Tuesday, December 28, 2010

மன்மதன் அம்பு சில கேள்விகள்(Manmadhan ambu Questions)

                                            மன்மதன் அம்பு சில கேள்விகள்:

                                            

 

எந்திரன் படத்திற்கு கேள்வி பதில் எழுதிய எனக்கு மன்மதன் அம்பு படத்திற்கு கேள்வி மட்டும் தான் எழுத தெரிந்தது. பதில் அல்ல. பதில் தெரிந்தால் நீங்கள் கூறுங்கள்.

படத்திற்கு செலவு ஐம்பது கோடி என்று கமல் கூறினாரே அது உண்மையா? ஏன் என்றால் படத்தின் காட்சிகள் இது ஒரு சிறிய பொருட்செலவில் எடுத்த படம்  போல் தெரிந்தது அதனால்தான்!அல்லது கமல் சம்பளம் அதிகமாக வாங்கினாரா?

படத்தில் தமிழ் மெல்ல சாகும் என்று கமல் கூறியது த்ரிஷாவின் சொந்த குரலை வைத்தா? அல்லது படம் முழுக்க இவர் எழுதி இருக்கும் ஆங்கில வசனத்தை வைத்தா?

படத்தில் கப்பல் இடம் பெற்றதற்கு காரணம் ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ்(1946 ) படத்தில் கப்பலில் கதை நடப்பதால் தானா? அல்லது கப்பல் படத்தின் கதைக்கு தேவை பட்டதா?

படத்தில் பிரம்மாண்ட கப்பலை வீடு போல் காட்டிய ஒளிப்பதிவாளர் பற்றி ஞானி ஓ பக்கங்களில் எழுதுவாரா?அல்லது இவர் தன மகன் என்பதால் உலக ஒளிப்பதிவு என்று கூறுவாரா?

படத்தில் களவாணி ஓவியாவிற்கு என்ன வேடம்? ஆயா வேடமா அல்லது மாதவனின் அத்தை பெண் வேடமா ? 


ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ்(1946 ) படத்தை காபி அடித்ததற்கு காரணம் புது படமாக இருந்தால் மக்கள் கண்டு புடித்து விடுவார்கள் என்ற காரணமா? அல்லது உங்களுக்கு தெரிந்த உலக படம் மக்களுக்கு தெரியாது என்பதலா?

மன்மதன் அம்பு என்ற பாடல் முன்பு யாவரும் கேளிர் என்று எழுதப்பட்டதா? ஏனென்றால் ஒரே ராகத்தை வைத்துக்கொண்டு படத்தின் பெயரை வைத்துக்கொண்டு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பதால் கேட்கிறேன்.

கமல்ஹாசனும் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் சேர்ந்து ஒரு ஒரிஜினல் தமிழ் படத்தையாவது தருவார்களா?இதற்கு முந்தைய படங்கள் அனைத்தும் காபிதான்.
அவ்வை சண்முகி((Tootsie & Mrs. Doubtfire)
தெனாலி(What about Bob?)
பஞ்ச தந்திரம்(Very Bad திங்க்ஸ்)தசாவதாரம்(
Outbreak )

படத்தில் நீல வானம் பாடலின் கேமரா யுத்தி சித்திரம் பேசுதடி படத்தின்
"இடம் பொருள் பார்த்து" என்ற பாடலில் இருந்து உருவப்பட்டதா?

இறுதியாக,

படத்தில் தாங்கள் எழுதிய கவிதையை நீக்கியதற்கு காரணம் ஹிந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பா? அல்லது அந்த பாடலை படத்தில் எங்கு சேர்ப்பது என்று அறியாத காரணத்தினாலா?

என்னிடமே ஒரு கேள்வி

நான்  இந்த படத்திற்கு போனதற்கு காரணம் கமல்ஹாசனின் நடிப்பை பார்க்கவா? அல்லது தூங்கவா?

தெரியலயேப்பா!

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு விமர்சனம் ( Manmadhan ambu review )


மன்மதன் அம்பு விமர்சனம் ( Manmadhan ambu review)

                   

ஒரு பண்பட்ட நடிகரிடம் இருந்து எதிர்பார்த்திடாத ஒரு திரைக்கதை.கமல் மறுபடியும் தான் ஒரு சிறந்த கதை ஆசிரியர் இல்லை என்பதை கமல் நிருபித்து விட்டார்.

