Tuesday, December 28, 2010

மன்மதன் அம்பு சில கேள்விகள்(Manmadhan ambu Questions)

                                            மன்மதன் அம்பு சில கேள்விகள்:

                                            

 

எந்திரன் படத்திற்கு கேள்வி பதில் எழுதிய எனக்கு மன்மதன் அம்பு படத்திற்கு கேள்வி மட்டும் தான் எழுத தெரிந்தது. பதில் அல்ல. பதில் தெரிந்தால் நீங்கள் கூறுங்கள்.

படத்திற்கு செலவு ஐம்பது கோடி என்று கமல் கூறினாரே அது உண்மையா? ஏன் என்றால் படத்தின் காட்சிகள் இது ஒரு சிறிய பொருட்செலவில் எடுத்த படம்  போல் தெரிந்தது அதனால்தான்!அல்லது கமல் சம்பளம் அதிகமாக வாங்கினாரா?

படத்தில் தமிழ் மெல்ல சாகும் என்று கமல் கூறியது த்ரிஷாவின் சொந்த குரலை வைத்தா? அல்லது படம் முழுக்க இவர் எழுதி இருக்கும் ஆங்கில வசனத்தை வைத்தா?

படத்தில் கப்பல் இடம் பெற்றதற்கு காரணம் ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ்(1946 ) படத்தில் கப்பலில் கதை நடப்பதால் தானா? அல்லது கப்பல் படத்தின் கதைக்கு தேவை பட்டதா?

படத்தில் பிரம்மாண்ட கப்பலை வீடு போல் காட்டிய ஒளிப்பதிவாளர் பற்றி ஞானி ஓ பக்கங்களில் எழுதுவாரா?அல்லது இவர் தன மகன் என்பதால் உலக ஒளிப்பதிவு என்று கூறுவாரா?

படத்தில் களவாணி ஓவியாவிற்கு என்ன வேடம்? ஆயா வேடமா அல்லது மாதவனின் அத்தை பெண் வேடமா ? 


ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ்(1946 ) படத்தை காபி அடித்ததற்கு காரணம் புது படமாக இருந்தால் மக்கள் கண்டு புடித்து விடுவார்கள் என்ற காரணமா? அல்லது உங்களுக்கு தெரிந்த உலக படம் மக்களுக்கு தெரியாது என்பதலா?

மன்மதன் அம்பு என்ற பாடல் முன்பு யாவரும் கேளிர் என்று எழுதப்பட்டதா? ஏனென்றால் ஒரே ராகத்தை வைத்துக்கொண்டு படத்தின் பெயரை வைத்துக்கொண்டு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பதால் கேட்கிறேன்.

கமல்ஹாசனும் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் சேர்ந்து ஒரு ஒரிஜினல் தமிழ் படத்தையாவது தருவார்களா?இதற்கு முந்தைய படங்கள் அனைத்தும் காபிதான்.
அவ்வை சண்முகி((Tootsie & Mrs. Doubtfire)
தெனாலி(What about Bob?)
பஞ்ச தந்திரம்(Very Bad திங்க்ஸ்)தசாவதாரம்(
Outbreak )

படத்தில் நீல வானம் பாடலின் கேமரா யுத்தி சித்திரம் பேசுதடி படத்தின்
"இடம் பொருள் பார்த்து" என்ற பாடலில் இருந்து உருவப்பட்டதா?

இறுதியாக,

படத்தில் தாங்கள் எழுதிய கவிதையை நீக்கியதற்கு காரணம் ஹிந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பா? அல்லது அந்த பாடலை படத்தில் எங்கு சேர்ப்பது என்று அறியாத காரணத்தினாலா?

என்னிடமே ஒரு கேள்வி

நான்  இந்த படத்திற்கு போனதற்கு காரணம் கமல்ஹாசனின் நடிப்பை பார்க்கவா? அல்லது தூங்கவா?

தெரியலயேப்பா!

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு விமர்சனம் ( Manmadhan ambu review )


மன்மதன் அம்பு விமர்சனம் ( Manmadhan ambu review)

                   

ஒரு பண்பட்ட நடிகரிடம் இருந்து எதிர்பார்த்திடாத ஒரு திரைக்கதை.கமல் மறுபடியும் தான் ஒரு சிறந்த கதை ஆசிரியர் இல்லை என்பதை கமல் நிருபித்து விட்டார்.

பொதுவாக கமல் திரைப்படங்களுக்கு காணப்படும் கூட்டம் கூட இந்த படத்திற்கு காணவில்லை. வியாழக்கிழமை ரிலீஸ் செய்ததால் என்னவோ என்று தெரியவில்லை.அடையாரில் உள்ள முக்கியமான தியேட்டரில் பாதி கூட்டம் கூட இல்லை.இதை விட கொடுமை ஆன்லைனில் முன்பதிவு செய்தபோது குறைவான கட்டணத்தில் விற்பனை செய்து விட்டோம் என்று கூறி ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 20 விதம் வசூல் செய்ததுதான். என்ன கொடுமை சார் இது?

படத்தின் கதை: மாதவன் சினிமா நடிகை த்ரிஷாவை காதலிக்கிறார். த்ரிஷா மீது சந்தேகப்படும் அவர் கமல்ஹாசனை வேவு பார்க்க அனுப்புகிறார். தனது நண்பரின் உயிரைக் காக்க இந்த வேலையை செய்கிறார் கமல். கமல் மனைவி கார் விபத்தில் தன்னால்தான் இறந்தார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட த்ரிஷா கமல் மீது காதல் கொள்கிறார். மாதவன் திரிஷாவின் நன்பியான சங்கீதாவை இறுதியில் காதல் கொள்கிறார்.

என்னடா கதை இது? என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள். அப்படி கேட்டால் நாம் உலக சினிமாவை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று கூறி விடுவார்கள். படத்தின் முதல் பாதி ஒரு அளவு நன்றாக சென்றது. அதற்கு மேல் செம மொக்கை.படத்தின் கிளைமாக்ஸ் ஒன்று போதும் இந்த படம் எவ்வளவு மட்டமான படம் என்று சொல்வதற்கு.எனக்கு இரண்டாம் பாதியில் பாதி வசனம் மற்றும் கதை புரியவில்லை. ஏனென்றால் நான் சினிமாவை ரசிக்கத்தெரியாத ஒரு பாமர ரசிகனாக இருக்கலாம் அல்லது ஆங்கிலம் தெரியாதவனாக இருக்கலாம். இரண்டாம் பாதியில் எனக்கு ஒரு இடத்தில கூட சிரிப்பு வரவில்லை. கிரேசி மோகன் இல்லாத குறை அப்பட்டமாக தெரிந்தது.

