்களை பற்றியும் பேசும் வசனம் ஏன்?
தமிழர்களின் உணர்ச்சியைத்தூண்டி படத்திற்கு விளம்பரம் தேடத்தானே?

௪) வில்லன் மிக சிறந்த கராத்தே வீரராக இருந்தும் பார்வை மூலமாக எத்தனை பேரைத்தான் வீழ்த்துவார்? சலிப்புதான் ஏற்படுகிறது.

௫) இந்த மாதிரி தமிழர்களின் பெருமை சொல்லும் படத்தில், அரை ஆடையுடன் டூயட் காட்சிகள் தேவையா?

எனினும், போதி தர்மன் என்ற ஒரு தமிழனை அடையாளம் காட்டியதில் முருகதாஸ் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார்.
 

Thursday, March 3, 2011

ரஜினியின் கண்டக்டர் புகைப்படம்

               ரஜினியின் கண்டக்டர் புகைப்படம்:

ரஜினி கண்டக்டராக பணியாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் உங்கள் பார்வைக்கு. அப்பொழுதே தலைவர் எவ்வளவு ஸ்டைலாக உள்ளார் என்பதை பார்க்கவும்.

Wednesday, February 23, 2011

மலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்


                  மலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்: 

                       


மலேசியா வாசுதேவன் அவர்களை நான் ஒரு முறை நேரில் கண்டு இருக்கிறேன். அரக்கோணத்தில் ஒரு கோயில் திருவிழா. திருவிழாவிற்கு மலேசியா வாசுதேவன் அவர்களின் பாட்டுக் கச்சேரி. அப்பொழுது பாபா பட பாடல்கள் வெளியாகி இருந்த சமயம். கூட்டத்தில் இருந்த அனைவரும் பாபா பட பாடலைப் பாட சொல்லி கேட்டுக்கொண்டார்கள்.

அப்பொழுது அவர் மாயா மாயா பாடலை பாடினார். அந்த தருணம், அந்த குரல் தற்போதும் என் காதில்  ஒலித்துக் கொண்டு இருக்கறது. பொதுவாக ரஜினி படத்தின் பாடல்களை யார் பாடினார்கள் என்று நான் அவ்வளவாக அலட்டிக்கொண்டது இல்லை.

ஆனால் மலேசியா வாசுதேவன் அவர்கள் இறந்ததில்  இருந்து அவர் பாடிய அனைத்து ரஜினி பாடல்களிலும் எனக்கு
மலேசியா வாசுதேவன் அவர்கள்தான் தெரிகிறார். ரஜினி தெரியவில்லை. முதல் முறையாக நான் பாடலை ரஜினி பாடுவதுபோல் உணரவில்லை. மலேசியா வாசுதேவன் தனியாக பாடல்களில் தெரிந்தார்.

நான் மலேசியா வாசுதேவன் அவர்கள் ரஜினிக்கு பாடிய,எனக்கு பிடித்த சிறந்த ஐந்து பாடல்களை தொகுத்து உள்ளேன்.

பாடல் 5

ஆசை நூறு வகை - அடுத்த வாரிசு

இந்த பாடலை கேட்டவுடன் வரும் குதுகலத்தை என்னவென்று சொல்வது.
"முத்துரதம் போலே சுத்தி வரும் பெண்கள்"

என்ற மலேசியா வாசுதேவனின் குரல் மற்றும் தலைவரின் நடனமும் நம்மை மகிழ்ச்சியின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்.

"
தினம் நீயே செண்டாகவே, அதில் நான்தான் வண்டாகவே!"

என்று உச்ச சாயலில் மலேசியா வாசுதேவன் முடிக்கும்போது நாமும் ஆட்டம் போட்டு முடித்து இருப்போம் "

               


பாடல் நான்கு:

என்னமா கண்ணு சௌக்கியமா? - மிஸ்டர்.பாரத்

இந்த பாடல் இத்தனை  நாள்வரை எனக்கு மலேசியா வாசுதேவன்தான் பாடினார் என்பது தெரியாது. நான் இதுநாள்வரை இந்த பாடலில் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைலில் மதி மயங்கிபோய் அவர்தான் பாடுகிறார் என்று நினைத்தேன். இவ்வாறு ரஜினிதான் பாடுகிறார் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு  அவருடைய குரல் அமைந்து இருந்தது.

                   


பாடல் மூன்று:

மனிதன் மனிதன் -  மனிதன்

இந்த பாடலை படத்தின் நீலம் காரணமாக நீக்கி விட்டார்கள். ஒருமுறை ரஜினி ஷூட்டிங்கில் அமர்ந்து இருக்கும்போது இந்த பாடலை இசைதட்டில் கேட்டு இருக்கிறார். எந்த படத்தில் இந்த பாடல் என்று வினவி இருக்கிறார். நம் படத்தில்தான் இந்த பாடல், ஆனால் நீலம் காரணமாக நீக்கி விட்டோம் என்று கூறினார்கள். இந்த பாடலை படத்தில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி கேட்டதற்காக டைட்டில் பாடலாக சேர்த்தார்கள். பிற்காலத்தில் அது ரஜினி ரசிகர் மன்றத்தின் தேசிய கீதமாக மாறியதற்கு, மலேசியா வாசுதேவன் குரலும், வைரமுத்துவின் வைர வரிகளும்தான் காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
           

"கொடுப்பவன் மனிதனா? எடுப்பவன் மனிதனா? "

இந்த மாதிரி பாடல்களை பாடியவன்தான் மாமனிதன்.

             

பாடல் இரண்டு:

பெத்து எதுத்தவதான் - வேலைக்காரன்

தாய் பாசத்திற்காக எங்கும் ஒரு மகனின் சோகத்தை தன் குரலில் காட்டி நம்மை எல்லாம் சோகத்தில் முழ்கடித்து இருப்பார். தமிழில் வெளியான மிக சிறந்த சோக பாடல்களில் ஒன்று.

"நெஞ்சு கிழிஞ்சுடுச்சு எங்க முறையிடலாம்"

என்று அவர் பாடியது நம் அனைவர் மனதையும் இப்பொழுது கண் கலங்க வைக்கிறது.

                      

பாடல் ஒன்று:

ஒரு கூட்டு கிளியாக -படிக்காதவன்

இந்தப்பாடல் சிவாஜி பாடுவதுபோல் அமைந்து இருந்தாலும், ரஜினிக்கும் சில இடங்களில் பின்னணியில் ஒலிக்கும், ஆதலால் இதனை குறுப்பிடுகிறேன். வாழ்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணன் கூறும் கருத்தைபோல் அமைந்து இருக்கும் இந்த பாடல். எப்பொழுது கேட்டாலும் என்னுள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

"நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வியர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா?"

என்று மலேசியா வாசுதேவன் பாடிய வரிகளுக்கு ஏற்ப அவர் உழைத்ததால்தான் இன்று அவர் இறந்தவுடன் தமிழ்நாடு சோகத்தில் ஆழ்ந்தது.

                  

அவருடைய புகழ் இசை உலகம் உள்ளவரை வாழ எல்லாம்வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...