பொதுவாக கமல் திரைப்படங்களுக்கு காணப்படும் கூட்டம் கூட இந்த படத்திற்கு காணவில்லை. வியாழக்கிழமை ரிலீஸ் செய்ததால் என்னவோ என்று தெரியவில்லை.அடையாரில் உள்ள முக்கியமான தியேட்டரில் பாதி கூட்டம் கூட இல்லை.இதை விட கொடுமை ஆன்லைனில் முன்பதிவு செய்தபோது குறைவான கட்டணத்தில் விற்பனை செய்து விட்டோம் என்று கூறி ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 20 விதம் வசூல் செய்ததுதான். என்ன கொடுமை சார் இது?

படத்தின் கதை: மாதவன் சினிமா நடிகை த்ரிஷாவை காதலிக்கிறார். த்ரிஷா மீது சந்தேகப்படும் அவர் கமல்ஹாசனை வேவு பார்க்க அனுப்புகிறார். தனது நண்பரின் உயிரைக் காக்க இந்த வேலையை செய்கிறார் கமல். கமல் மனைவி கார் விபத்தில் தன்னால்தான் இறந்தார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட த்ரிஷா கமல் மீது காதல் கொள்கிறார். மாதவன் திரிஷாவின் நன்பியான சங்கீதாவை இறுதியில் காதல் கொள்கிறார்.

என்னடா கதை இது? என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள். அப்படி கேட்டால் நாம் உலக சினிமாவை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று கூறி விடுவார்கள். படத்தின் முதல் பாதி ஒரு அளவு நன்றாக சென்றது. அதற்கு மேல் செம மொக்கை.படத்தின் கிளைமாக்ஸ் ஒன்று போதும் இந்த படம் எவ்வளவு மட்டமான படம் என்று சொல்வதற்கு.எனக்கு இரண்டாம் பாதியில் பாதி வசனம் மற்றும் கதை புரியவில்லை. ஏனென்றால் நான் சினிமாவை ரசிக்கத்தெரியாத ஒரு பாமர ரசிகனாக இருக்கலாம் அல்லது ஆங்கிலம் தெரியாதவனாக இருக்கலாம். இரண்டாம் பாதியில் எனக்கு ஒரு இடத்தில கூட சிரிப்பு வரவில்லை. கிரேசி மோகன் இல்லாத குறை அப்பட்டமாக தெரிந்தது.

கமல் ஒரு நல்ல நடிகன் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் அவர் ஒரு மோசமான கதை ஆசிரியர் என்பதை மறுபடியும் நிருபித்து விட்டார்.கலைவாணி ஓவியா இந்த படத்தில் என்ன செய்கிறார் என்று இயக்குனர்தான் கூற வேண்டும். திரிஷா சொந்த குரலில் பேசியதாக கேள்விப்பட்டேன். முடியல! தயவு செய்து இனிமேல் உங்கள் குரலில் டப் செய்யாதீர்கள்.கே.எஸ்.ரவி குமார் படத்தில் ஒரு காட்சியில் வந்து போகிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தயவு செஞ்சு தெலுங்கு  படத்திற்கே இசை அமைத்தால் நன்றாக இருக்கும்.

முடிவாக இந்த படம் தமிழ்நாட்டு ரசிகர்கள் புரியாத வண்ணம்,முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்பட்ட ஒரு உலக திரைப்படம். கமல்ஹாசனை பொறுத்த வரை மக்கள் புரிந்து கொள்ளாத மற்றுமொரு திரைப்படம்.
  

Tuesday, December 21, 2010

விருதகிரி விமர்சனம் (Virudhagiri review)

                விருதகிரி நடந்தது என்ன? 

                   

விருதகிரி படம் நேற்றுதான் பார்த்தேன். விஜயகாந்த் முதல் முறையாக இயக்கி இருக்கிறாரே? என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள சென்று இருந்தேன். இனிமேல் என் படத்திற்கு வருவீயாடா? என்று விஜயகாந்த் நேரடியாக அனைவரையும் பார்த்து கேட்டதுபோல் இருந்தது.