கமல் ஒரு நல்ல நடிகன் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் அவர் ஒரு மோசமான கதை ஆசிரியர் என்பதை மறுபடியும் நிருபித்து விட்டார்.கலைவாணி ஓவியா இந்த படத்தில் என்ன செய்கிறார் என்று இயக்குனர்தான் கூற வேண்டும். திரிஷா சொந்த குரலில் பேசியதாக கேள்விப்பட்டேன். முடியல! தயவு செய்து இனிமேல் உங்கள் குரலில் டப் செய்யாதீர்கள்.கே.எஸ்.ரவி குமார் படத்தில் ஒரு காட்சியில் வந்து போகிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தயவு செஞ்சு தெலுங்கு  படத்திற்கே இசை அமைத்தால் நன்றாக இருக்கும்.

முடிவாக இந்த படம் தமிழ்நாட்டு ரசிகர்கள் புரியாத வண்ணம்,முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்பட்ட ஒரு உலக திரைப்படம். கமல்ஹாசனை பொறுத்த வரை மக்கள் புரிந்து கொள்ளாத மற்றுமொரு திரைப்படம்.
  

Tuesday, December 21, 2010

விருதகிரி விமர்சனம் (Virudhagiri review)

                விருதகிரி நடந்தது என்ன? 

                   

விருதகிரி படம் நேற்றுதான் பார்த்தேன். விஜயகாந்த் முதல் முறையாக இயக்கி இருக்கிறாரே? என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள சென்று இருந்தேன். இனிமேல் என் படத்திற்கு வருவீயாடா? என்று விஜயகாந்த் நேரடியாக அனைவரையும் பார்த்து கேட்டதுபோல் இருந்தது.

படத்தின் கதை. விஜயகாந்த் படத்தை இதற்கு முன்னால் பார்த்தவர்களுக்கு சத்தியமாக கதை என்ன என்பது தெரிந்து இருக்கும். இருந்தாலும் அந்த விஷ பரிட்சையை இதளவு மேற்கொள்ளாதவர்களுக்காக கதையை கூறுகிறேன். இதுவரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து தீவிரவாதிகளையும் பிடித்த விஜயகாந்த் தற்போது ஆஸ்திரேலியாவில் மாணவர்களை துன்புறுத்தும் தீவிரவாதிகளை பிடிக்கிறார். என்ன இப்பவே கண்ண கட்டுதா?


ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க முடியாமல் திணறும் மத்திய அரசு இந்த படத்தை பார்த்தால் மிரண்டு விடுவார்கள். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதையும், ஒரு ஆங்கிலப்படத்தையும்(Taken) இணைத்து ஒரு திரைக்கதை உருவாக்கி இருக்கிறார். சரி அதையாவது ஒரு புத்திசாளிதனமாக எடுத்து இருக்க வேண்டாமா?


ஆஸ்திரேலியாவில் புகுந்து ரணகளம் செய்கிறார். கையில் கிடைத்தவனை எல்லாம் சுட்டுக் கொள்கிறார். இன்னும் கொஞ்சம் இருந்தால் அவர் மீட்க சென்ற மாணவர்களையும் சுட்டு இருப்பார் போல. என்ன ஒரு ரணகளம். ஆஸ்திரேலியாவில் துப்பாக்கியோடு இவர் உள்ளே நுழைய முடியுமா? அப்பா சாமி! போதும்டா ஒட்டுனது ரீல் அந்து போச்சு.


படத்தில் காமெடி நடிகர் என்று யாரும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. விஜயகாந்த் அதை நிறைவு செய்கிறார். ஸ்காட்லாந்து யார்ட் போலிசுக்கு அவர் உதவி செய்யும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை அடங்க ஐந்து நிமிடம் ஆகிறது. படத்தில் இவரே காமெடிக்கு போதும் என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் அருண் பாண்டியன். எப்படியா இந்த மாதிரி எல்லாரையும் தேர்ந்து எடுத்து புடிச்சீங்க? அருண் பாண்டியன் ஆஸ்திரேலியா போலீசில் உயர் அதிகரியாம்! இந்தப்படத்தை தெரியாமல் யாரவது ஆஸ்திரேலியாவில் பார்த்தால் என்ன ஆவது.

இது பரவாயில்லை? படத்தில் விஜயகாந்த் பேசும் ஆங்கில வசனங்கள் இருக்கிறதே! Why blood? Same blood? படத்தில் ஒரே ஒரு நல்ல விஷயம் விஜயகாந்திற்கு ஜோடி இல்லை. அதுவும் இருந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்துகூட பார்க்க முடியவில்லை.படத்தின் இசையை கேட்டு எனக்கு செவில் பிகில் ஊதிகிச்சு.


படம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஒன்று புரிந்தது.

விஜயகாந்த் இனிமேல் படங்களில் நடிக்காமல் இருந்தால் அவருக்கு இன்னும் கொஞ்சம் ஓட்டு அதிகமாக விழும் என்பது மட்டும் நிஜம்.


Saturday, December 18, 2010

ஈசன் - திரை விமர்சனம் ( Easan review)

ஈசன்- திரை விமர்சனம் சுப்புரமணியபுரம் தந்த பாதிப்பால் ஈசன் படத்தை முதல் நாளில் பார்த்தேன். இந்த படம் தந்த பாதிப்பால் அடுத்த சசிகுமார் படத்தை முதல் நாளில் பார்க்க மாட்டேன் என்பது மட்டும் நிஜம்.

சரி ஈசன் படத்தின் விமர்சனத்துக்கு வருவோம். ஒரு அரசியல்வாதியின் மகன் தன் சக நண்பர்களுடன் பார்ட்டி,பப் என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறான்.அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். வழக்கம் போல் பெண்ணின் தந்தை அதற்கு எதிர்ப்பு தெருவித்து பின் அந்த காதலை ஏற்கிறார். திருமணத்துக்கு முன்பு மணமகன் காணாமல் போகிறான். அவன் எப்படி காணாமல் போனான் என்பதை நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்துகிறார். அவன் எப்படி காணமல் போனான் என்பது நம் தலைவரின் நான் மகான் அல்ல திரைபடத்தில் இருந்து நாம் பார்த்ததே.

