Tuesday, December 28, 2010

மன்மதன் அம்பு சில கேள்விகள்(Manmadhan ambu Questions)

                                            மன்மதன் அம்பு சில கேள்விகள்:

                                            

 

எந்திரன் படத்திற்கு கேள்வி பதில் எழுதிய எனக்கு மன்மதன் அம்பு படத்திற்கு கேள்வி மட்டும் தான் எழுத தெரிந்தது. பதில் அல்ல. பதில் தெரிந்தால் நீங்கள் கூறுங்கள்.

படத்திற்கு செலவு ஐம்பது கோடி என்று கமல் கூறினாரே அது உண்மையா? ஏன் என்றால் படத்தின் காட்சிகள் இது ஒரு சிறிய பொருட்செலவில் எடுத்த படம்  போல் தெரிந்தது அதனால்தான்!அல்லது கமல் சம்பளம் அதிகமாக வாங்கினாரா?

படத்தில் தமிழ் மெல்ல சாகும் என்று கமல் கூறியது த்ரிஷாவின் சொந்த குரலை வைத்தா? அல்லது படம் முழுக்க இவர் எழுதி இருக்கும் ஆங்கில வசனத்தை வைத்தா?

படத்தில் கப்பல் இடம் பெற்றதற்கு காரணம் ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ்(1946 ) படத்தில் கப்பலில் கதை நடப்பதால் தானா? அல்லது கப்பல் படத்தின் கதைக்கு தேவை பட்டதா?

படத்தில் பிரம்மாண்ட கப்பலை வீடு போல் காட்டிய ஒளிப்பதிவாளர் பற்றி ஞானி ஓ பக்கங்களில் எழுதுவாரா?அல்லது இவர் தன மகன் என்பதால் உலக ஒளிப்பதிவு என்று கூறுவாரா?

படத்தில் களவாணி ஓவியாவிற்கு என்ன வேடம்? ஆயா வேடமா அல்லது மாதவனின் அத்தை பெண் வேடமா ? 


ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ்(1946 ) படத்தை காபி அடித்ததற்கு காரணம் புது படமாக இருந்தால் மக்கள் கண்டு புடித்து விடுவார்கள் என்ற காரணமா? அல்லது உங்களுக்கு தெரிந்த உலக படம் மக்களுக்கு தெரியாது என்பதலா?

மன்மதன் அம்பு என்ற பாடல் முன்பு யாவரும் கேளிர் என்று எழுதப்பட்டதா? ஏனென்றால் ஒரே ராகத்தை வைத்துக்கொண்டு படத்தின் பெயரை வைத்துக்கொண்டு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பதால் கேட்கிறேன்.

கமல்ஹாசனும் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் சேர்ந்து ஒரு ஒரிஜினல் தமிழ் படத்தையாவது தருவார்களா?இதற்கு முந்தைய படங்கள் அனைத்தும் காபிதான்.
அவ்வை சண்முகி((Tootsie & Mrs. Doubtfire)
தெனாலி(What about Bob?)
பஞ்ச தந்திரம்(Very Bad திங்க்ஸ்)தசாவதாரம்(
Outbreak )

படத்தில் நீல வானம் பாடலின் கேமரா யுத்தி சித்திரம் பேசுதடி படத்தின்
"இடம் பொருள் பார்த்து" என்ற பாடலில் இருந்து உருவப்பட்டதா?

இறுதியாக,

படத்தில் தாங்கள் எழுதிய கவிதையை நீக்கியதற்கு காரணம் ஹிந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பா? அல்லது அந்த பாடலை படத்தில் எங்கு சேர்ப்பது என்று அறியாத காரணத்தினாலா?

என்னிடமே ஒரு கேள்வி

நான்  இந்த படத்திற்கு போனதற்கு காரணம் கமல்ஹாசனின் நடிப்பை பார்க்கவா? அல்லது தூங்கவா?

தெரியலயேப்பா!

10 comments:

சந்தோஷ் குமார்.பெ said...

நறுக்... கேள்விகள்....

யாவரும் கேளிர் கேள்விதான் கொஞ்சம் புரியல.....

arul said...

@Santhosh,


யாவரும் கேளிர் is the previous title for this film.So I asked whether this will be the title song in manmadan ambu becoz Devisriprasad always make songs with the film title

Nagasubramanian said...

I have not yet watched the movie. But friends told that movie is average. I like ur questions.
esp abt budget(50Cr)
ஆங்! செல்லாது செல்லாது

Vaanathin Keezhe... said...

Hahahaha....

Anonymous said...

dear readers
don't compare kamal with rajini
kamal is selfish and not a good character man and gnani is a cheep
popularity fellow.

Ambu -- parthen PADAM bussssss.

oooothikichu....

saravanan, pattabiram

Ani said...

Neela vaanam is definitely not taken from Chithiram Pesudhadi.. It is actually taken from Coldplay's "The Scientist"
http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0

Anonymous said...

ஐம்பது கோடி என்று சொன்னால் தான் INCOME TAX LA இருந்து RED GIANT MOVIES தப்பிக்க முடியும்

kppradeep said...

Have posted in my Facebook profile and hope you wont object.
your post was superb
Advanced new year wishes and may god bless you with good health and peace of mind

Anonymous said...

தம்பி எந்திரன் ஐரோபோட் படத்தின் காப்பி. அதையும் சேர்த்து சொல்லு தம்பி. உங்க ரஜினி இதுக்கு முன்னாடி வெறும் மொக்கை படமா நடிச்சான் . மொக்கை படமா நடிப்பதற்கு நடிக்காமலே இருக்கலாம்

Anonymous said...

Good.But try to give some useful information for life apart from movies.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...