படத்தின் கதை. விஜயகாந்த் படத்தை இதற்கு முன்னால் பார்த்தவர்களுக்கு சத்தியமாக கதை என்ன என்பது தெரிந்து இருக்கும். இருந்தாலும் அந்த விஷ பரிட்சையை இதளவு மேற்கொள்ளாதவர்களுக்காக கதையை கூறுகிறேன். இதுவரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து தீவிரவாதிகளையும் பிடித்த விஜயகாந்த் தற்போது ஆஸ்திரேலியாவில் மாணவர்களை துன்புறுத்தும் தீவிரவாதிகளை பிடிக்கிறார். என்ன இப்பவே கண்ண கட்டுதா?


ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க முடியாமல் திணறும் மத்திய அரசு இந்த படத்தை பார்த்தால் மிரண்டு விடுவார்கள். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதையும், ஒரு ஆங்கிலப்படத்தையும்(Taken) இணைத்து ஒரு திரைக்கதை உருவாக்கி இருக்கிறார். சரி அதையாவது ஒரு புத்திசாளிதனமாக எடுத்து இருக்க வேண்டாமா?


ஆஸ்திரேலியாவில் புகுந்து ரணகளம் செய்கிறார். கையில் கிடைத்தவனை எல்லாம் சுட்டுக் கொள்கிறார். இன்னும் கொஞ்சம் இருந்தால் அவர் மீட்க சென்ற மாணவர்களையும் சுட்டு இருப்பார் போல. என்ன ஒரு ரணகளம். ஆஸ்திரேலியாவில் துப்பாக்கியோடு இவர் உள்ளே நுழைய முடியுமா? அப்பா சாமி! போதும்டா ஒட்டுனது ரீல் அந்து போச்சு.


படத்தில் காமெடி நடிகர் என்று யாரும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. விஜயகாந்த் அதை நிறைவு செய்கிறார். ஸ்காட்லாந்து யார்ட் போலிசுக்கு அவர் உதவி செய்யும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை அடங்க ஐந்து நிமிடம் ஆகிறது. படத்தில் இவரே காமெடிக்கு போதும் என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் அருண் பாண்டியன். எப்படியா இந்த மாதிரி எல்லாரையும் தேர்ந்து எடுத்து புடிச்சீங்க? அருண் பாண்டியன் ஆஸ்திரேலியா போலீசில் உயர் அதிகரியாம்! இந்தப்படத்தை தெரியாமல் யாரவது ஆஸ்திரேலியாவில் பார்த்தால் என்ன ஆவது.

இது பரவாயில்லை? படத்தில் விஜயகாந்த் பேசும் ஆங்கில வசனங்கள் இருக்கிறதே! Why blood? Same blood? படத்தில் ஒரே ஒரு நல்ல விஷயம் விஜயகாந்திற்கு ஜோடி இல்லை. அதுவும் இருந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்துகூட பார்க்க முடியவில்லை.படத்தின் இசையை கேட்டு எனக்கு செவில் பிகில் ஊதிகிச்சு.


படம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஒன்று புரிந்தது.

விஜயகாந்த் இனிமேல் படங்களில் நடிக்காமல் இருந்தால் அவருக்கு இன்னும் கொஞ்சம் ஓட்டு அதிகமாக விழும் என்பது மட்டும் நிஜம்.


Saturday, December 18, 2010

ஈசன் - திரை விமர்சனம் ( Easan review)

ஈசன்- திரை விமர்சனம் சுப்புரமணியபுரம் தந்த பாதிப்பால் ஈசன் படத்தை முதல் நாளில் பார்த்தேன். இந்த படம் தந்த பாதிப்பால் அடுத்த சசிகுமார் படத்தை முதல் நாளில் பார்க்க மாட்டேன் என்பது மட்டும் நிஜம்.

சரி ஈசன் படத்தின் விமர்சனத்துக்கு வருவோம். ஒரு அரசியல்வாதியின் மகன் தன் சக நண்பர்களுடன் பார்ட்டி,பப் என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறான்.அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். வழக்கம் போல் பெண்ணின் தந்தை அதற்கு எதிர்ப்பு தெருவித்து பின் அந்த காதலை ஏற்கிறார். திருமணத்துக்கு முன்பு மணமகன் காணாமல் போகிறான். அவன் எப்படி காணாமல் போனான் என்பதை நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்துகிறார். அவன் எப்படி காணமல் போனான் என்பது நம் தலைவரின் நான் மகான் அல்ல திரைபடத்தில் இருந்து நாம் பார்த்ததே.