சத்தியமாக, முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் ஒரு கோர்வையும் இல்லாமல் நான் பார்த்த முதல் படம் இதுதான். முதல் பாதியில் இயக்குநர் என்னதான் சொல்ல விரும்புகிறார்? நகரத்தின் வாழ்க்கையை அவர் காட்ட நினைத்து இருந்தால் இரண்டு காட்சிகளில் காட்டி இருக்கலாம். அதை இடைவேளை வரையுமா காட்ட வேண்டும்? ஒரு பெண் கற்பழிக்கபதுவதும் அதன் பின் பெண்ணிற்கு நடக்கும் உபாதைகளையும் வித்தியாசமாக காட்டுகிறோம் என்று கர்ண கொடூரமாக காட்டி இருக்கிறார். அதன் பின் இறுதி காட்சியில் வரும் வன்முறைகள்,
இதை யாரவது ஒருவர் தன் குழந்தைகளையோ? அல்லது பெண்களையோ வைத்துக்கொண்டு பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. சென்சார் போர்டு அதிகாரிகள் படம் பார்க்கும்போது தூங்கி விட்டார்களா என்று தெரியவில்லை. சாதாரணமாக அனுஷ்கா கொஞ்சம் இடுப்பைக் காட்டினாலே “A” சான்றிதழ் கொடுக்கும் இவர்கள் இந்த படத்திற்கு ஏன் தரவில்லை?

படத்தின் பலம் என்று பார்த்தால் அது போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்துரகனியின் நடிப்புதான். பல பேர் மீசை வைத்து, உடம்பை வளர்த்து செய்யும் போலீஸ் பாத்திரத்தை தன் நடை,உடை மூலமே சிறப்பாக செய்து இருக்கிறார்.ஒளிப்பதிவாளரும் தன் பங்கை சிறப்பாக செய்து உள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசையும், பாடல்களும் அருமை.சசிகுமாரின் தனித்துவமும், வசனமும் சில காட்சிகளில் அவர் உள்ளே இன்னும் சிறந்த இயக்குநர் உள்ளார் என்பதை தெருவிக்குறது.

மற்றபடி, இந்த படத்தின் கதை தலைவரின் நான் மகான் அல்ல திரைப்படத்தையும், திரைக்கதை கார்த்திக்கின் நான் மகான் அல்ல திரைப்படத்தையும் எனக்கு நினைவு படுத்துகிறது.

Rating: 2/5
Saturday, December 11, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் கவிதை

                     சூப்பர் ஸ்டார்  ரஜினியின் பிறந்தநாள் கவிதை:


             
                                   
டிசம்பர் 6 ஐ
(சோகத்தை) மறக்க வைத்த தினம்
டிசம்பர் 12

வருடத்தின் இரண்டாவது காந்தி ஜெயந்தி
டிசம்பர் 12

வருடத்தின் முதல் கிறிஸ்துமஸ்
டிசம்பர் 12

அறிவிக்கப்படாத  தமிழர் திருநாள்
டிசம்பர் 12

டிசம்பர் பூவிற்கு மேலும் பெருமை சேர்த்த தினம்
டிசம்பர் 12

தின காலண்டரும் காத்து இருக்கும் நாள்
டிசம்பர் 12

தேசத்தந்தை பிறந்தது அக்டோபர் 2 , தேசத்தின் மகன் பிறந்தது
டிசம்பர் 12

வான்  நட்சத்திரம் பூமியில் உதித்த நாள்
டிசம்பர் 12

இந்திய சினிமாவின் அடையாளம் தோன்றிய நாள்
டிசம்பர் 12

இறுதியாக,

தமிழகத்தின் வருங்கால நிரந்தர முதல்வர் பிறந்த தினம்
டிசம்பர் 12

ஆம்,

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் டிசம்பர் 12 .

தலைவா உனக்கு அகவை 61  என்கிறார்கள். அவர்கள் நாள் காட்டியில் எப்பொழுதும் பிழை உள்ளது. எங்களுக்கு தெரியும் நீ என்றும் பதினாறு என்று!தேசத்தின் மகன் என்று.

இவ்வையகம் உள்ள வரை நீ என்றும் இளமையாக வாழ வேண்டும் என்று எல்லாம்வல்ல  இறைவனை ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
Thursday, December 9, 2010

இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி


இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி

படம் பார்த்து கதை கூறு 


 வைரமுத்து:இவருடைய தோற்றத்தை பார்க்கும்போது இவர்தான் அடுத்த முதல்வர் என்று தெரிகிறது, இவரை எப்படி புகழ்வது என்று இப்போதே யோசிக்க வேண்டும்.கலைஞர்: என்னையா என்னை வைத்துக்கொண்டு ரஜினியை புகழ்ந்து விட்டீர்கள்?

வாலி: எனது கவிதைக்கு கிடைக்காத கைதட்டு, ரஜினி என்ற ஒரு வார்த்தையை சொன்னால் கிடைக்கிறது அதனால்தான்.
என்ன செய்தாலும் ரஜினியின் பக்கம் தானாக தலை திரும்புகிறது. அவர் பெயருக்குள்ள காந்தம் உண்டு உண்மை தானடா!
கலைஞர்: என்ன ரஜினி அரசியலுக்கு தயார் ஆயிடீங்க போல?
ரஜினி: வெளிய நல்லா மழை பெயஞ்சுட்டு இருக்கு?அப்பாவி பொது மக்கள் அவஸ்த படுறாங்க! இத இங்க இருக்குற ஒருத்தரும் கண்டுக்குற மாதிரி தெரியலையே?

Monday, December 6, 2010

அமரர் சுஜாதா (WRITTER SUJATHA)


அமரர் சுஜாதா தற்போது உயிரோடு இருந்தால்   
                 
                              
1995களின் தொடக்கம். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு புத்ததகத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணம்  எனது பெரியப்பா நூலகம் வைத்து இருந்தார். அப்பொழுது ராஜேஷ் குமார் அவர்களின்  க்ரைம் நாவல் மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ரெண்டு நாட்களுக்கு ஒரு நாவல் விதம் படித்த நான், பின் விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு மூன்று நாவல் விதம் படித்தேன். ஆனால் பிற்பாடு பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவரின் நாவல்களின் முடிவை முதலிலேயே அறிந்து கொண்டேன்.ஆனால் ராஜேஷ் குமார், க்ரைம் நாவல்கள் மீது எனக்கு தீராத காதல் உண்டு செய்து விட்டார் என்பது மட்டும் உண்மை. வேறு யாருடையது படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்

அப்பொழுதுதான் ஒரு புத்தக கண்காட்சியில் சுஜாதாவின் மர்ம கதைகள் தொகுப்பு வாங்கினேன். நான் படித்த முதல் சுஜாதா புத்தகம் இது தான். முதல் இரண்டு கதைகளையும் இரண்டு முறை படித்தேன். அதன்பின் அனைத்து கதைகளையும் ஒரு முறையிலேயே புரிந்து கொண்டேன். அட! இப்படி கூட ஒரு க்ரைம் கதையை எழுத முதுயுமா? உண்மையில் பல கதைகளில்  கருவில் க்ரைம் இல்லை. ஆனால்  அவருடைய எழுத்தால் கதையில் க்ரைம் இருந்தது போலவே காட்டி ஒரு சாதாரண கதையை க்ரைம் கதையை போல் உணர வைத்து இருந்தார்.  
எத்தனை சின்ன சின்ன விஞ்ஞான விஷயங்கள்.

