Monday, December 6, 2010

அமரர் சுஜாதா (WRITTER SUJATHA)


அமரர் சுஜாதா தற்போது உயிரோடு இருந்தால்   
                 
                              
1995களின் தொடக்கம். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு புத்ததகத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணம்  எனது பெரியப்பா நூலகம் வைத்து இருந்தார். அப்பொழுது ராஜேஷ் குமார் அவர்களின்  க்ரைம் நாவல் மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ரெண்டு நாட்களுக்கு ஒரு நாவல் விதம் படித்த நான், பின் விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு மூன்று நாவல் விதம் படித்தேன். ஆனால் பிற்பாடு பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவரின் நாவல்களின் முடிவை முதலிலேயே அறிந்து கொண்டேன்.ஆனால் ராஜேஷ் குமார், க்ரைம் நாவல்கள் மீது எனக்கு தீராத காதல் உண்டு செய்து விட்டார் என்பது மட்டும் உண்மை. வேறு யாருடையது படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்

அப்பொழுதுதான் ஒரு புத்தக கண்காட்சியில் சுஜாதாவின் மர்ம கதைகள் தொகுப்பு வாங்கினேன். நான் படித்த முதல் சுஜாதா புத்தகம் இது தான். முதல் இரண்டு கதைகளையும் இரண்டு முறை படித்தேன். அதன்பின் அனைத்து கதைகளையும் ஒரு முறையிலேயே புரிந்து கொண்டேன். அட! இப்படி கூட ஒரு க்ரைம் கதையை எழுத முதுயுமா? உண்மையில் பல கதைகளில்  கருவில் க்ரைம் இல்லை. ஆனால்  அவருடைய எழுத்தால் கதையில் க்ரைம் இருந்தது போலவே காட்டி ஒரு சாதாரண கதையை க்ரைம் கதையை போல் உணர வைத்து இருந்தார்.  
எத்தனை சின்ன சின்ன விஞ்ஞான விஷயங்கள்.

அவருடைய க்ரைம் எழுத்துகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.பாருங்கள்.
ஒரு முறை கற்றதும் பெற்றதும் தொடரில் ஒரு வரியில் க்ரைம் கதை எழுத சொல்லி ஒரு போட்டி வைத்து இருந்தார். அதில் ஒருவர் எழுதியது

உலகின் கடைசி மனிதர் அறையில் இருந்த போது, கதுவு தட்டப் பட்டது. இந்த கதையை பாராட்டிய சுஜாதா இதை இன்னும் மெருக்குட்ட  வேண்டுமானால்
உலகின் கடைசி மனிதர் அறையில் இருந்த போது, கதுவு பூட்டப்பட்டது என்று எழுதினார்.பாருங்கள் அவருடைய  எழுத்துக்கூர்மையை!

படிப்படியாக அவருடைய அனைத்து வகையான புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.இன்று இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆர்வம் கொஞ்சமாவது இருக்க காரணம் சுஜாதாதான் என்றால்  அது மிகை ஆகாது.இன்று வலை பூக்கள் நடுத்தும் 90% பேர் சுஜாதாவின் விசிறிகளாக இருப்பார்கள் என்பதில் சிறு ஐயம் கூட வேண்டாம்.

சரி பெரிய விஷயங்களையும் பாமரர் புரியும் வண்ணம் சொல்லும் சுஜாதா இன்று உயிரோடு இருந்து இருந்தால் எதை பற்றி எழுதி இருப்பார். ஒரு கற்பனை.

1. எந்திரன் படத்தில் இடம் பெற்று இருந்த அறிவியல் சார்ந்த விஷயங்களுக்கு விளக்கம் அளித்து இருப்பார். எந்திரன் கதைக்கு சொந்தம் தேடும் நபர்களை தோள் உரித்துக் காட்டி இருப்பார்.எந்திரன் படத்தின் தரம் இன்னும் உயர்ந்து இருக்கும்.

2. 2ஜி அலைவரிசையில் நடந்தது என்ன? எப்படி ஏலம நடந்து இருக்க வேண்டும் என்பதை  செல்போன்  வைத்திருக்கும் அனைவருக்கும் எளிய நடையில் புரிய வைத்து இருப்பார்( இன்னும் எனக்கு 2ஜி விவகாரங்கள் பற்றி சரியாக புரியவில்லை).

3. உலகம் வெப்பமயமாவதால் தற்போது ஏற்பட்டுள்ள தீமைகள்.பீடீ கத்தரிக்காய் பற்றிய தகவல்களை கூறி இருப்பார்.

4.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் எதிர் காலம் பற்றியும், 20-20 இன் வளர்ச்சி பற்றியும் புள்ளி விபரங்களோடு கூறி இருப்பார்.

5.அமெரிக்காவில் வரும் பொருளாதார வீழ்ச்சி (recession) ஆண்டிபட்டியில் உள்ள ஆறுமுகத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும்,அதற்கு ஒபாமா என்ன நடவடிக்கை எடுத்தார்  என்பதையும் எழுதில் புரிய வைத்து இருப்பார்.

6.அயோத்தி வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி அலசி இருப்பார்.

7. நந்தலாலா படத்தின் கதையை தனது என கொண்டாடுவோரின் முகத்திரையை உலகப் படங்கள்களின் எடுத்துக்காட்டுகளோடு கிழித்து எறிந்து இருப்பார்.
8.தமிழ் செம்மொழி மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கியமானதை நமது பார்வைக்கு தந்து இருப்பார்.
9.இலங்கையில் இனி ஏற்படவேண்டிய அரசியல் தீர்வு என்ன என்பதை அவர் பார்வையில் கூறி இருப்பார்.

இதை எல்லாம் தற்போது எந்த எழுத்தாளர்களும் மக்களுக்கும் புரியும்படி கூறியதாக எனக்கு தெரியவில்லை.

இது அமரர் சுஜாதா அவர்களால் மட்டுமே முடிந்த ஒன்று.அவரை போன்று ஒரு அறிவியல் எழுத்தாளர் தமிழில் இல்லை என்பது மட்டும் நிஜம.

நன்றி.

6 comments:

Anonymous said...

Arumai !!!! Sujathavai ninaivu koornthirukkum vitham nangu!!!

பத்மநாபன் said...

அருள் அட்டகாசம் ... இது கற்பனையல்ல நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்தவாறு தெள்ள தெளிவாக புரியவைத்திருப்பார்...

என் பங்குக்கு பத்தாவது..

நம்மை ஆளப்போகும் நானோ தொழில் நுட்பத்தை எளிதாக புரிய வைத்திருப்பார்..

umesh said...

Brilliant post

Anonymous said...

Finally, an issue that I am passionate about. I have looked for information of this caliber for the last several hours. Your site is greatly appreciated.

Nagasubramanian said...

we miss Sujatha sir :(

Venkat said...

நம்மை ஆளப்போகும் நானோ தொழில் நுட்பத்தை எளிதாக புரிய வைத்திருப்பார்..


Sujaathaa Saar has already written a book on "Naano Technology" in tamil. A very informative,absorbing book.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...