Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு விமர்சனம் ( Manmadhan ambu review )


மன்மதன் அம்பு விமர்சனம் ( Manmadhan ambu review)

                   

ஒரு பண்பட்ட நடிகரிடம் இருந்து எதிர்பார்த்திடாத ஒரு திரைக்கதை.கமல் மறுபடியும் தான் ஒரு சிறந்த கதை ஆசிரியர் இல்லை என்பதை கமல் நிருபித்து விட்டார்.

பொதுவாக கமல் திரைப்படங்களுக்கு காணப்படும் கூட்டம் கூட இந்த படத்திற்கு காணவில்லை. வியாழக்கிழமை ரிலீஸ் செய்ததால் என்னவோ என்று தெரியவில்லை.அடையாரில் உள்ள முக்கியமான தியேட்டரில் பாதி கூட்டம் கூட இல்லை.இதை விட கொடுமை ஆன்லைனில் முன்பதிவு செய்தபோது குறைவான கட்டணத்தில் விற்பனை செய்து விட்டோம் என்று கூறி ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 20 விதம் வசூல் செய்ததுதான். என்ன கொடுமை சார் இது?

படத்தின் கதை: மாதவன் சினிமா நடிகை த்ரிஷாவை காதலிக்கிறார். த்ரிஷா மீது சந்தேகப்படும் அவர் கமல்ஹாசனை வேவு பார்க்க அனுப்புகிறார். தனது நண்பரின் உயிரைக் காக்க இந்த வேலையை செய்கிறார் கமல். கமல் மனைவி கார் விபத்தில் தன்னால்தான் இறந்தார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட த்ரிஷா கமல் மீது காதல் கொள்கிறார். மாதவன் திரிஷாவின் நன்பியான சங்கீதாவை இறுதியில் காதல் கொள்கிறார்.

என்னடா கதை இது? என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள். அப்படி கேட்டால் நாம் உலக சினிமாவை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று கூறி விடுவார்கள். படத்தின் முதல் பாதி ஒரு அளவு நன்றாக சென்றது. அதற்கு மேல் செம மொக்கை.படத்தின் கிளைமாக்ஸ் ஒன்று போதும் இந்த படம் எவ்வளவு மட்டமான படம் என்று சொல்வதற்கு.எனக்கு இரண்டாம் பாதியில் பாதி வசனம் மற்றும் கதை புரியவில்லை. ஏனென்றால் நான் சினிமாவை ரசிக்கத்தெரியாத ஒரு பாமர ரசிகனாக இருக்கலாம் அல்லது ஆங்கிலம் தெரியாதவனாக இருக்கலாம். இரண்டாம் பாதியில் எனக்கு ஒரு இடத்தில கூட சிரிப்பு வரவில்லை. கிரேசி மோகன் இல்லாத குறை அப்பட்டமாக தெரிந்தது.

கமல் ஒரு நல்ல நடிகன் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் அவர் ஒரு மோசமான கதை ஆசிரியர் என்பதை மறுபடியும் நிருபித்து விட்டார்.கலைவாணி ஓவியா இந்த படத்தில் என்ன செய்கிறார் என்று இயக்குனர்தான் கூற வேண்டும். திரிஷா சொந்த குரலில் பேசியதாக கேள்விப்பட்டேன். முடியல! தயவு செய்து இனிமேல் உங்கள் குரலில் டப் செய்யாதீர்கள்.கே.எஸ்.ரவி குமார் படத்தில் ஒரு காட்சியில் வந்து போகிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தயவு செஞ்சு தெலுங்கு  படத்திற்கே இசை அமைத்தால் நன்றாக இருக்கும்.

முடிவாக இந்த படம் தமிழ்நாட்டு ரசிகர்கள் புரியாத வண்ணம்,முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்பட்ட ஒரு உலக திரைப்படம். கமல்ஹாசனை பொறுத்த வரை மக்கள் புரிந்து கொள்ளாத மற்றுமொரு திரைப்படம்.
  

5 comments:

KrishnaDeverayar said...

//என்னடா கதை இது? என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள். அப்படி கேட்டால் நாம் உலக சினிமாவை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று கூறி விடுவார்கள்0.//

Very True!! I am not even planning to watch this show. In fact I never watched any of kamal movie since anbe shivam.

Just can't be bothered about him.

Anonymous said...

While your comments may come across pretty harsh for Kamal fans, I will wholeheartedly agree with every point you made. Kamal is a bery good actor if he just sticks to acting and he should stop thinking that he is Kalai Gyani. He Kalai Gyana Soonyam.

Anonymous said...

While your comments may come across pretty harsh for Kamal fans, I will wholeheartedly agree with every point you made. Kamal is a bery good actor if he just sticks to acting and he should stop thinking that he is Kalai Gyani. He Kalai Gyana Soonyam.

kalai said...

A hard core kamal fan also saying the same thing as you mentioned and this shows that you are a good reviewer. keep go on..

சந்தோஷ் குமார்.பெ said...

அருள்... உங்கள் ரஜினி மற்றும் சச்சின் பற்றிய பதிவுகள் அனைத்தும் அருமை...

விமர்சனங்களும் நன்றாக இருக்கிறது, இன்னும் விரிவாக விமர்சித்தால் மேலும் மெருகூடும்...

என்னை பொருத்தவரை மன் மதன் அம்பு திரைப்படம் நன்றாகவே இருந்தது...

நான் சென்றிருந்த திரையரங்கில் மற்றவர்களும் படத்தை பற்றி நல்லபடியாகதான் பேசிக்கொண்டார்கள்...

மேலும் நல்ல பதிவுகளை எதிர்பார்க்கும் உஙகள் நண்பன்.. சந்தோஷ் குமார்.பெ.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...