அவருடைய க்ரைம் எழுத்துகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.பாருங்கள்.
ஒரு முறை கற்றதும் பெற்றதும் தொடரில் ஒரு வரியில் க்ரைம் கதை எழுத சொல்லி ஒரு போட்டி வைத்து இருந்தார். அதில் ஒருவர் எழுதியது

உலகின் கடைசி மனிதர் அறையில் இருந்த போது, கதுவு தட்டப் பட்டது. இந்த கதையை பாராட்டிய சுஜாதா இதை இன்னும் மெருக்குட்ட  வேண்டுமானால்
உலகின் கடைசி மனிதர் அறையில் இருந்த போது, கதுவு பூட்டப்பட்டது என்று எழுதினார்.பாருங்கள் அவருடைய  எழுத்துக்கூர்மையை!

படிப்படியாக அவருடைய அனைத்து வகையான புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.இன்று இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆர்வம் கொஞ்சமாவது இருக்க காரணம் சுஜாதாதான் என்றால்  அது மிகை ஆகாது.இன்று வலை பூக்கள் நடுத்தும் 90% பேர் சுஜாதாவின் விசிறிகளாக இருப்பார்கள் என்பதில் சிறு ஐயம் கூட வேண்டாம்.

சரி பெரிய விஷயங்களையும் பாமரர் புரியும் வண்ணம் சொல்லும் சுஜாதா இன்று உயிரோடு இருந்து இருந்தால் எதை பற்றி எழுதி இருப்பார். ஒரு கற்பனை.

1. எந்திரன் படத்தில் இடம் பெற்று இருந்த அறிவியல் சார்ந்த விஷயங்களுக்கு விளக்கம் அளித்து இருப்பார். எந்திரன் கதைக்கு சொந்தம் தேடும் நபர்களை தோள் உரித்துக் காட்டி இருப்பார்.எந்திரன் படத்தின் தரம் இன்னும் உயர்ந்து இருக்கும்.

2. 2ஜி அலைவரிசையில் நடந்தது என்ன? எப்படி ஏலம நடந்து இருக்க வேண்டும் என்பதை  செல்போன்  வைத்திருக்கும் அனைவருக்கும் எளிய நடையில் புரிய வைத்து இருப்பார்( இன்னும் எனக்கு 2ஜி விவகாரங்கள் பற்றி சரியாக புரியவில்லை).

3. உலகம் வெப்பமயமாவதால் தற்போது ஏற்பட்டுள்ள தீமைகள்.பீடீ கத்தரிக்காய் பற்றிய தகவல்களை கூறி இருப்பார்.

4.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் எதிர் காலம் பற்றியும், 20-20 இன் வளர்ச்சி பற்றியும் புள்ளி விபரங்களோடு கூறி இருப்பார்.

5.அமெரிக்காவில் வரும் பொருளாதார வீழ்ச்சி (recession) ஆண்டிபட்டியில் உள்ள ஆறுமுகத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும்,அதற்கு ஒபாமா என்ன நடவடிக்கை எடுத்தார்  என்பதையும் எழுதில் புரிய வைத்து இருப்பார்.

6.அயோத்தி வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி அலசி இருப்பார்.

7. நந்தலாலா படத்தின் கதையை தனது என கொண்டாடுவோரின் முகத்திரையை உலகப் படங்கள்களின் எடுத்துக்காட்டுகளோடு கிழித்து எறிந்து இருப்பார்.
8.தமிழ் செம்மொழி மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் முக்கியமானதை நமது பார்வைக்கு தந்து இருப்பார்.
9.இலங்கையில் இனி ஏற்படவேண்டிய அரசியல் தீர்வு என்ன என்பதை அவர் பார்வையில் கூறி இருப்பார்.

இதை எல்லாம் தற்போது எந்த எழுத்தாளர்களும் மக்களுக்கும் புரியும்படி கூறியதாக எனக்கு தெரியவில்லை.

இது அமரர் சுஜாதா அவர்களால் மட்டுமே முடிந்த ஒன்று.அவரை போன்று ஒரு அறிவியல் எழுத்தாளர் தமிழில் இல்லை என்பது மட்டும் நிஜம.

நன்றி.

Sunday, December 5, 2010

ரத்த சரித்திரம்-விமர்சனம் (raktha saritharam-review)

                                   ரத்த சரித்திரம்-விமர்சனம்

                                 


படத்தின் ஒரு  வரி  கதை:  கொலை , கொலை , கொலை  

காட்சிக்குக் காட்சி  ரத்தம். படம்  பார்ப்பவர்களுக்கே  ரத்த  வாடை அடிக்கும்படி   ஒரு  திரைக்கதை.  ராம்கோபால்வர்மாவிற்கு  என்ன  ஆயிற்று  என்று  தெரியவில்லை . தான் என்ன  எடுத்தாலும், மக்கள்  சிறந்த  படம்  என்று  நினைப்பார்கள்  என்று  நினைத்து  விட்டாரா ? என்று  தெரியவில்லை. இவரும் மணிரத்தினம்  லிஸ்டில்  சேர்ந்து  விட்டார்  என்பது  மட்டும்  உண்மை. 

மக்களுக்கு  நீ  நல்ல  விஷயங்களை  சொல்லவில்லை  என்றாலும்  பரவாயில்லை. கெட்ட  விஷயங்களை  காட்டிவிடாதே. பாவம் மூன்று  மணி  நேரம்  பொழுது  போக்கிற்க்காக வரும்  அவனை  பித்து  பிடுத்து  ஓட  விடாதே.
நீ  கூறலாம்  இது நிஜத்தில்  நடந்த  ஒரு  கதை  அதை  மக்களுக்கு  தெருவிக்கின்றேன்  என்று . நாட்டில்  எத்தைனையோ  நல்ல  தலைவர்கள்  கதை  இன்னும் திரைப்படமாக  எடுக்கப்படவில்லை  என்பதை  நீ  மறந்துவிடாதே.பார்தியா ரவி  ஒன்றும்  நாட்டு  மக்கள்  தெரிந்து  கொள்ள  நினைக்கும்  ஒரு  பெரிய  தலைவன்  அல்ல .

