Friday, November 26, 2010

ரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)

                                         ரஜினி கமல் நட்பு ஒரு பார்வை:


“இந்த தலைமுறை நடிகர்களில் ரஜினியும் என்னையும்போல் ஒரு நண்பர்கள் இருந்தால் காட்டுங்கள் ” என்று கமல் 50 விழாவில் கமல்ஹாசன் கூறியது நினைவு இருக்கலாம் .
சரி இது உண்மையா? இந்த பதிவில் காண்போம்.

நட்பின் நிகழ்வுகள்:

எனக்கு 2000ஆம் ஆண்டுக்குப்பின்தான் சற்று விபரம் புரியும் என்பதால் அதன்பின் நிகழ்ந்த நிகழ்வுகளை தொகுக்கிறேன்.

கமல் ஆரம்ப காலத்தில் பெரிய நடிகராக நடித்துக் கொண்டு இருந்த போது அவருடன் தன்னை நடிக்க வைத்ததை ரஜினி இன்னும் மறக்கவில்லை . அதுதான் ரஜினி கமல் மீது கொண்டிருக்கும் மிக பெரிய மதிப்புக்கு முக்கிய காரணம்.

இந்த அன்பின் வெளிபாடுதான்

“கமல்தான் சூப்பர்ஸ்டார் ” என்று கமல் 50 விழாவில் பேசியது .

“ஆளவந்தான் தன்னை அழிக்க வந்தான் “ என்று தாணு கூறியபோது அவரைக் கண்டித்தது.

தசாவதாரம் ஒரு மொக்கை படமாக இருந்தாலும் அந்த படத்தை முதல் காட்சியை பார்த்து கமலின் பத்து அவதாரங்களை ரசித்தது . வியந்து பாராட்டியது.

இன்னும் நிறைய விஷயங்கள் நடந்து இருக்கலாம் , ஆனால் கமல் ரஜினியின் நட்புக்காக செய்தது என்ன?

பாபா படத்திற்கு அத்தனை இடையூறு வந்த போது குரல் கொடுத்தாரா? புன்னகை மன்னன் மௌனம் சாதித்தார்.

சந்திரமுகியும் ,மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதை என்னவோ ரஜினி ரசிகர்கள் விரும்பாதது போல் , மும்பை எக்ஸ்பிரஸ் Apr 14,2005 அன்று வெளியாகும் இதை கடவுளே நினைத்தாலும் தடுக்க முடியாது என்றார் . ஆனால் அதன்பின் நடந்தது ஊர் அறிந்தது.

இதைவிட கொடுமை , தலைவர் காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது “இது ஒரு அரசியல் மேடை ”என்று உண்ணாவிரத பந்தலில் சொன்னது.(சிம்ரனுடன் ஜாலியாக காவிரி போராட்டத்தில் கலந்து கொண்ட கமல் மக்கள் சக்தியை அரசியல் மேடை என்கிறார்.

                                          


கியாஸ் தியரி :

இது மட்டும் தானா? கமல் தசாவதாரத்தில் கூறிப்பிடும் கியாஸ் தியரியை (உலகத்தில் எந்த ஒரு செயலும் ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்கும் )அவருடைய வாழ்க்கையில் எப்படி ஒத்து போகிறது பார்ப்போம்.

சிவாஜி 60 கோடியில் தயாராகிறது என்றவுடன் தசாவதாரத்தை 70 கோடியில் எடுத்தார்.

எந்திரன் 150 கோடியில் தயாராகிறது என்றவுடன் மர்மயோகியை தொடங்கினார். அது என்ன ஆனது என்று மர்மமாகவே உள்ளது .

எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்ததால், மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்தினார்.அது நடந்ததா என்பது கூட பாதி பேருக்கு தெரியாது.

சரி இது எல்லாம் ரஜினியை பாதிக்கவில்லையா?

தலைவர் எப்பொழுதும் திருக்குறள் நெறிப்படி வாழ்பவர்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

(முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.)

என்ற குறளின்படி, கமல் ஆரம்ப காலத்தில் செய்த உதவியை எண்ணி மற்ற அனைத்தையும் மறப்பவர்.

ஆனால் கமல், ரஜினி தன்னை விட முதல் இடத்தில இருக்கிறாரே என்று பொறாமை பட்டதன் வெளிபாடுதான் மேல் நடந்த நிகழச்சிகள் அனைத்தும்.

சரி ரஜினி கமல் நட்பு போல் யாரும் தற்போது இல்லையா? விஷயத்துக்கு வருவோம்.

பொதுவாக நம் மனித இயல்பு நம் எதிரி முன்னுக்கு வந்தால் நமக்கு போட்டிதான் இருக்கும். ஆனால் நம் நண்பன் முன்னுக்கு வந்தால் நமக்கு பொறாமை இருக்கும்.

ஒரு சாதாரண மனிதனைப்போலதான் கமல் நடந்து கொள்கிறார்.இது நாம் அனைவரும் செய்வதே.

ஏனென்றால் நாம் அனைவரும் கேவலமான மனித பிறவிகள்தானே?

ஆனால் ரஜினி? மனித பிறவியா அவர்? அவர் ஒரு அதிசிய பிறவி . தெய்வ பிறவி. 