சத்தியமாக, முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் ஒரு கோர்வையும் இல்லாமல் நான் பார்த்த முதல் படம் இதுதான். முதல் பாதியில் இயக்குநர் என்னதான் சொல்ல விரும்புகிறார்? நகரத்தின் வாழ்க்கையை அவர் காட்ட நினைத்து இருந்தால் இரண்டு காட்சிகளில் காட்டி இருக்கலாம். அதை இடைவேளை வரையுமா காட்ட வேண்டும்? ஒரு பெண் கற்பழிக்கபதுவதும் அதன் பின் பெண்ணிற்கு நடக்கும் உபாதைகளையும் வித்தியாசமாக காட்டுகிறோம் என்று கர்ண கொடூரமாக காட்டி இருக்கிறார். அதன் பின் இறுதி காட்சியில் வரும் வன்முறைகள்,
இதை யாரவது ஒருவர் தன் குழந்தைகளையோ? அல்லது பெண்களையோ வைத்துக்கொண்டு பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. சென்சார் போர்டு அதிகாரிகள் படம் பார்க்கும்போது தூங்கி விட்டார்களா என்று தெரியவில்லை. சாதாரணமாக அனுஷ்கா கொஞ்சம் இடுப்பைக் காட்டினாலே “A” சான்றிதழ் கொடுக்கும் இவர்கள் இந்த படத்திற்கு ஏன் தரவில்லை?

படத்தின் பலம் என்று பார்த்தால் அது போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்துரகனியின் நடிப்புதான். பல பேர் மீசை வைத்து, உடம்பை வளர்த்து செய்யும் போலீஸ் பாத்திரத்தை தன் நடை,உடை மூலமே சிறப்பாக செய்து இருக்கிறார்.ஒளிப்பதிவாளரும் தன் பங்கை சிறப்பாக செய்து உள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசையும், பாடல்களும் அருமை.சசிகுமாரின் தனித்துவமும், வசனமும் சில காட்சிகளில் அவர் உள்ளே இன்னும் சிறந்த இயக்குநர் உள்ளார் என்பதை தெருவிக்குறது.

மற்றபடி, இந்த படத்தின் கதை தலைவரின் நான் மகான் அல்ல திரைப்படத்தையும், திரைக்கதை கார்த்திக்கின் நான் மகான் அல்ல திரைப்படத்தையும் எனக்கு நினைவு படுத்துகிறது.

Rating: 2/5
Saturday, December 11, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் கவிதை

                     சூப்பர் ஸ்டார்  ரஜினியின் பிறந்தநாள் கவிதை:


             
                                   
டிசம்பர் 6 ஐ
(சோகத்தை) மறக்க வைத்த தினம்
டிசம்பர் 12

வருடத்தின் இரண்டாவது காந்தி ஜெயந்தி
டிசம்பர் 12

வருடத்தின் முதல் கிறிஸ்துமஸ்
டிசம்பர் 12

அறிவிக்கப்படாத  தமிழர் திருநாள்
டிசம்பர் 12

டிசம்பர் பூவிற்கு மேலும் பெருமை சேர்த்த தினம்
டிசம்பர் 12

தின காலண்டரும் காத்து இருக்கும் நாள்
டிசம்பர் 12

தேசத்தந்தை பிறந்தது அக்டோபர் 2 , தேசத்தின் மகன் பிறந்தது
டிசம்பர் 12

வான்  நட்சத்திரம் பூமியில் உதித்த நாள்
டிசம்பர் 12

இந்திய சினிமாவின் அடையாளம் தோன்றிய நாள்
டிசம்பர் 12

இறுதியாக,

தமிழகத்தின் வருங்கால நிரந்தர முதல்வர் பிறந்த தினம்
டிசம்பர் 12

ஆம்,

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் டிசம்பர் 12 .

தலைவா உனக்கு அகவை 61  என்கிறார்கள். அவர்கள் நாள் காட்டியில் எப்பொழுதும் பிழை உள்ளது. எங்களுக்கு தெரியும் நீ என்றும் பதினாறு என்று!தேசத்தின் மகன் என்று.