 சரி  படத்தில்  சரக்குதான் ஒன்றும்  இல்லை  என்றால்  தொழில்நுட்ப   விஷயத்தில்  அதை விட  ஒரு  குப்பை . படத்தின்  ஒளிப்பதிவாளர்  நிறைய  கிரிக்கெட்  போட்டிகள்  பார்த்து  இருப்பார்  என்று  புரிகறது . அநியாயத்திற்கு   படம்  முழுக்க  ஸ்லொவ்மோஷென்  காட்சிகள். படத்தில்  திரைகதையே  ஸ்லொவ்மோஷெனயாகத்தான்  செல்கிறது என்பதை  அவர்  மறந்து  விட்டார்  போலும் .படத்தின்  எடிட்டிங் ? அப்படி  எதாவது  இருந்தால்  படம்  பார்த்தவர்கள்  கூறலாம் .

 படத்தின்  இசை ? போதும்டா  சாமி என்று  அரங்கைவிட்டு  ஓட  வைக்க  உதவுகிறது. நாட்டின்  மிக  பெரிய  இயக்குனர்  என்று  கூறி   கொள்ளும்  RGV யின்  படத்தை  பார்க்க  சென்றது  என்  குற்றம்தான்.

விவேக்  ஒபராய் பற்றி நாம் கூற வேண்டியது தேவையில்லை.அது ஏன் என்பது  அனைவருக்கும் தெரியும். சூர்யா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அது விரலுக்கு இழைத்த நீர்தான்.

படத்தில்  கொலை  காட்சிகளை  சில  இளைஞர்கள்  கை  தட்டி ரசிக்கும்போது  நாடு  எங்கே போகின்றது  என்று  நினைத்தேன் . இதைத்தான் படம்  எடுத்தவர்கள்  எதிர்  பார்த்தார்களா என்று  தெரியவில்லை. 
திரு. தயாநிதி  அழகிரி  அவர்கள்  நாட்டை  ஆளுகின்ற  குடும்பத்தை  சேர்ந்தவர் என்பதால்  தயுவு  செய்து  இதுபோன்ற  படங்களை   தயாரிப்பதை  தவிர்க்கலாம் .இன்னும்  தரமான  படங்களை  தயாரிக்கலாம்.

Friday, December 3, 2010

இதனால்தான் இவர் சூப்பர் ஸ்டார்

                                            இதனால்தான் இவர் சூப்பர் ஸ்டார்


இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இந்த படத்தைப்  பாருங்கள். புரிகிறதா? 


                                                 

இந்தியாவின் பிக் பீ என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனை ஒரு புகைப்படக்காரரும் கண்டுகொள்ளவில்லை. அணைத்து கமெராவும் தலைவர் மீதுதான்.

இது நடந்தது எங்கு தெரியுமா? மும்பையில்!

ஏற்கெனெவே பலமுறை பல முதல்வர்கள்  கலந்து கொண்ட கூட்டங்களில் கூட தலைவருக்குதான் வரவேற்ப்பு அதிகம் என்பது நாம் அறிந்ததே.

இந்த புகைப்படத்தை பார்த்துடன் நான் உணர்ந்தது.

                    "தலைவருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு "

Friday, November 26, 2010

ரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)

                                         ரஜினி கமல் நட்பு ஒரு பார்வை:


“இந்த தலைமுறை நடிகர்களில் ரஜினியும் என்னையும்போல் ஒரு நண்பர்கள் இருந்தால் காட்டுங்கள் ” என்று கமல் 50 விழாவில் கமல்ஹாசன் கூறியது நினைவு இருக்கலாம் .
சரி இது உண்மையா? இந்த பதிவில் காண்போம்.

நட்பின் நிகழ்வுகள்:

எனக்கு 2000ஆம் ஆண்டுக்குப்பின்தான் சற்று விபரம் புரியும் என்பதால் அதன்பின் நிகழ்ந்த நிகழ்வுகளை தொகுக்கிறேன்.

கமல் ஆரம்ப காலத்தில் பெரிய நடிகராக நடித்துக் கொண்டு இருந்த போது அவருடன் தன்னை நடிக்க வைத்ததை ரஜினி இன்னும் மறக்கவில்லை . அதுதான் ரஜினி கமல் மீது கொண்டிருக்கும் மிக பெரிய மதிப்புக்கு முக்கிய காரணம்.

இந்த அன்பின் வெளிபாடுதான்

“கமல்தான் சூப்பர்ஸ்டார் ” என்று கமல் 50 விழாவில் பேசியது .

“ஆளவந்தான் தன்னை அழிக்க வந்தான் “ என்று தாணு கூறியபோது அவரைக் கண்டித்தது.

தசாவதாரம் ஒரு மொக்கை படமாக இருந்தாலும் அந்த படத்தை முதல் காட்சியை பார்த்து கமலின் பத்து அவதாரங்களை ரசித்தது . வியந்து பாராட்டியது.

இன்னும் நிறைய விஷயங்கள் நடந்து இருக்கலாம் , ஆனால் கமல் ரஜினியின் நட்புக்காக செய்தது என்ன?

பாபா படத்திற்கு அத்தனை இடையூறு வந்த போது குரல் கொடுத்தாரா? புன்னகை மன்னன் மௌனம் சாதித்தார்.

சந்திரமுகியும் ,மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதை என்னவோ ரஜினி ரசிகர்கள் விரும்பாதது போல் , மும்பை எக்ஸ்பிரஸ் Apr 14,2005 அன்று வெளியாகும் இதை கடவுளே நினைத்தாலும் தடுக்க முடியாது என்றார் . ஆனால் அதன்பின் நடந்தது ஊர் அறிந்தது.

இதைவிட கொடுமை , தலைவர் காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது “இது ஒரு அரசியல் மேடை ”என்று உண்ணாவிரத பந்தலில் சொன்னது.(சிம்ரனுடன் ஜாலியாக காவிரி போராட்டத்தில் கலந்து கொண்ட கமல் மக்கள் சக்தியை அரசியல் மேடை என்கிறார்.

                                          


கியாஸ் தியரி :

இது மட்டும் தானா? கமல் தசாவதாரத்தில் கூறிப்பிடும் கியாஸ் தியரியை (உலகத்தில் எந்த ஒரு செயலும் ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்கும் )அவருடைய வாழ்க்கையில் எப்படி ஒத்து போகிறது பார்ப்போம்.

சிவாஜி 60 கோடியில் தயாராகிறது என்றவுடன் தசாவதாரத்தை 70 கோடியில் எடுத்தார்.

எந்திரன் 150 கோடியில் தயாராகிறது என்றவுடன் மர்மயோகியை தொடங்கினார். அது என்ன ஆனது என்று மர்மமாகவே உள்ளது .

எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்ததால், மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்தினார்.அது நடந்ததா என்பது கூட பாதி பேருக்கு தெரியாது.

சரி இது எல்லாம் ரஜினியை பாதிக்கவில்லையா?

