Monday, November 15, 2010

மைனா- திரை விமர்சனம்


தலைவரின் பார்வையில் மைனா:                                      

மைனா  ஒரு  திராவிடர்களின்  திரைப்படம்  என்று  தலைவர்  சென்ற  வாரம் கூறி  இருந்தார் . தலைவர்  சொன்னதில் இருந்து  இந்த   படத்தை  எப்படியாவது  பார்க்க  வேண்டும்  என்று  முடிவு  செய்தேன்
ஏற்கனவே    கமல்ஹாசன்  இந்த  திரைபடத்தை  நல்ல  படம்  என்று  கூறி இருந்தாலும்  பிரபு  சாலமனின்  முந்தைய  படமான  லாடம்   படத்தை   பார்த்து  சூடு  போட்டு  கொண்டமையால்  அமைதி  காத்தேன் .

ஆனால்  தலைவர்  அவர்களே  இந்த  படத்தில்  நான்  நடிக்கவில்லையேஎன்று  வருந்திய  பிறகு  இந்த  படத்தை  நான்  பார்க்கவில்லை  என்றால் தலைவன்  நடித்த  படத்தை  பார்க்காத   உணர்வு  வந்து  விடும்  என்பதால்  மைனாவை  அன்று  மாலை  பார்த்தேன்.பிரமித்தேன்.
கதையின்  தொடக்கம்  சிறுது  மெதுவாகவும் , ஏற்கனவே  பார்த்த  கட்சிகளாகவும்  நகர்ந்ததால்  சிறுது  நெளிந்தேன்ஆனால் நாயகன்  சிறையில்  இருந்து  தப்பிக்கும்  அந்த  காட்சியில்  இருந்து  படம்  ஜெட்  வேகத்தில்  நகர்கிறது . எதிர்பாராத பல திருப்பங்கள் . படத்தின்  கதையை  நான்  கூற  விரும்பவில்லை . நீங்கள்  அனைவரும்  சென்று  இந்த  மைனாவுடன்  பயனிகக  விரும்புகிறேன் .
எங்கே  இருந்துயா  புடுச்சீங்க? என்று  கேட்கின்ற  அளவுக்கு  ஒவ்வொரு   கதாபாத்திரமும்  நடிப்பில்  பின்னி எடுக்கிறார்கள் . படத்தின்  பெயர்  போடும்  பொழுது  நான்  யாருடைய  பையரையும் பார்க்கவில்லை . ஆனால்  படம்  முடிந்து  வெளியே  வந்தபின்  அனைவரின்  பெயரையும் தெரிந்து  கொள்ள  ஆசை  பட்டேன்.குறிப்பாக  அந்த போலீஸ் அதிகாரியின்  நடிப்பு ! இத்தனை  நாளாக  எங்க  இருந்தீங்க ? என்று கேள்வி எழுகிறது. அதேபோல்  தம்பி  ராமையாவின்  காமெடி  படத்தின் மற்றுமொரு சிறப்பு அம்சம்.குறிப்பாக ரிங் டோன் காமெடியில் திரை அரங்கு  அதிர்கிறது.ரிங் டோன் மூலமாகவே அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்று புரிய வாய்த்த இயக்கம் அருமை.  சுகுமார்ஒளிபதிவாளர்  நம்  அனைவரையும்  மிரட்டி  இருக்கிறார் . குறிப்பாக  பஸ்  கவிழும்  அந்த  காட்சி  மிக  சிறப்பாக  எடுக்கப்பட்டு  இருக்கிறது . இமான்  அவர்களின்  இசை  படத்திற்கு  பெரிய  பலம். பாடல்களும் , பின்னணி  இசையும்  அருமை . இனிமேல்  தயவு  செய்து  சுந்தர் .சி படத்திற்கு  எல்லாம் இசை அமைக்காதீர்.
                                      
                                       

இந்த  படம்  பார்ப்பதற்கு  முன்பு  படத்தின்  கதாநாயகி  மீது  எனக்கு  மதிப்பு இல்லை .ஏனென்றால்  அவருடைய  சிந்து  சமவெளி படத்தை  பார்த்து  மனம்  உடைந்தேன் .தம்பி  ராமையாவின் பெயர்  கூட இந்த  படம்  பார்த்த  பின்புதான்  தெரியும் . இமானுக்கும் இசைக்கும்  சம்பந்தமே  இல்லை  என்றுகூட  நினைத்தேன்
இவர்கள் எல்லாரையும்  ஒரே  படத்தில்  செல்வாக்கு  உள்ளவராக  மாற்றி  தன்னையும்  மிக  பெரிய  இயக்குனராக  நிலைநிறுத்தி  கொண்ட  பிரபு  சாலமனின்  உழைப்பு  அபாரம .
பிரபு  சாலமன்  இயக்கத்தால்  மைனா , பஞ்சவர்ணகிளிபோல்  ஜொலிக்கிறது .
கோபம் , நன்றி , துரோகம் , காதல் , பாசம்  என  அனைத்து திராவிட உணர்ச்சிகளையும்  ஒரு  சேர  காண்பித்து  இது  நம்ம  படம்டா என்று  தமிழனை  தலைநிமிர  செய்துள்ளது .
இதனால்தான்   ரஜினி  இந்த  படத்தை   திராவிட  படம்  என்று  கூறினார் .இதை விட  இந்த  படத்தை  பற்றி  சிறப்பாக ஒரே வார்த்தையில்  விமர்சனம்  எழுத  முடியாது . ஒரு  வார்த்தை  சொன்னாலும்  திருவாசகம்  சொன்னார் .


படம்  முடிந்து  வெளிவரும்போது  இந்த  படத்தில்  தலைவர்  நடிக்க  ஆசைப்பட்டார்.  எந்த கதாபாத்திரத்தில்  நடித்து  இருந்தால்  நன்றாக  இருக்கும்  என்று  யோசித்தேன்?  ஒருமுறை  போலீஸ்  வேடத்தில்  அவரை  நினைத்து  பார்த்தேன் . படத்துக்கு  மறுபடியும்  நாளை  போக  முன்பதிவு  செய்தேன் .

5 comments:

Dhiva said...

Nice and Honest Review...Keep up the good work:)

Krishnan said...

அருமை....

Anonymous said...

உங்க தலைவர் ரஜினி வாய் பேச்சில் தான் வீரர். ஒரு படம் அந்த கேரக்டர்ல நடிக்கட்டும். பார்க்கலாம். மேடை பேச்சு வீட்டுக்கு உதவாது என்று ஒரு பழமொழி ஞாபகம் இருக்கா ? அது தான் ரஜினியின் சொல் இங்கே. இதக் கூட புரிஞ்சுக்க முடியாத குழந்தையா இருக்காரே இந்த விமர்சனம் எழுதின அறிவு ஜீவி? உண்மையிலே உனது ப்ளாக்ல ரஹ்மான் மட்டும் தான் உண்மையாக மதிக்க பட வேண்டிய ஆள். தயவு செய்து ரஜினியை பற்றி புகழ்ந்து உன் ப்ளாக்யை நாரடிக்காத.

admin said...

dei...if u wanna write abt thalaivar means put ur name 1st...avurode kaal thusikku varuviyaada...nee ennathe saathichittu kiliche avere pathi pese.... JOKKA PESUNGGE BANG!

Anonymous said...

@ ADMIN : MUTHALLA RAJINI ENNATHA SATHICHAAR PANAM SAMBATHICHA THAVIRA ? ENNATHA NADICHU KILICHAAN ? AVAN ORU AALUNU NEE AVANA INTHA NAKKU NAKKURA ?

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...