இவ்வையகம் உள்ள வரை நீ என்றும் இளமையாக வாழ வேண்டும் என்று எல்லாம்வல்ல  இறைவனை ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
Thursday, December 9, 2010

இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி


இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி

படம் பார்த்து கதை கூறு 


 வைரமுத்து:இவருடைய தோற்றத்தை பார்க்கும்போது இவர்தான் அடுத்த முதல்வர் என்று தெரிகிறது, இவரை எப்படி புகழ்வது என்று இப்போதே யோசிக்க வேண்டும்.கலைஞர்: என்னையா என்னை வைத்துக்கொண்டு ரஜினியை புகழ்ந்து விட்டீர்கள்?

வாலி: எனது கவிதைக்கு கிடைக்காத கைதட்டு, ரஜினி என்ற ஒரு வார்த்தையை சொன்னால் கிடைக்கிறது அதனால்தான்.
என்ன செய்தாலும் ரஜினியின் பக்கம் தானாக தலை திரும்புகிறது. அவர் பெயருக்குள்ள காந்தம் உண்டு உண்மை தானடா!
கலைஞர்: என்ன ரஜினி அரசியலுக்கு தயார் ஆயிடீங்க போல?
ரஜினி: வெளிய நல்லா மழை பெயஞ்சுட்டு இருக்கு?அப்பாவி பொது மக்கள் அவஸ்த படுறாங்க! இத இங்க இருக்குற ஒருத்தரும் கண்டுக்குற மாதிரி தெரியலையே?

Monday, December 6, 2010

அமரர் சுஜாதா (WRITTER SUJATHA)


அமரர் சுஜாதா தற்போது உயிரோடு இருந்தால்   
                 
                              
1995களின் தொடக்கம். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு புத்ததகத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணம்  எனது பெரியப்பா நூலகம் வைத்து இருந்தார். அப்பொழுது ராஜேஷ் குமார் அவர்களின்  க்ரைம் நாவல் மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ரெண்டு நாட்களுக்கு ஒரு நாவல் விதம் படித்த நான், பின் விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு மூன்று நாவல் விதம் படித்தேன். ஆனால் பிற்பாடு பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவரின் நாவல்களின் முடிவை முதலிலேயே அறிந்து கொண்டேன்.ஆனால் ராஜேஷ் குமார், க்ரைம் நாவல்கள் மீது எனக்கு தீராத காதல் உண்டு செய்து விட்டார் என்பது மட்டும் உண்மை. வேறு யாருடையது படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்

அப்பொழுதுதான் ஒரு புத்தக கண்காட்சியில் சுஜாதாவின் மர்ம கதைகள் தொகுப்பு வாங்கினேன். நான் படித்த முதல் சுஜாதா புத்தகம் இது தான். முதல் இரண்டு கதைகளையும் இரண்டு முறை படித்தேன். அதன்பின் அனைத்து கதைகளையும் ஒரு முறையிலேயே புரிந்து கொண்டேன். அட! இப்படி கூட ஒரு க்ரைம் கதையை எழுத முதுயுமா? உண்மையில் பல கதைகளில்  கருவில் க்ரைம் இல்லை. ஆனால்  அவருடைய எழுத்தால் கதையில் க்ரைம் இருந்தது போலவே காட்டி ஒரு சாதாரண கதையை க்ரைம் கதையை போல் உணர வைத்து இருந்தார்.  
எத்தனை சின்ன சின்ன விஞ்ஞான விஷயங்கள்.

அவருடைய க்ரைம் எழுத்துகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.பாருங்கள்.
ஒரு முறை கற்றதும் பெற்றதும் தொடரில் ஒரு வரியில் க்ரைம் கதை எழுத சொல்லி ஒரு போட்டி வைத்து இருந்தார். அதில் ஒருவர் எழுதியது

உலகின் கடைசி மனிதர் அறையில் இருந்த போது, கதுவு தட்டப் பட்டது. இந்த கதையை பாராட்டிய சுஜாதா இதை இன்னும் மெருக்குட்ட  வேண்டுமானால்
உலகின் கடைசி மனிதர் அறையில் இருந்த போது, கதுவு பூட்டப்பட்டது என்று எழுதினார்.பாருங்கள் அவருடைய  எழுத்துக்கூர்மையை!