தலைவர் எப்பொழுதும் திருக்குறள் நெறிப்படி வாழ்பவர்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

(முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.)

என்ற குறளின்படி, கமல் ஆரம்ப காலத்தில் செய்த உதவியை எண்ணி மற்ற அனைத்தையும் மறப்பவர்.

ஆனால் கமல், ரஜினி தன்னை விட முதல் இடத்தில இருக்கிறாரே என்று பொறாமை பட்டதன் வெளிபாடுதான் மேல் நடந்த நிகழச்சிகள் அனைத்தும்.

சரி ரஜினி கமல் நட்பு போல் யாரும் தற்போது இல்லையா? விஷயத்துக்கு வருவோம்.

பொதுவாக நம் மனித இயல்பு நம் எதிரி முன்னுக்கு வந்தால் நமக்கு போட்டிதான் இருக்கும். ஆனால் நம் நண்பன் முன்னுக்கு வந்தால் நமக்கு பொறாமை இருக்கும்.

ஒரு சாதாரண மனிதனைப்போலதான் கமல் நடந்து கொள்கிறார்.இது நாம் அனைவரும் செய்வதே.

ஏனென்றால் நாம் அனைவரும் கேவலமான மனித பிறவிகள்தானே?

ஆனால் ரஜினி? மனித பிறவியா அவர்? அவர் ஒரு அதிசிய பிறவி . தெய்வ பிறவி. 

                                            

அதனால், எதிர் துருவங்கள் ஒன்றோடு ஒன்று ஈர்க்கும் என்பதுபோல ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரு உண்மையான நட்பு கிடைக்கும்.

கமல் இனி மார்த்தட்டி தெருவித்து கொள்ளலாம்.

நானும் ரஜினியும்தான் சிறந்த நண்பர்கள் என்று .

ஏனென்றால் எனக்கு தெரிந்து ரஜினியைப்போல் ஒரு அதிசய பிறவி தற்போது யாரும் உயிரோடு இல்லை.

அதனால் ரஜினியுடன் கமல் கொண்ட நட்பு தெய்வீக நட்பு என்பதில் ஒரு துளிக்கூட சந்தேகம் வேண்டாம்.

இப்படிக்கு,

அ.அருள்செல்வன்.

Tuesday, November 23, 2010

ENDHIRAN SCIENTIFIC FACTS-2

                                           ENDHIRAN SCIENTIFIC FACTS-2


Hello World,

 My posting about “Endhiran scientific facts” received a warm welcome. So this given me lot of confidence for writing “Endhiran scientific facts 2”.

Get Ready folks.

                                            


1.                        In chitti introduction scene, Chitti says “Hello world”. Why chitti is using this words?

For every assembly programming language the first output of the program will be “Hello World”. So if you are watching chitti as a programmed machine you will get so many logics behind it.

2.                        Chitti is only a robot but how he does the magic of taking control over the remote of raghav in the music set scene.

Hi all remotes are operating in infrared. So Chitti taken the control of music set using his infrared port, it is not possible for any other remote to use.

It is just like transferring the data to other phone using infra red. At a time only one port can be accessed.

3.                        Why Bohra is giving another life to chitti using same Vaseegaran mask?

It is just clear from the movie Bohra wants to ruin the name of the vaseegaran .So he is using the same mask what vaseegaran used with the help of karunas and sandanam.

4.                        How chitti jumps from the water in to the bridge in the train scene. Because bridge is not made of magnetic objects .It is only made up of stone?

I too not clear about this logic. If anyone knowing please post it in comments.

                                                

5.                        What is the qualification of Dr.Vassegaran mentioned during robotics conference?

He done Post doctorate in robotics in Stanford University (No 1 research institute in World located in US)
Also he done PhD in Robotics in Carnegie Melon University (No 1 robotics institute in World located in US).

6.                        When Karunas and santhanam are drinking, Chitti will be displaying a message peripheral trouble shooting. What is that?

It is just an external devices connected with the chitti. Like Scanner, printers and other external sources. He is just troubleshooting all before the AIRD approval.
   
7.                        In Robotic conference one person asking whether 24157817 is a Fibonacci number? What is that?

Fibonacci numbers are 0 and 1, and each subsequent number is the sum of the previous two. So after 0 and 1 the next Fibonacci is 1,2,3,5 and so on.

But chitti will be saying it is 22nd Fibonacci. But it is wrong. It is actually 37th Fibonacci number. If anyone knowing why they are saying like this please put it in comments.

8.                        When calculating the largest prime number chitti is saying it will take some years for us to calculate? Is that true?

Yes. The largest prime number is M44. The previous one M43 discovered on November 2005. But the next one M44 discovered on September 2006. So this takes 10 months. So from calculating from 1 it will take some years.

9.                        Which processor is having the capacity of 1 zeta byte memory and 1 terahz speed?

The processor name is Pentium ultra core millennia v2. This was explained to bohra by chitti in robotic conference scene. Film unit take ultimate care for showing this more advanced than terminator.


                                          

10.                    How chitti is running so fast without vibration and not making sound in train scene?

The motor chitti is using (HFPL 450s motor from hirata Japan) has having a harmonic connection gear unit.

The main functions of harmonic connection gear units are zero backlash, high positional accuracy, low vibration and a compact design.  

11.                    When bohra asking whether you will save Einstein or Child, chitti is replying hypothetical question why?

Einstein is no more. But Bohra is taking it to be true for the purpose of argument. So chitti replying as Hypothetical question.

12.                    What is the name of the robot which giving flower to Vaseegaran in introduction
Scene?

The robot name is R2. Which is the name of the robots in Star War movie also. Shankar may be used it to attract children. But according to santhanam the robot name is Aluminia kundan.

                                 

13.                    What about the dialogues in the movie?

They are really excellent. When chitti finds vaseegaran in robot group he will say “he is the Trojan”. Trojan is a virus which will look like the original one but will hack the system. So that dialogue is really nice.

14.                    Any special director touch in the movie?

Yes. When glasses are broken due to the over sound, with the window glasses also one of the man spectacles also will broken. I enjoyed it.

15.                    We are not able to understand what is tortoise paradox convergence series with
Achilles? This will be asked in the AIRD approval.

Achilles is in a footrace with the tortoise. Achilles allows the tortoise a head start of 100 meters. If we suppose that each racer starts running at some constant speed (one very fast and one very slow), then after some finite time, Achilles will have run 100 meters, bringing him to the tortoise's starting point. During this time, the tortoise has run a much shorter distance, say, and 10 meters. It will then take Achilles some further time to run that distance, by which time the tortoise will have advanced farther; and then more time still to reach this third point, while the tortoise moves ahead. Thus, whenever Achilles reaches somewhere the tortoise has been, he still has farther to go. Therefore, because there are an infinite number of points Achilles must reach where the tortoise has already been, he can never overtake the tortoise.
   So this is what the explanation given by chitti in AIRD approval.