                                            

அதனால், எதிர் துருவங்கள் ஒன்றோடு ஒன்று ஈர்க்கும் என்பதுபோல ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரு உண்மையான நட்பு கிடைக்கும்.

கமல் இனி மார்த்தட்டி தெருவித்து கொள்ளலாம்.

நானும் ரஜினியும்தான் சிறந்த நண்பர்கள் என்று .

ஏனென்றால் எனக்கு தெரிந்து ரஜினியைப்போல் ஒரு அதிசய பிறவி தற்போது யாரும் உயிரோடு இல்லை.

அதனால் ரஜினியுடன் கமல் கொண்ட நட்பு தெய்வீக நட்பு என்பதில் ஒரு துளிக்கூட சந்தேகம் வேண்டாம்.

இப்படிக்கு,

அ.அருள்செல்வன்.

14 comments:

Dhiva said...

Nice post machi!!

KICHA said...

இந்த நட்பு உயிருடன் இருக்க காரணம் ரஜினியே. உண்மைதான்.

kppradeep said...

Well said and with your permission can you put it in Face book?

arul said...

@pradeep,

No issues pradeep. Please mention my link its enough

Srinivas said...

naanum pottukaren FB la :)

Anonymous said...

தம்பி , உன்னுடைய ப்ளாக்ல A.R Rahman தவிர மற்ற ரெண்டு பேருமே மிகச் சுயநல வாதிகள். ( ரஜினி , சச்சின் ). இந்த ரெண்டு கூமுட்டைகளையும் நீ ஆதர்ச கடவுளாக மதித்து ப்ளாக் தொடங்கி சமூக சேவை செய்வது ஒரு கேனத்தனம். இதுல ரஜினியை பற்றி புகழ்ந்து பேசுவது மகா மட்டமான செயல். ரஜினி தெய்வப் பிறவியா ?? ரஜினி ஒரு தினக் கிறுக்கன் . ரஜினி ஒரு நாளைக்கு ஒன்னு பேசுவான். அடுத்த நாள் மன்னிப்பு கேட்பான். உன்னைய மாதிரி கிறுக்கன்கள் இருக்குறவரை , இந்த உலகத்தை திருத்த முடியாது. திடீரென்று நான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்பான். இன்னொரு நாள் கலைஞர் கிட்ட போயி வழிவான். அதனால கமல் அந்த அரசியல் மேடையில பேசாமல் இருந்திருக்கலாம். அதுக்காக நான் கமல் ரசிகன்னு என்னைய நினைத்து விடாதே தம்பி. ஒன்னு மட்டும் கரெக்ட்யா உன் profile ல நீ போட்டிருக்க . அது மட்டும் உண்மை. நீ ஒரு மொக்கை பையன் தான். உன் ப்ளாக் யாருக்குமே பயன்படாத ஒன்று. தயவு செய்து நீ எல்லாம் அடுத்தவனை விமர்சனம் பண்ணுற வேலைய விட்டு விடு.

Anonymous said...

IPADI CINEMAVA PATHI MATUMEA NAMA THMIL JAJAM IRUKARATHALA YHAN ARASIYAL VADHIKALUKU SUGAMA POCHU , NATULA NADAKARA VISAYATHA PARUNGAPA , CINEMA NGARATHU POLITHU POKU ADUVEA POLAPU ILLA. 3 HR PADAM PATHALEA ORU NALAIKU SEIYA VENDYA VELAI PATHI KALI, IDULA EAPAVUM CINEMA THANA??

SENTHILKUMARAN said...

தசாவதாரம் மொக்க படம் என்றால் எந்திரன் உலக காவியமா? முட்டாள் ௫ இங்கிலீஷ் படத்தை காபி அடிச்சு எடுத்த குப்பை

Anonymous said...

i like the Rajni swamy photo!thank you

saimkvaasen@gmail.com said...

Both Kamalhasan and rajinikanth's films are mokkai, but rajini is the real actor for the common man as he can play common man character, whereas kamalhasan thinks he is intellectual, and cannot be digested by common man.

sksudhan said...

super star is my god

anbhooo said...

peruya ..mayiru madhiri paesadhada mokkai paiya.... mulllum malarum.. padam paadhila stop aanadhu therinji... kamal dhan andha padam velila varadhukku help pannnadhu .. indha ulaghathukkae therium... avangha natpa irukaradhu unakku pidikalaena... moooditu iru... nalla varudhu .. vaaaila...

howthaman joy said...

ரஜினி தெய்வப் பிறவியா ?? ரஜினி ஒரு தினக் கிறுக்கன் . ரஜினி ஒரு நாளைக்கு ஒன்னு பேசுவான். அடுத்த நாள் மன்னிப்பு கேட்பான். உன்னைய மாதிரி கிறுக்கன்கள் இருக்குறவரை , இந்த உலகத்தை திருத்த முடியாது. திடீரென்று நான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்பான். இன்னொரு நாள் கலைஞர் கிட்ட போயி வழிவான்

Anonymous said...

Kamal nalla Nadigan , Rajini Nalla Manidhan.
Kuduba neriyae theriyaatha oruvan ,kudumba otrumaiya patri pesugiraan(En cinema kudumbam endru)
Vilai pogadha porulai eduthukitu,viyabaram agalainu katharunaa, Alaintha yaar porupu parupungalaa.
sinthithu paar!!!

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...