படிப்படியாக அவருடைய அனைத்து வகையான புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.இன்று இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆர்வம் கொஞ்சமாவது இருக்க காரணம் சுஜாதாதான் என்றால்  அது மிகை ஆகாது.இன்று வலை பூக்கள் நடுத்தும் 90% பேர் சுஜாதாவின் விசிறிகளாக இருப்பார்கள் என்பதில் சிறு ஐயம் கூட வேண்டாம்.

சரி பெரிய விஷயங்களையும் பாமரர் புரியும் வண்ணம் சொல்லும் சுஜாதா இன்று உயிரோடு இருந்து இருந்தால் எதை பற்றி எழுதி இருப்பார். ஒரு கற்பனை.

1. எந்திரன் படத்தில் இடம் பெற்று இருந்த அறிவியல் சார்ந்த விஷயங்களுக்கு விளக்கம் அளித்து இருப்பார். எந்திரன் கதைக்கு சொந்தம் தேடும் நபர்களை தோள் உரித்துக் காட்டி இருப்பார்.எந்திரன் படத்தின் தரம் இன்னும் உயர்ந்து இருக்கும்.

2. 2ஜி அலைவரிசையில் நடந்தது என்ன? எப்படி ஏலம நடந்து இருக்க வேண்டும் என்பதை  செல்போன்  வைத்திருக்கும் அனைவருக்கும் எளிய நடையில் புரிய வைத்து இருப்பார்( இன்னும் எனக்கு 2ஜி விவகாரங்கள் பற்றி சரியாக புரியவில்லை).

3. உலகம் வெப்பமயமாவதால் தற்போது ஏற்பட்டுள்ள தீமைகள்.பீடீ கத்தரிக்காய் பற்றிய தகவல்களை கூறி இருப்பார்.

4.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் எதிர் காலம் பற்றியும், 20-20 இன் வளர்ச்சி பற்றியும் புள்ளி விபரங்களோடு கூறி இருப்பார்.

5.அமெரிக்காவில் வரும் பொருளாதார வீழ்ச்சி (recession) ஆண்டிபட்டியில் உள்ள ஆறுமுகத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும்,அதற்கு ஒபாமா என்ன நடவடிக்கை எடுத்தார்  என்பதையும் எழுதில் புரிய வைத்து இருப்பார்.

6.அயோத்தி வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி அலசி இருப்பார்.

7. நந்தலாலா படத்தின் கதையை தனது என கொண்டாடுவோரின் முகத்திரையை உலகப் படங்கள்களின் எடுத்துக்காட்டுகளோடு கிழித்து எறிந்து இருப்பார்.
8.தமிழ் செம்மொழி மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கியமானதை நமது பார்வைக்கு தந்து இருப்பார்.
9.இலங்கையில் இனி ஏற்படவேண்டிய அரசியல் தீர்வு என்ன என்பதை அவர் பார்வையில் கூறி இருப்பார்.

இதை எல்லாம் தற்போது எந்த எழுத்தாளர்களும் மக்களுக்கும் புரியும்படி கூறியதாக எனக்கு தெரியவில்லை.

இது அமரர் சுஜாதா அவர்களால் மட்டுமே முடிந்த ஒன்று.அவரை போன்று ஒரு அறிவியல் எழுத்தாளர் தமிழில் இல்லை என்பது மட்டும் நிஜம.

நன்றி.

Sunday, December 5, 2010

ரத்த சரித்திரம்-விமர்சனம் (raktha saritharam-review)

                                   ரத்த சரித்திரம்-விமர்சனம்

                                 


படத்தின் ஒரு  வரி  கதை:  கொலை , கொலை , கொலை  

காட்சிக்குக் காட்சி  ரத்தம். படம்  பார்ப்பவர்களுக்கே  ரத்த  வாடை அடிக்கும்படி   ஒரு  திரைக்கதை.  ராம்கோபால்வர்மாவிற்கு  என்ன  ஆயிற்று  என்று  தெரியவில்லை . தான் என்ன  எடுத்தாலும், மக்கள்  சிறந்த  படம்  என்று  நினைப்பார்கள்  என்று  நினைத்து  விட்டாரா ? என்று  தெரியவில்லை. இவரும் மணிரத்தினம்  லிஸ்டில்  சேர்ந்து  விட்டார்  என்பது  மட்டும்  உண்மை. 