16.                    Is there anyway vaseegaran will prevent chitti from seeing aishwariya rai(SMS message just for comedy)
Yes. He needs to include the following program line.
if (figure==sana)

(
goto next_figure:
)

With this I am signing off.

Dot.

A.Arulselvan.  

Monday, November 22, 2010

ரஜினி ஒரு அஞ்சா நெஞ்சன்

ரஜினி ஒரு அஞ்சா நெஞ்சன்:

                                                 
                                             
திருக்குறள் :

சொலல்வல்லன் சோர்விலன்  அஞ்சான்  அவனை 
இகல்வெல்லல்   யார்க்கும்  அரிது.

 விளக்கம் :

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

இந்த  திருக்குறள்  யாருக்கு  பொருந்துகிறதோ  இல்லையோ ? நம்  தலைவருக்கு  சரியாக  பொருந்தும் . அது ஏன் என்பது  இந்த  பதிவின்  முடிவில்  தெரியும் .

காட்சி 1:

அழகிரி  திருமணம் :


                                               

நம்  தலைவர்  அவர்கள்  அழகிரி  வீடு  திருமணத்தில்  கூறியதாவது :

கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும்.

இந்த  ஒரு  வரியில்  தலைவர்  அவர்கள்  தமிழ்நாட்டில்  இருக்கும்  பிரச்சனையையும், கலைஞருக்குப்பின்  நிகழபோகும்  பயங்கரத்தையும்  கூறி  விட்டார் . யாருக்கு  இந்த  தைரியம்  வரும் .பிரச்சனைக்குரிய  அனைவரையும்  மேடையில்  வைத்து  கொண்டு  யாரு  மனதும்  புண்  படாத வகையில்  விஷயத்தை   சொல்லிய  நம்  தலைவரின்  தெளிந்த  என்ணத்தை என்னென்பது? பத்திரிகைகள் கூற தயங்கும்அழகிரி, ஸ்டாலின் சண்டையை அவர்களை வைத்து கொண்டே மேடையில் கூறி விட்டார்.தலைவர் யாரையும் கண்டு அஞ்சுவது இல்லை என்பது இதன் மூலம் தெரியும்.


காட்சி  2 :
  
பாச  தலைவனுக்கு  பாராட்டு  விழா :

                                                   

இந்த  நிகழ்ச்சி  உங்கள்  அனைவருக்கும்  தெரிந்து  இருக்கும் . அஜித்  குமார்  அன்று  பேசிய  சில  தைரியமான  கருத்துகளுக்கு  தலைவர்  அவர்கள்  முதல்வர்  அருகிலேயே  எழுந்து  கை  தட்டினார் . அது  மட்டும்  இல்லாமல்  அஜித்தின்  பேச்சிற்கு   ஆதரவு  கூறினார் . அவர்  மட்டும்  அந்த மாதிரி  செய்ய  வில்லை  எனில்  அஜித்  என்ற  ஒரு  நடிகன்  தமிழ்நாட்டில்  காணாமல்  போய்  இருப்பான் என்பது  நிஜம் .

அதுமட்டுமில்லாமல்  அன்றைய  விழாவில்  தலைவர்  பேசியதாவது :

அரசு  ஒதுக்கிய இந்த  நிலம்  ஏழை  தொழிலளர்களுக்கு  போய்  சேர  வேண்டும் . இதை  யாரும்  ஏமாற்ற  கூடாது. “உண்மையை பேசுறதுல, சத்தியம் பேசுறதுல நான் யாருக்கும் எவனுக்கும் பயப்படமாட்டேன். என் மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்".

ஆனால் கலைஞர்  தொலைக்காட்சியோ   அஜித்  பேசியதை  மட்டும்  இல்லாமல் , ரஜினி  மேற்கொண்டு  கூறிய  வார்த்தைகளையும்  எடிட்  செய்து  ஒளிபரப்பியது .

இது  யாருடைய  வேண்டுகோளுக்காக  செய்யப்பட்டது ? அல்லது  இந்த  நில  ஒதுக்கீடே   கொள்ளை  அடிக்கத்தானா ? என்பது  ஆண்டவனுக்குக்தான்  வெளிச்சம் .

ஆனாலும்  எதை  பற்றியும்  கவலை  படாமல்  ரஜினி  தைரியமாக  பேசியது  நிச்சயம்  ஏழை  தொழிலாளர்களுக்கு   ஒரு  நம்பிக்கை  கொடுத்து  இருக்கும் .

காட்சி  3:

இலங்கை  தமிழர்க்காக  திரை  உலக  உண்ணாவிரதம் :

                                           
                                 

தலைவர்  பேசியதாவது :

‘30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் போராட்டத்தை, சகல படை பலம் வசதிகளும் கொண்ட உன்னால ஒழிக்க முடியலேன்னா... என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...?’

இதற்கு  முன்பு  சத்தியமாக  எந்த  ஒருவரும்  இப்படி  ஒரு   நாட்டைப்  பார்த்து  ஆம்பளைங்களா நீங்க...?’ என்று  கேள்வி  கேட்டதாக  தெரிய  வில்லை . என்ன  துணிவு?  என்ன  வீரம் ? தலைவா  இந்த   ஒரு  வார்த்தை  போதும்! நீ  ஈழ  தமிழர்கள்  மேல்  வைத்திருக்கும்  பாசம்  என்ன  என்பதை  இது   விளக்கி  விடும் . நீ  எந்த ஒரு  தனி  மனிதனையோ , இல்லை  நாட்டையோ  கண்டு  பயந்தவன்  அல்ல  என்பதும்  அனைவருக்கும்  தெரிந்து  விடும் .

இந்த  பேச்சை  கேட்டப்பின்   ஆட்சியாளர்களுக்கு  இந்த  தைரியம் எப்போது  வரும்  என்று  கேட்க  தோணிற்று?
நீ  எப்போது  ஆட்சியாளனாக  வருகிறாயோ  அப்போது  தான் வரும்   என்று  என்  மனம்  சொல்லிற்று .

காட்சி  4:

சிவாஜி  கணேசன்  சிலை  திறப்பு  விழா: 

                                                           

தலைவர்  பேசியதாவது :

"விஜயகாந்த்  கலக்கி  இருக்கீங்க  . நல்ல ஓட்டு வாங்கி இருக்கீங்க . உங்களுக்கு  என்னுடைய  வாழ்த்துக்கள்"  என்று  மேடையில்  முதல்வரை  பக்கத்தில்  வைத்துக் கொண்டு  பாராட்ட  யாருக்கு  துணிவு  வரும் . நம்  தலைவனுக்குக்தான் வரும்.  

தலைவர்  இது  போன்று  பல  மேடையில் தான் கூற  வந்ததை  யாருக்கும்  அஞ்சாமல்  கூறியதை  நாம்  பல  முறை  பார்த்து  இருக்கிறோம் .

இப்போது  மீண்டும்  ஒரு  முறை  மேலே  உள்ள  திருக்குறளை  படியுங்கள் .

உங்களுக்கு  இப்போது  புரியும்  .யார்  அஞ்சா  நெஞ்சன்  என்று ?

இப்படிக்கு ,

அ.அருள்செல்வன் .

Monday, November 15, 2010

மைனா- திரை விமர்சனம்


தலைவரின் பார்வையில் மைனா:                                      

மைனா  ஒரு  திராவிடர்களின்  திரைப்படம்  என்று  தலைவர்  சென்ற  வாரம் கூறி  இருந்தார் . தலைவர்  சொன்னதில் இருந்து  இந்த   படத்தை  எப்படியாவது  பார்க்க  வேண்டும்  என்று  முடிவு  செய்தேன்
ஏற்கனவே    கமல்ஹாசன்  இந்த  திரைபடத்தை  நல்ல  படம்  என்று  கூறி இருந்தாலும்  பிரபு  சாலமனின்  முந்தைய  படமான  லாடம்   படத்தை   பார்த்து  சூடு  போட்டு  கொண்டமையால்  அமைதி  காத்தேன் .

ஆனால்  தலைவர்  அவர்களே  இந்த  படத்தில்  நான்  நடிக்கவில்லையேஎன்று  வருந்திய  பிறகு  இந்த  படத்தை  நான்  பார்க்கவில்லை  என்றால் தலைவன்  நடித்த  படத்தை  பார்க்காத   உணர்வு  வந்து  விடும்  என்பதால்  மைனாவை  அன்று  மாலை  பார்த்தேன்.பிரமித்தேன்.
கதையின்  தொடக்கம்  சிறுது  மெதுவாகவும் , ஏற்கனவே  பார்த்த  கட்சிகளாகவும்  நகர்ந்ததால்  சிறுது  நெளிந்தேன்ஆனால் நாயகன்  சிறையில்  இருந்து  தப்பிக்கும்  அந்த  காட்சியில்  இருந்து  படம்  ஜெட்  வேகத்தில்  நகர்கிறது . எதிர்பாராத பல திருப்பங்கள் . படத்தின்  கதையை  நான்  கூற  விரும்பவில்லை . நீங்கள்  அனைவரும்  சென்று  இந்த  மைனாவுடன்  பயனிகக  விரும்புகிறேன் .
எங்கே  இருந்துயா  புடுச்சீங்க? என்று  கேட்கின்ற  அளவுக்கு  ஒவ்வொரு   கதாபாத்திரமும்  நடிப்பில்  பின்னி எடுக்கிறார்கள் . படத்தின்  பெயர்  போடும்  பொழுது  நான்  யாருடைய  பையரையும் பார்க்கவில்லை . ஆனால்  படம்  முடிந்து  வெளியே  வந்தபின்  அனைவரின்  பெயரையும் தெரிந்து  கொள்ள  ஆசை  பட்டேன்.குறிப்பாக  அந்த போலீஸ் அதிகாரியின்  நடிப்பு ! இத்தனை  நாளாக  எங்க  இருந்தீங்க ? என்று கேள்வி எழுகிறது. அதேபோல்  தம்பி  ராமையாவின்  காமெடி  படத்தின் மற்றுமொரு சிறப்பு அம்சம்.குறிப்பாக ரிங் டோன் காமெடியில் திரை அரங்கு  அதிர்கிறது.ரிங் டோன் மூலமாகவே அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்று புரிய வாய்த்த இயக்கம் அருமை.  சுகுமார்ஒளிபதிவாளர்  நம்  அனைவரையும்  மிரட்டி  இருக்கிறார் . குறிப்பாக  பஸ்  கவிழும்  அந்த  காட்சி  மிக  சிறப்பாக  எடுக்கப்பட்டு  இருக்கிறது . இமான்  அவர்களின்  இசை  படத்திற்கு  பெரிய  பலம். பாடல்களும் , பின்னணி  இசையும்  அருமை . இனிமேல்  தயவு  செய்து  சுந்தர் .சி படத்திற்கு  எல்லாம் இசை அமைக்காதீர்.
                                      
                                       

இந்த  படம்  பார்ப்பதற்கு  முன்பு  படத்தின்  கதாநாயகி  மீது  எனக்கு  மதிப்பு இல்லை .ஏனென்றால்  அவருடைய  சிந்து  சமவெளி படத்தை  பார்த்து  மனம்  உடைந்தேன் .தம்பி  ராமையாவின் பெயர்  கூட இந்த  படம்  பார்த்த  பின்புதான்  தெரியும் . இமானுக்கும் இசைக்கும்  சம்பந்தமே  இல்லை  என்றுகூட  நினைத்தேன்
இவர்கள் எல்லாரையும்  ஒரே  படத்தில்  செல்வாக்கு  உள்ளவராக  மாற்றி  தன்னையும்  மிக  பெரிய  இயக்குனராக  நிலைநிறுத்தி  கொண்ட  பிரபு  சாலமனின்  உழைப்பு  அபாரம .
பிரபு  சாலமன்  இயக்கத்தால்  மைனா , பஞ்சவர்ணகிளிபோல்  ஜொலிக்கிறது .
கோபம் , நன்றி , துரோகம் , காதல் , பாசம்  என  அனைத்து திராவிட உணர்ச்சிகளையும்  ஒரு  சேர  காண்பித்து  இது  நம்ம  படம்டா என்று  தமிழனை  தலைநிமிர  செய்துள்ளது .
இதனால்தான்   ரஜினி  இந்த  படத்தை   திராவிட  படம்  என்று  கூறினார் .இதை விட  இந்த  படத்தை  பற்றி  சிறப்பாக ஒரே வார்த்தையில்  விமர்சனம்  எழுத  முடியாது . ஒரு  வார்த்தை  சொன்னாலும்  திருவாசகம்  சொன்னார் .


படம்  முடிந்து  வெளிவரும்போது  இந்த  படத்தில்  தலைவர்  நடிக்க  ஆசைப்பட்டார்.  எந்த கதாபாத்திரத்தில்  நடித்து  இருந்தால்  நன்றாக  இருக்கும்  என்று  யோசித்தேன்?  ஒருமுறை  போலீஸ்  வேடத்தில்  அவரை  நினைத்து  பார்த்தேன் . படத்துக்கு  மறுபடியும்  நாளை  போக  முன்பதிவு  செய்தேன் .

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...