மக்களுக்கு  நீ  நல்ல  விஷயங்களை  சொல்லவில்லை  என்றாலும்  பரவாயில்லை. கெட்ட  விஷயங்களை  காட்டிவிடாதே. பாவம் மூன்று  மணி  நேரம்  பொழுது  போக்கிற்க்காக வரும்  அவனை  பித்து  பிடுத்து  ஓட  விடாதே.
நீ  கூறலாம்  இது நிஜத்தில்  நடந்த  ஒரு  கதை  அதை  மக்களுக்கு  தெருவிக்கின்றேன்  என்று . நாட்டில்  எத்தைனையோ  நல்ல  தலைவர்கள்  கதை  இன்னும் திரைப்படமாக  எடுக்கப்படவில்லை  என்பதை  நீ  மறந்துவிடாதே.பார்தியா ரவி  ஒன்றும்  நாட்டு  மக்கள்  தெரிந்து  கொள்ள  நினைக்கும்  ஒரு  பெரிய  தலைவன்  அல்ல .

 சரி  படத்தில்  சரக்குதான் ஒன்றும்  இல்லை  என்றால்  தொழில்நுட்ப   விஷயத்தில்  அதை விட  ஒரு  குப்பை . படத்தின்  ஒளிப்பதிவாளர்  நிறைய  கிரிக்கெட்  போட்டிகள்  பார்த்து  இருப்பார்  என்று  புரிகறது . அநியாயத்திற்கு   படம்  முழுக்க  ஸ்லொவ்மோஷென்  காட்சிகள். படத்தில்  திரைகதையே  ஸ்லொவ்மோஷெனயாகத்தான்  செல்கிறது என்பதை  அவர்  மறந்து  விட்டார்  போலும் .படத்தின்  எடிட்டிங் ? அப்படி  எதாவது  இருந்தால்  படம்  பார்த்தவர்கள்  கூறலாம் .

 படத்தின்  இசை ? போதும்டா  சாமி என்று  அரங்கைவிட்டு  ஓட  வைக்க  உதவுகிறது. நாட்டின்  மிக  பெரிய  இயக்குனர்  என்று  கூறி   கொள்ளும்  RGV யின்  படத்தை  பார்க்க  சென்றது  என்  குற்றம்தான்.

விவேக்  ஒபராய் பற்றி நாம் கூற வேண்டியது தேவையில்லை.அது ஏன் என்பது  அனைவருக்கும் தெரியும். சூர்யா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அது விரலுக்கு இழைத்த நீர்தான்.

படத்தில்  கொலை  காட்சிகளை  சில  இளைஞர்கள்  கை  தட்டி ரசிக்கும்போது  நாடு  எங்கே போகின்றது  என்று  நினைத்தேன் . இதைத்தான் படம்  எடுத்தவர்கள்  எதிர்  பார்த்தார்களா என்று  தெரியவில்லை. 
திரு. தயாநிதி  அழகிரி  அவர்கள்  நாட்டை  ஆளுகின்ற  குடும்பத்தை  சேர்ந்தவர் என்பதால்  தயுவு  செய்து  இதுபோன்ற  படங்களை   தயாரிப்பதை  தவிர்க்கலாம் .இன்னும்  தரமான  படங்களை  தயாரிக்கலாம்.

Friday, December 3, 2010

இதனால்தான் இவர் சூப்பர் ஸ்டார்

                                            இதனால்தான் இவர் சூப்பர் ஸ்டார்


இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இந்த படத்தைப்  பாருங்கள். புரிகிறதா? 


                                                 

இந்தியாவின் பிக் பீ என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனை ஒரு புகைப்படக்காரரும் கண்டுகொள்ளவில்லை. அணைத்து கமெராவும் தலைவர் மீதுதான்.

இது நடந்தது எங்கு தெரியுமா? மும்பையில்!

ஏற்கெனெவே பலமுறை பல முதல்வர்கள்  கலந்து கொண்ட கூட்டங்களில் கூட தலைவருக்குதான் வரவேற்ப்பு அதிகம் என்பது நாம் அறிந்ததே.

இந்த புகைப்படத்தை பார்த்துடன் நான் உணர்ந்தது.

                    "தலைவருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு "

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...